For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எபோலா வைரஸ் தாக்கி 1700 பேர் மரணம்... உலக சுகாதார நிறுவனம் எமர்ஜென்சி அறிவிப்பு... எச்சரிக்கை

By Mahibala
|

காங்கோவில் எபோலா வெடித்தது என்று சர்வதேச சுகாதார அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட 1700 பேர் இறந்த நிலையில் எபோலா காங்கோவின் மிக மோசமான மருத்துவ பேரிடராகத் தற்போது இதை அறிவித்திருக்கிறது.

Ebola Outbreak in Congo Is Declared a Global Health Emergency

எபோலா கட்டுப்பாட்டை மீறுவதைத் தடுக்க பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருக்கிறது. மிகவும் கொடிய தொற்று வைரஸை கிட்டத்தட்ட வடகிழக்கு காங்கோவில் உள்ள இரண்டு மாகாணங்களுடன் அடங்கும்படியும் மட்டுப்படுத்தியுள்ளது. இதற்குமுன் மூன்று முறை அவசரநிலையை அறிவிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பு (WHO) புதன்கிழமை காங்கோவின் எபோலா வைரஸ் மிகப்பெரிய பேரிடராக இருப்பதாக சர்வதேச சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இந்த வைரஸ் ஒரு பெரிய நகரத்திற்கும் அண்டை நாடுகளுக்கும் பரவுவதாக மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்ட பிறகு தான் உலக அளவில் மிக மிக அரிதாக அறிவிக்கப்படும் மருத்துவ எமர்ஜன்சி எச்சரிக்கை உலக சுகாதார நிறுவனத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

MOST READ: இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு தான் கிரகணம் பாதிக்குமாமே... எப்படி சமாளிக்கப்போறீங்க...

1700 பேர் பலி

1700 பேர் பலி

11 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பின்னர் மிகவும் பயனுள்ள தடுப்பூசி நல்ல பலனைத் தந்த போதிலும் இந்த சூழல்,வெடிப்பு வன்முறையால் சூழப்பட்ட ஒரு நிலையற்ற பிராந்தியத்தில் உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது. இது காங்கோவின் மிக மோசமானதாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 1,700 பேர் இறந்திருக்கிறார்கள்.

தடுப்பு மருந்துகள்

தடுப்பு மருந்துகள்

இதற்கான தடுப்பு மருந்துகள் கொடுப்பதற்கான பிரச்சாரங்கள் விடியோ போன்ற திரையிடல் என ஏராளமான இடங்களில் மாகாணங்கள் முழுக்க திரையிடப்பட்டன. ஏறக்குறைய 75 மில்லியன் திரையிடல்களுடன் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போடும் பிரச்சாரம் நடத்தி கிட்டதட்ட இந்த வைரஸ் முடிந்தவரை பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

MOST READ: இந்த காய் தெரியுமா? இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...

மறுப்பு

மறுப்பு

இதற்கு முன்பாக இந்த நிலை வந்த போது, WHO க்கு ஆலோசனை வழங்கும் சர்வதேச சுகாதார நிபுணர்களின் அவசர குழு மூன்று முறை அவசரநிலை அறிவிக்க மறுத்துவிட்டது. ஏனெனில் அது அவ்வளவு அரிதாகக் கொடுக்கப்படும் அவசர நிலை. மூன்றுமுறை மறுக்கப்பட்ட இந்த எமர்ஜென்சி இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போதகர் மரணம்

போதகர் மரணம்

சமீபத்தில் போதகர் ஒருவர் பல நகரங்களுக்கு பரப்புரைக்காக சென்று வருகிறபோது இந்த வைரஸ் பரவியதால், கோமாவிற்குச் சென்ற பின் இறந்து போயிருக்கிறார். அதன்பின் புதன்கிழமை, உகாண்டாவில் ஒரு சந்தையில் சிலர் இந்த வைரஸ் தொற்று பரவியதால், வாந்தியெடுத்த சம்பவங்களுக்குப் பிறகு காங்கோவில் ஒரு மீனவர் இறந்துவிட்டதாக WHO தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாகக் கூறி 590 பேருக்குத் தடுப்பூசி போடப்படலாம்.

எல்லை மூடல்கள் இல்லை

எல்லை மூடல்கள் இல்லை

இதற்கு முந்தைய சர்வதேச அவசர நிலைகள், 2004 ஆசிய SARS தொற்றுநோய்க்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பின் கீழ், 2013-2016 மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா தொற்றுநோய் 11,300 பேரைக் கொன்றிருக்கிறது. 2009 காய்ச்சல் தொற்று. 2014 இல் போலியோ மற்றும் பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்திய ஜிகா வைரஸ் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவுவது ஆகியவற்றின் போது அவசரநிலை அறிவிப்புகள் வந்தன.

MOST READ: உங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா? இத பாருங்க தெரியும்...

எச்சரிக்கை

எச்சரிக்கை

அருகிலுள்ள நாடுகளான ருவாண்டா, தென் சூடான், புருண்டி மற்றும் உகாண்டா ஆகியவை அதிக ஆபத்தில் உள்ளன என்றும், மத்திய ஆபிரிக்க குடியரசு, அங்கோலா, தான்சானியா, காங்கோ குடியரசு மற்றும் சாம்பியா ஆகியவை இரண்டாவது அடுக்கில் உள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் WHO இந்த விஷயம் கட்டுப்பாட்டை மீறுவதையும், அதிக உயிர்களையும் பணத்தையும் செலவழிப்பதைத் தடுக்க உடனடியாக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் தேவை என்று கூறியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

Ebola Outbreak in Congo Is Declared a Global Health Emergency

WHO declared Congo's Ebola outbreak an international health emergency Ebola has become Congo's worst ever medical calamity with almost 1700 deadWHO said billions of dollars were needed to prevent Ebola from blowing out of control
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more