Just In
- 12 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 13 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 23 hrs ago
மட்டன் தால்சா
- 23 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- Movies
உலகத்தர இயக்குநருடன் இணைகிறாரா உலகநாயகன்?... அடுத்த ஆண்டில் துவங்கும் சூட்டிங்!
- News
வெறுப்பு என்னும் நெருப்பு குருடாக்குகிறது! முஸ்லிம் என நினைத்து இந்து கொலை.. ராகுல் காந்தி கண்டனம்
- Sports
இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்
- Finance
இலங்கையை போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை வரலாம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மகரத்தில் சூரியனுக்கு மிக அருகில் சனி செல்வதால் இந்த ராசிக்காரங்களாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கணும்...
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் இவர் பல சோதனைகளைக் கொடுக்கக்கூடியவர். இத்தகைய சனி பகவான் தற்போது மகர ராசியில் பயணித்து வருகிறார். ஒருவரது ராசியில் சனி பகவான் பலமாக இருந்தால், அந்நபரை அவர் ஆட்சி செய்ய வைப்பார், வேலையில் உயர் பதவி, பண வரவு, வியாபாரத்தில் நல்ல லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் வலிமையாக்குவார்.
இப்படிப்பட்ட சனி பகவான் 2022 ஜனவரி 18 ஆம் தேதி 04.18 மணிக்கு சூரியனுக்கு மிக அருகில் சென்று எரியும் நிலையில் இருப்பார். பின் 2022 ஜனவரி 22 ஆம் தேதி அன்று 22.50 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்புவார். இதன் விளைவாக, ஒட்டுமொத்தமாக அமைதியின்மை, தொழில் வாழ்க்கையில் குறைவான திருப்தி மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமை ஆகியவை ஏற்படலாம். மேலும் இந்த காலத்தில் வேலையில் ஒவ்வொரு நாளையும் நிர்வகிப்பது கடினமாக இருக்கலாம். சிலருக்கு வேலை மாற்றம் அல்லது தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம்.
இப்போது சூரியனுக்கு மிக அருகில் செல்லும் சனியால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலம் மன அழுத்தம் நிறைந்திருக்கும். உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். தொழில் வாழ்க்கையில், வழக்கத்தை விட அதிக வேலை அழுத்தம் இருக்கலாம். நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் பண இழப்பு மற்றும் பல தடைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றினால், அதை முன்னெடுத்துச் செல்வது நல்லதல்ல. இருக்கும் தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதும் அவசியம். பண ரீதியாக, நீங்கள் மிதமான வருமானத்தையே பெறுவீர்கள். நிதி விஷயம் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். மேலும், உங்கள் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம், மூட்டு வலி, கால் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. தொழில் ரீதியாக, நீங்கள் வேலையில் வளர்ச்சி, பதவி உயர்வு மற்றும் பிற நன்மைகள் போன்றவற்றின் அடிப்படையில் நல்ல முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் வணிக கூட்டாளிகளிடமிருந்தும் ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் புதிய தொழில் தொடங்குவதில் ஈடுபடலாம். நிதி ரீதியாக, நல்ல செழிப்பு மற்றும் அதிக சேமிப்பிற்கான வாய்ப்பை பெறுவீர்கள். புதிய முதலீட்டுத் திட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பது உங்களுக்கு நல்ல பண வருவாயை அளிக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் நண்பர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலத்தில் உங்களுக்கு நிறைய தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம். உங்களின் இலக்குகளை எளிதில் நிறைவேற்ற முடியாமல் போகலாம். உங்கள் வேலையில் கடுமையான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். அதிக வேலை அழுத்தம் உங்களுக்கு சுமையாக இருக்கலாம். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால், எதிர்பாராத விதத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தைப் பொறுத்தவரை எந்த முக்கிய முடிவையும் எடுப்பது நல்லதல்ல. நிதி ரீதியாக, பண இழப்புக்களை சந்திக்க நேரிடும். குடும்ப மோதல்கள் காரணமாக உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையே ஈகோ பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தோள்களில் வலி, கழுத்து வலி மற்றும் பலவற்றை எதிர்கொள்ளலாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் உறவுகளில் சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். தொழில் ரீதியாக, வேலை அழுத்தம் அதிகரித்து உங்கள் மேலதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடனும் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக, வேலையில் உங்கள் செயல்திறன் குறைந்து பாதிக்கப்படலாம். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால், மிதமான வேகத்தில் லாபம் ஈட்டுவீர்கள். நிதி ரீதியாக, செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நீங்கள் வசதியாக இருக்க முடியாது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கை துணையுடன் தொடர்புகொள்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் புரிதல் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டுகளில் கடுமையான வலி, நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவற்றுக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்த நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். உங்கள் எதிரிகளை சாமர்த்தியமாக சமாளிக்கும் நிலையில் இருப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கும், உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு நல்ல நிலையில் இருப்பதைக் காணலாம். வியாபாரத்தில் இருந்தால், உங்கள் அறிவைக் கொண்டு நீங்கள் சிறந்து விளங்கும் நிலையில் இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது. நிதி ரீதியாக, பணத்தைக் குவிப்பதற்கும் நன்றாகச் சேமிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. தனிப்பட்ட முறையில், உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே நல்ல புரிதலும் தொடர்பும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களைத் தொந்தரவு செய்யக்கூடிய சவாலான பணிகளை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் இருந்தால், நீங்கள் மிதமான லாபத்தைப் பெறலாம் மற்றும் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புகளும் இருக்கலாம். நிதி ரீதியாக, பணம் மற்றும் லாபம் சம்பாதிப்பதில் தாமதங்கள் ஏற்படக்கூடும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு மிதமானதாக இருக்கும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய கவலை உங்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும். ஈகோ பிரச்சனையால் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் பிரச்சனை ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கடுமையான குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் சுகபோகமின்மை, குடும்ப உறவுகளில் மன அழுத்தம் போன்றவை ஏற்படலாம். தொழில் ரீதியாக, அதிக மன அழுத்தம் ஏற்படும் என்பதால், உங்கள் வேலையில் அதிக திருப்தியை அடைய முடியாது. நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. நிதி ரீதியாக, உங்கள் குடும்பத்தால் அதிக செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவிட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் நிறைந்திருப்பீர்கள். கண் எரிச்சல் மற்றும் பிற அழற்சிக்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் தாமதங்களை எதிர்கொள்ளலாம். தொழில் ரீதியாக, தேவையற்ற வேலை இடமாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், பணியிடம் உற்சாகமாக இருக்காது. உங்கள் வேலையில் அதிக பலன்களைப் பெற முடியாது. நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், உங்கள் சூழ்நிலைகள் உற்சாகமாக இருக்காது. வியாபாரத்தில் மிதமான லாபத்தை சந்திப்பீர்கள். நிதி ரீதியாக, உங்கள் குடும்பத்தில் இருந்து ஏற்படும் அதிக செலவுகளின் சுமையை நீங்கள் சுமக்க வேண்டியிருக்கலாம், இதனால் சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தொடர்புகொள்வதில் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். இது உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நரம்பு பிரச்சனைகள் மற்றும் உடல் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, நீங்கள் செய்யும் வேலை மற்றும் நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற முடியாமல் போகலாம். நீங்கள் வணிகத்தில் இருந்தால், நீங்கள் மிதமான லாபத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம், சில சமயங்களில் நஷ்டம் ஏற்படலாம். நிதி ரீதியாக, குடும்பத்தில் இருக்கும் தேவையற்ற கடமைகளால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் உறவில் பிணைப்பு காணாமல் போனதாக உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தொண்டை தொடர்பான நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் சனி உள்ளார். இதனால் நீங்கள் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். தொழில் ரீதியாக, உங்கள் பணியிடத்தில் சவால்கள் எழும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் சாத்தியமாகும். நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், இந்த நேரம் உங்களுக்கு உற்சாகமாக இருக்காது. நிதி ரீதியாக, நீங்கள் லாபம் மற்றும் இழப்பு இரண்டையும் சம்பாதிப்பீர்கள். இந்த நேரத்தில் சீரான பண வரவு இருக்காது, நீங்கள் நன்மைகளைப் பெற முடிந்தாலும், அது தாமதமாகும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கை துணையுடன் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் காது தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். உங்கள் பற்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் தொழில், நிதி போன்றவற்றில் உங்கள் முன்னேற்றம் தொடர்பான தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, அதிக வேலை அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம் மற்றும் நீங்கள் கடினமாக உழைத்தாலும் உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், இந்த நேரத்தில், வியாபாரத்தில் திடீர் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, குறைவான எச்சரிக்கையால் பணத்தை இழக்கும் வாய்ப்புகளை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் பிரச்சனையை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கால்களில் கடுமையான வலியை சந்திக்கலாம். உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் யோகா மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உள்ளார். இதனால் இக்காலத்தில் ஆதாயம் மற்றும் செலவுகள் இரண்டையும் பெற வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக, வேலை செய்யும் இடத்தில் சிரமப்படும் சூழ்நிலைகளை காணலாம். நீங்கள் நன்மைகளை பெற்றாலும், அதில் இருந்து உங்களால் திருப்தியைப் பெற முடியாமல் போகலாம். வணிகர்கள் நஷ்டத்தை அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில், உங்கள் வாழ்க்கை துணையுடன் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சளி மற்றும் வறட்டு இருமலால் பாதிக்கப்படலாம்.