Just In
- 4 min ago
உங்க ராசிப்படி உங்களின் குணம் எந்த அவெஞ்சருடன் ஒத்துப்போகிறது தெரியுமா? இந்த 4 ராசிதான் பெஸ்ட்...!
- 34 min ago
உங்க நாக்கில் இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் அது இந்த குறைபாட்டோட அறிகுறியாம்... ஜாக்கிரதை...!
- 1 hr ago
சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் 17 முதல் இந்த ராசிக்காரங்கள் எச்சரிக்கையா இருக்கணும்..
- 2 hrs ago
கத்தரிக்காய் சாப்பிடுறவங்களா நீங்க? அப்ப உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது... அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
Don't Miss
- Movies
இந்த வாரம் விக்ரம் ஃபேன்சுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு...கொண்டாடும் ரசிகர்கள்
- News
கல்வி டிவி சிஇஓ ஆக ஆர்எஸ்எஸ் அபிமானியா? - கிளம்பிய சர்ச்சை.. முதல்வருக்கு மூத்த ஊடகவியலாளர் கடிதம்!
- Technology
ஏகபோகமான ஆபர்களுடன் Galaxy Z Fold 4, Flip 4 இந்திய விலைகளை அறிவித்த Samsung!
- Finance
மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்... ஊழியர்களை எச்சரித்த கூகுள்!
- Sports
"அடடே.. இது போதுமே.." விராட் கோலி ஃபார்ம் குறித்து கங்குலி கூறிய தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!
- Automobiles
இ-கார் உற்பத்திக்காக மஹிந்திரா தயார் செய்திருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
2022 ஆகஸ்ட் மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2022 ஆகஸ்ட் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் புதிய தொழில் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அவற்றை தயக்கமின்றி ஏற்றுக் கொள்வது நல்லது. இருந்தாலும், இம்மாதத்தில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள். நிதி ரீதியாக இம்மாதம் சிறந்ததாக இருக்கும். இம்மாதத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையோ அல்லது யாரிடமும் கடன் வாங்குவதையோ தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் தொழிலில் அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். தொழிலை மாற்ற நினைப்பவர்களுக்கு இது சிறந்த மாதம். மாணவர்கள் இம்மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதோடு, அவர்களின் செயல்திறனும் முன்னேறும். குடும்ப வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நீண்ட கால பிரச்சனை இம்மாதத்தில் தீர்வுக்கு வரும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நிதி ரீதியாக லாபம் அடைவதற்கான நல்ல வாய்ப்புக்கள் உள்ளன. கூடுதலாக, உங்கள் பணம் எங்காவது சிக்கியிருப்பது தெரிய வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மனச்சோர்வு மற்றும் மன உளைச்சல் போன்ற பிரச்சினைகளை சந்திக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இம்மாதத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறமாட்டார்கள். இருப்பினும், கடின உழைப்பைத் தொடர அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தில் எப்போதும் அன்பும் பாசமும் இருக்கும். உங்களின் மரியாதை அதிகரிக்கும். உறவுகள் மற்றும் திருமணத்தில் சிக்கல்களை சந்திப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவதால், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிதி நிலைமை இம்மாதத்தில் சிறப்பாக இருக்கும். செல்வத்தைக் குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் பணமும் தவறாக போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தில் நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதனால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த மாதம் தொழிலைப் பொறுத்தவரை நல்ல மாதமாக இருக்காது. உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் அன்பிலும், நல்லிணக்கத்திலும் வளர்ச்சி தெரியும். உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், சற்று மகிழ்ச்சியாக இருக்கும். நிதியைப் பொறுத்தவரை, வருமானம் மேம்படும். ஒரு திடமான நிதி நிலைமையைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இம்மாதத்தின் ஆரம்பத்தில் உங்கள் பணியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பீர்கள். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வீட்டில் நீடித்து வந்த வாக்குவாதம் இந்த மாதத்தில் தீர்க்கப்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையைப் பற்றி கூற வேண்டுமானால், தம்பதிகள் இருவருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் மற்றும் ஆணவங்கள் இருக்கலாம். நிதி நிலைமையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் உங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும். இம்மாதத்தில் ரகசிய மூலத்திலிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் எழலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த ஆகஸ்ட் மாதம் வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்பில் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மாணவர்கள் இம்மாதத்தில் வெற்றி பெறுவார்கள். இருப்பினும் நிறைய முயற்சி செய்ய வேண்டும். இம்மாதத்தில் வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில், உங்கள் பேச்சில் அதிக கவனம் செலுத்துங்கள். திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவுகளில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த மாதம் ஊக சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். ஆரோக்கியத்திலும் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பீர்கள். குறிப்பாக நாள்பட்ட நோய்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு சவாலான மாதமாக இருக்கும். கல்வியில் சிரமப்படும் மாணவர்கள் அல்லது கல்வியில் கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இம்மாதத்தில் குடும்பத்தில் சிறு பிரச்சனையால் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் யாரிடமும் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் என்று வரும்போது ஆகஸ்ட் மாதம் கடினமாக இருக்கும். எனவே சற்று கவனமாக இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த மாதத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும், வெளிநாட்டில் தொழில் நடத்துபவர்களுக்கும் நல்ல வெற்றி வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இது சாதகமான மாதமாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். திருமண வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் நன்றாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிதி வெற்றியை அடைவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்காது. சில ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இது மட்டுமின்றி, மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் தொழிலில் நல்ல அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். வேலை செய்பவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கும் இம்மாதத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் வரும். மாணவர்கள் பல சவால்களை சந்திப்பார்கள். குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் சச்சரவுகள் ஏற்படலாம். நிதி நிலைமையில் சிரமங்களை சந்திக்கலாம். பணத்தை சேமிக்க முயற்சிக்கும் போது நீங்கள் சவால்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, புதிய நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதோடு இம்மாதத்தில் மன அழுத்தத்தை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் வேலைகள் மோசமாக பாதிக்கப்படலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் விவாதத்தை தவிர்த்து, வேலையில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் இம்மாதத்தில் வெற்றிகரமான முடிவுகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் அமையும். நிதி ரீதியாக, பணம் சம்பாதிக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க இது சிறந்த மாதம். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஆகஸ்ட் மாதத்தில் தொழிலைப் பொறுத்தவரை பலவிதமான பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்களின் முயற்சிக்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். இம்மாதத்தில் மறைமுகமான மூலத்தில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு ஆரோக்கிய பிரச்சனைகள் கூட சிரமங்களை ஏற்படுத்தும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! இம்மாதத்தில் தொழில் வாழ்க்கையில் வெற்றியை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் கலவையான முடிவுகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இம்மாதத்தில் ரகசியமான மூலத்தில் இருந்து பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. அதே வேளையில் தேவையில்லாத செலவும் அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல்நலம் சிறப்பாக இருக்க உணவில் அதிகம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.