Latest Updates
-
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு பணம் குவியும்..! -
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது.. -
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...!
சபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி?
சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இர
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர். மகரவிளக்கு மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனவரி 14ம் தேதியான இன்று இரவு நடை அடைக்கப்படுவதில்லை. விடிய விடிய திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும். பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு ஜனவரி15ஆம்தேதி அதிகாலை 2 மணிக்கு கடக்கிறார். இதனால் ஜனவரி 14 மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11 மணிக்கு அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 15 அதிகாலை 1.45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கும். 2.09 மணிக்கு இந்த பூஜை நடந்த பின்னர் 2.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
ஜனவரி 15 அதிகாலை 3.00 மணிக்கு பதிலாக 4.00 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் ஒரு மணிக்கு பின்னர் திருவாபரணங்கள் வந்து தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் படியேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகர சங்கராந்தி
சபரிமலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் பொன்னம்பல மேடு இருக்கிறது. பொன்னம்பல மேட்டில் கண்ணுக்குத் தெரியாத பொற்கோவிலில் சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும், இவர் தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் பேரொளியாய்த் தோன்றிப் பக்தர்களுக்குக் காட்சி தருவதாகவும் ஐயப்பப் பக்தர்கள் நம்புகின்றனர்.

பொன்னம்பல மேடு
புலிப்பால் தேடி காட்டிற்குள் வந்த மணிகண்டனைத் தேவர்கள், முனிவர்கள் போன்றோர் மலையுச்சிக்கு அழைத்துச் சென்று அமர வைத்த இடமே பொன்னம்பல மேடு என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமாக சொல்லப்படும் பரசுராமர், ஐயப்பன் கற்சிலை ஒன்றை வடிவமைத்து, வழிபாட்டுக்கான பூஜைகளைச் செய்து பூமிக்குள் புதைத்து வைத்ததாகவும், அதுவே பின்னர் பொன்னம்பல மேடு என்றானதாகவும் சில புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

தியானத்தில் ஐயப்பன்
பொன்னம்பல மேட்டில் கண்ணுக்குத் தெரியாத பொற்கோவில் ஒன்று இருப்பதாகவும், இங்கு சாஸ்தாவான ஐயப்பன் தியானத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே, இவ்விடத்திற்குப் பொன்னம்பல மேடு என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். பொன்னம்பல மேட்டில் கோவிலோ அல்லது சிலையோ இல்லை. சதுர வடிவிலான இரண்டடி உயர மேடை மட்டுமே உள்ளது.

ஐயப்பனுக்கு காந்தமலை
ஐயப்ப பக்தர்களில் பெரும்பான்மையானவர்கள், பொன்னம்பல மேட்டை காந்தமலை என்று அழைப்பதுண்டு. ஆனால், பொன்னம்பல மேடு வேறு, காந்தமலை வேறு என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். சிவபெருமானுக்குக் கயிலாய மலை, விஷ்ணுவுக்கு வைகுண்டம் என்றிருப்பது போல் ஐயப்பனுக்குக் ‘காந்தமலை' இருக்கிறது என்கின்றனர். அந்தக் காந்தமலையின் மறு தோற்றமாகக் கருதப்படுவதே பொன்னம்பல மேடு என்றும் சொல்லப்படுகிறது.

ஜோதி வடிவில் ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications











