இந்த 4ல உங்க பல்லு எந்த வகை...? இதப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஒருவரது பற்களின் வடிவத்திற்கும், அவரது குணாதிசயங்களுக்கும், மனதின் வெளிப்பாட்டுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி ஜீவா ஓடும் என்கிறீர்களா?

நாம் பர்சனாலிட்டி டெஸ்ட் கட்டுரைகள் பல தமிழ் போல்ட்ஸ்கை இணையத்தில் படித்திருக்கிறோம். அதே, போல இது ஒருவரது உடல் உருவ அமைப்பை வைத்து, அதாவது, மூக்கு வடிவம், கை விரல்கள் அமைப்பு, நாக்கு போன்றவற்றை வைத்து அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள், மன ரீதியான செயற்பாடு எப்படி இருக்கும் என கூறப்படுகிறது.

Do You Know? Even From The Shape of Teeth You Can Know Something Interesting About Your Personality

அந்த வகையில் ஒரு நபரின் பற்களின் வடிவதை வைத்து அவரது குணாதிசயங்கள் பற்றி அறியலாம் என்று கூறுகிறார்கள். இதில் மொத்தம் நான்கு வகைகள் இருக்கின்றன. சதுரம், வட்டம், முக்கோணம் மற்றும் செவ்வகம்.

இதில் நீங்கள் எந்த வகை, அந்த வகை சார்ந்துக் கூறப்படும் குணாதிசயங்கள் உங்களுடன் ஒத்துப் போகிறதா என்று நீங்களே படித்துப் பாருங்களேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சதுரம்!

சதுரம்!

உங்களுக்கு தங்கமான மனசுங்க!

மற்றவர்களைவிட தன்னை அதிகம் விரும்ப வேண்டும் என்று எண்ணம் இருக்கும். தங்கள் காதல், நேசம் போன்றவற்றை மற்றவர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்வார்கள். நல்ல மனம் கொண்டவர்கள். தங்களை ஒருவர் வெறுத்தாலும் கூட, அவர்களையும் நேசிக்கும் இதயம் கொண்டவர்கள். நிறைய பேர், நம்பகத்தன்மையுடன் இவர்களுடன் பேச, தொடர்புக் கொள்ள முனைவார்கள்.

வட்டம்!

வட்டம்!

அற்புதமான நெஞ்சம் கொண்டவர்!

எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும், அதை புன்னகை நிரம்பிய முகத்துடன் எதிர்கொள்ளும் தைரியம் மிக்கவர்கள். இவர்களது கனிந்த இதயம் மற்றும் ஆற்றல் மிக்க அர்பணிப்புக்காக நேசிப்பார்கள். தங்கள் முதுகுக்கு பின்னால் நின்று கெட்டதை பெசுவபவர்களுக்கு செவி சாய்க்காமல் , உங்கள் வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சிக்காக வாழுங்கள். ஏனெனில், அவர்கள் உங்கள் கவனத்திற்கும், அக்கறைக்கும் தகுதி அற்றவர்கள்.

முக்கோணம்!

முக்கோணம்!

தோள்கொடுக்கும் மனசுங்க உங்களது!

நெருக்கமாக பழகும் மக்களுக்கு மட்டுமே இவர்களது தனித்தன்மை மற்றும் வசீகரம் புரியும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், சிரித்த முகத்துடன் கையாள்வார்கள். கோபமா? மகிழ்ச்சியா? என்றால் நீங்கள் மகிழ்ச்சியை தேர்வு செய்வார்கள். பகைமையா? விட்டுக் கொடுத்து போவாமா? என்றால் நீங்கள் விட்டுக்கொடுத்து போவார்கள். சமூகத்தில் ஒருவருடன் ஒட்டி உறவாடுவார்கள். புகழுடன் பிரபலமாக திகழ்வார்கள்.

செவ்வகம்!

செவ்வகம்!

கனிவின் மறுவுருவம் நீங்க!

தூய மனதுடன் மற்றவர்களுக்கு உதவுவார்கள். தான் செய்த உதவிக்கு கைம்மாறு எதிர்ப் பார்க்க மாட்டார்கள். எதையும் நேர்மையாக சுயநலம் இன்றி செய்வார்கள். எதையும் மற்றவருடன் பகிர்ந்து கொள்வதால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்று நம்பும் மனம் கொண்டவர்கள். நண்பர்களாக இருந்தாலும், தெரியாதவர்களாக இருந்தாலும் தாராள மனதுடன் பழகும் நபர்கள். எவராக இருந்தாலும் பரஸ்பரமாக எளிதாக பேசி பழகிவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Know? Even From The Shape of Teeth You Can Know Something Interesting About Your Personality

Do You Know? Even From The Shape of Teeth You Can Know Something Interesting About Your Personality