For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நண்பர்கள் தினம் 2019: நட்புக்கு எடுத்துக்காட்டா இருக்கிற பெஸ்ட் திரைப்படங்கள் ஒரு பார்வை...

நட்புக்கு உதாரணமாக இருக்கின்ற சில சூப்பர் திரைப்படங்கள் பற்றித் தான் இந்த தொகுப்பில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

By Mahibala
|

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை தான் நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய விஷயம் இல்லை. அதனால் அவ்வப்போது திரைப்படங்கள் மற்ற விஷயங்களில் திரும்பத் திரும்ப பார்க்கும் போது, நம்முடைய நண்பர்கள் நமக்கு நினைவுக் வருகிறார்கள். நாம் செய்த விஷயங்கள் மனதுக்குள் வந்து போகும்.

காதலும் நட்பும் உண்மையாகவே திரைப்படங்களில் மற்ற உணர்ச்சிகளை விட எப்போதும் மேலோங்கியே இருப்பதற்குக் காரணம் அந்த உறவுகளின் உண்மைத்தன்மை தான். அதனால் தான் காதல் கதைகளும் நட்பு பற்றிய விஷயங்களும் காலகாலத்திற்கும் நம் மனதில் நச்சென்று அப்படியே பதிந்துவிடுகின்றன.

Friendship Day

அதில் நட்பைப் பற்றிய சூப்பரான நட்பைப் பற்றிய படங்களின் தொகுப்பைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மௌனம் பேசியதே (2002)

மௌனம் பேசியதே (2002)

சூர்யா, த்ரிஷா மற்றும் லைலா நடித்த படம் தான் மௌனம் பேசியதே. இதில் சூர்யா த்ரிஷாவைக் காதலிப்பார். லைலாவும் சூர்யாவும் நல்ல நண்பர்கள். ஆனால் லைலாவுக்கு காதல் ஏற்பட்ட போது, அந்த காதல் கண்டுக்கொள்ளப் படாது. அதனால் அவள் பிரிந்து சென்று விடுவாள். ஆனால் இருவருக்கும் இருந்த பரஸ்பர நட்பு அவர்களுக்கு மாறாமல் இருந்தது. அதனால் தான் இறுதியில் அவர்களுக்குள்ளான நட்பும் காதலும் புரிந்தது.

MOST READ: முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா?... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது?

பிரியாத வரம் வேண்டும்

பிரியாத வரம் வேண்டும்

பிரசாத் மற்றும் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் திரைப்படம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நட்புக்கு எடுத்துக்காட்டான படமாக நினைக்கப்பட்டது. ஆனால்

அதற்கு முந்தைய தலைமுறை நட்பு எப்படி காதலாக மாறும் என்ற கேள்வி ஏற்பட்டாலும் கூட, அந்த நட்பு என்ற செயலைக் கொஞ்சமும் மீறாமல் இருந்தார்கள் என்ற பெருமையும் ஆண், பெண் நட்புக்கான மரியாதையும் இந்த இடத்தில் ஏற்படுகிறது.

கண்ணெதிரே தோன்றினாள் (1998)

கண்ணெதிரே தோன்றினாள் (1998)

கரணுக்கும் பிரசாந்துக்கும் இருந்த நட்பின் நெருக்கம் மற்றும் உறவு காதலையே இரண்டாம்பட்சமாக இருக்க வைத்தது. அதுவே நட்பில் கரணுக்கு விக்னேஷ் செய்த துரோகத்தால் என்ன நடந்தது என்பதை விளக்கும் படம் தான் இந்த கண்ணெதிரே தோன்றினாள்.

இருவர் (1997)

இருவர் (1997)

இருவர் திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் 1997 இல் வெளிவந்தது. பொதுவாகவே மணிரத்னம் திரைப்படத்தில் நட்புக்கு என ஒரு உயர்ந்த மரியாதை உண்டு. அதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பு பற்றி இந்த படம் பேசியது.

சுந்தர பாண்டியன் (2012)

சுந்தர பாண்டியன் (2012)

இந்த தலைமுறையினரின் நட்புக்கான எடுத்துக்காட்டுக்கான நடிகராக யார் இருப்பார் என்று சொன்னால், உடனே விளையாட்டாகவோ சீரியஸாகவோ எல்லோருக்கும் ஞாபகம் வருவது சசிகுமார் தான்.

ப்ரியமான தோழி (2003)

ப்ரியமான தோழி (2003)

ஆண், பெண் நட்புக்கு மிகப்பெரிய வரவேற்பாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கின்ற திரைப்படம் தான் ப்ரியமான தோழி. மாதவனும் ஹிதேவியும் சிறுவயது முதல் நண்பர்கள். அதை நன்றாகப் புரிந்து கொண்டு, அவர்களுடைய நட்புக்கு மரியாதை கொடுக்கும் ஜோதிகா. இந்த திரைப்படம் இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய நாகரிகமான நட்புக்கு ஓர் உதாரணம்.

அண்ணாமலை (1992)

அண்ணாமலை (1992)

அண்ணாமலை தான் ரஜினிகாந்த்தின் ஸ்டைலுக்கு மிகப்பெரிய டிரேட்மார்க்காக விளங்கிய படம். அதில் ரஜினியின் ஏற்ற இறக்கத்துக்குக் காரணமே ரஜினியின் சிறுவயது முதல் நண்பனாக இருந்த சரத்பாபு தான். நெருங்கிய நண்பனின் நம்பிக்கை துரோகம், எப்படியெல்லாம் மாறும் என்பதற்கான எடுத்துக்காட்டாக அமையும்.

தளபதி (1991)

தளபதி (1991)

நட்பு என்ற வார்த்தையைச் சொன்னாலே எல்லோரும் எடுத்துக்காட்டாக சொல்வதும், எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருவது தளபதி படம் தான். இதில் ரஜினி - மம்முட்டியின் நட்பு தான் அந்த தலைமுறை முதல் இந்த தலைமுறை வரைக்கும் இருக்கிற பெஸ்ட் பிரண்ட்ஷிப் இதுதான். நட்புன்னா என்னனு தெரியுமா என்று கேட்கும் வசனங்கள் தான் இன்றும் நண்பர்களின் வேத வசனங்கள்.

MOST READ: இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா?...

மேலும் சில படங்கள்

மேலும் சில படங்கள்

மேலே குறிப்பிட்ட படங்கள் மட்டும் தான் நட்பைப் பற்றிய சிறந்த படங்கள் என்றும் அந்த பட்டியல் முடிந்துவிடும் என்றும் நினைக்கத் தேவையில்லை. ஏனென்றால் அது குறித்த இன்னும் நிறைய நட்பு பற்றிய படங்களை உங்களிடம் பட்டியலிட்டுக் கொடுக்கிறோம்.

உள்ளம் கேட்குமே (2005)

சென்னை - 28 (2007)

நாடோடிகள் (2009)

பிரண்ட்ஸ் (2001)

நண்பன் (2012)

நட்புக்காக

பாய்ஸ்

நட்பே துணை

நட்புன்னா என்னனு தெரியுமா

பிதாமகன்

இப்படி இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Friendship Day 2019: Best Tamil Friendship Movies

Friendship Day 2019: On April 27, 2011 the General Assembly of the United Nations declared July 30 as official International Friendship Day. However, India celebrates Friendship Day on the first Sunday of August.
Desktop Bottom Promotion