Latest Updates
-
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது..
105 வருட பழைய டிராக்டரை 1.25 கோடிக்கு வாங்கிய அதிசயம்... அந்த அதிசய டிராக்டரின் புகைப்படம் உள்ளே...
வாழ்க்கையில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதிர்ஷ்டம் உள்ள ஒருவர் இரும்பை தொட்டால் கூட அது தங்கமாக மாறும் என்று கூறுவார்கள். தற்போது ஒரு பழைய இரும்பின் மூலம் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்து அந்த கூற்று உண்மையாக மாறியுள்ளது.
ஜலந்தரில் உள்ள பகத் சிங் சௌக் அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தின் முன் பல ஆண்டுகளாக யாரும் கண்டுகொள்ளாத தூசி படிந்து கொண்டிருந்த ஒரு பழைய டிராக்டர் திடீரென அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்ளூர் மக்கள் குப்பை என்று கருதி ஒதுக்கிய 105 ஆண்டுகள் பழமையான விண்டேஜ் டிராக்டர் இப்போது ரூ.1.25 கோடிக்கு விற்கப்பட்டு கலிபோர்னியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு வந்துள்ளது. இதைத்தான் அதிர்ஷ்டம் என்பார்கள்.

இந்த டிராக்டரில் என்ன ஸ்பெஷல்?
இந்த டிராக்டர் 1921 ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட லென்ஸ் புல்டாக் HL-12 மாடல் டிராக்டராகும். விண்டேஜ் வாகன உலகில், இந்த டிராக்டருக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இது சிங்கிள் சிலிண்டர் ஹாட்-பல்ப் எஞ்சினில் இயங்குகிறது. இதை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு இயந்திரத்தை சூடாக்க வேண்டியிருந்தது. ஒரு முறை சூடாக்கப்பட்டு விட்டால், குறைந்த வேகத்திலும் கூட இது வலுவான சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய வாகனமாக இருந்தது. அந்த காலகட்டத்தில், இது வயல்களை உழுதல், தண்ணீர் பம்ப் செய்தல் மற்றும் ஆலைகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.
எப்படி பிரபலமானது?
புனீத் வதேரா என்ற உள்ளூர்வாசி கூறுகையில், "டிராக்டரின் உரிமையாளர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். நாங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக அது அங்கே கிடப்பதைப் பார்த்து வளர்ந்தவர்கள். என் பக்கத்து வீட்டுக்காரர், உணவக உரிமையாளர், சிறுவயதில் அந்த டிராக்டரில் ஏறி விளையாடினார். இரண்டரை மாதங்களுக்கு முன்பு ஒரு இன்ஸ்டாகிராமர் இந்த டிராக்டரை வீடியோ எடுத்தபோது இதைப்பற்றி பரபரப்பாக பேசத்தொடங்கியது. அதன் பிறகு, எங்களுக்கும் கூட ஏராளமான அழைப்புகள் வந்தன. இந்த டிராக்டர் முதலில் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானது, ஆனால் பஞ்சாப் விவசாயிகளால் வெல்லப்பட்டது என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த இயந்திரம் யாருடைய மூதாதையருக்குச் சொந்தமானது என்ற விவரம் இப்போது தெரியவில்லை. எனவே, அதன் முழுமையான தோற்றம் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது." என்று கூறினார்.
உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
புனீத் வதேராவின் கூற்றுப்படி, இந்த டிராக்டர் பழங்கால உலகின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பது யாருக்கும் தெரியாது. முதலில், மும்பையைச் சேர்ந்த ஒரு டிராக்டர் நிறுவனம் ரூ.2 லட்சம் கொடுத்து இந்த டிராக்டரை வாங்க முன்வந்தது, ஆனால் அந்த ஆஃபர் நிராகரிக்கப்பட்டது. பின்னர், அந்த டிராக்டர் ரூ.28 லட்சம் வரை ஏலம் விடப்பட்டது, ஆனால் அதன் உரிமையாளர்கள் அதையும் ஏற்கவில்லை. இறுதியாக, ஒரு வெளிநாட்டு நிறுவனம், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து, அதை ரூ.1.25 கோடிக்கு வாங்கியது.
பிப்ரவரி 18 ஆம் தேதி காலை, கிரேன் மூலம் டிராக்டர் தூக்கிச் செல்லப்பட்டு, லாரி மூலம் மும்பை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு அனுப்பப்பட்டது என்று வதேரா தெரிவித்தார். இருப்பினும், இந்த டிராக்டரை வாங்கியவர் யார் என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.
இந்த இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே வசிக்கும் அமன் குமார், சிறு வயதிலிருந்தே இந்த டிராக்டர் மீது ஏறி விளையாடி வருவதாகக் கூறினார். தான் சிறுவயதில் விளையாடிய வாகனம் ஒரு நாள் வெளிநாட்டு அருங்காட்சியகத்தின் அலங்காரமாக மாறும் என்று அவர் கனவில் கூட நினைத்ததில்லை என்று கூறினார். மேலும் ஜலந்தரின் இந்த பாரம்பரிய மாதிரி இப்போது சர்வதேச அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளது உள்ளூர் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்று அவர் கூறினார்.
ஒரு காலத்தில் குப்பையாகக் கருதப்பட்ட இந்த டிராக்டர் இப்போது வரலாற்றின் மதிப்புமிக்க படைப்பாக மாறியுள்ளது. பழைய விஷயங்களில் மறைந்திருக்கும் மதிப்பைப் புரிந்துகொள்ள சில சமயங்களில் நீண்ட காலம் தேவைப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.



Click it and Unblock the Notifications











