For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாணவர்களுடன் உரையாட பார்ன் நடிகையை 3.6 லட்சம் கொடுத்து அழைத்த பல்கலைகழக வேந்தர்!

|

அமெரிக்காவின் மடிசன், விஸ்கான்சின் எனும் இடத்தில் அமைந்திருக்கும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜோ கோவ் முன்னாள் ஆபாசப்பட நடிகை ஒருவரை தனது மாணவர்களிடம் செக்ஸ் மற்றும் அடல்ட் மீடியா குறித்து உரையாற்ற ஐந்தாயிரம் டாலர்கள் கொடுத்து அழைத்து வந்திருக்கிறார். இதன் இந்திய மதிப்பு மூன்றரை இலட்சத்திற்கும் மேலானது ஆகும்.

நினா ஹார்ட்லி (59) எனும் அந்த முன்னாள் ஆபாசப்பட நடிகையை தனது அலுவலக நிதியில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்து அழைத்து வந்துள்ளார். இந்த உரையாடலின் போது மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை நினாவிடம் கேட்டு பதில் பெற்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனாவசியமானதல்ல...

அனாவசியமானதல்ல...

இங்கே ஐந்தாயிரம் டாலர்கள் செலவு செய்ததை குறித்து யாரும் வியக்கவோ, இதை அனாவசியமான செலவு என்றோ கருத தேவையில்லை. இப்படியான ஒரு கண்ணோட்டத்தை நாம் இதன் முன் கண்டிருக்கவோ, அவர்கள் வாழ்க்கை குறித்து அறிந்திருக்கவோ வாய்ப்பே இல்லை. எனவே, இந்த ஐந்தாயிரம் டாலர்கள் என்பது நினாவின் லெக்சருக்கு தகுந்த ஊதியம் தான் என்று தெரிவித்திருக்கிறார்.

தலைப்பு!

தலைப்பு!

நினா ஹார்ட்லி பங்கெடுத்துக் கொண்ட உரையாடல் நிகழ்வில் மொத்தம் 70 மாணவ, மாணவிகள் பங்கெடுத்துக் கண்டனர். இந்த உரையாடல் நிகழ்வு மொத்தம் ஒன்றரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது. இதில், "Fantasy vs. Reality: A critical view of adult media." என்ற தலைப்பில் நினா ஹார்ட்லி உரையாற்றினார்.

வகைகள்!

வகைகள்!

பார்ன் படங்களை விரும்புவது, விரும்பாமல் இருப்பது, அதன் மூலம் குழப்பம் அடைவது என அனைத்துமே இயல்பானவை. இதன் மூலம் பெரிதாக எந்த தாக்கமும் நேரிட போவதில்லை. முன்னாள் ஆபாசப் பட நடிகையான நினா ஹார்ட்லி, தற்சமயம் ஒரு செக்ஸ் எஜுகேட்டராகவும், செக்ஸ் பாஸிடிவ் ஃபெமினிஸ்ட்டாகவும் பணியாற்றி வருகிறார். இவர் நிறைய மாணவர்கள் முன்னிலையில் ஆன்லைன் பார்னோகிராபி, பாதுகாப்பான செக்ஸ், Informed Sex மற்றும் பலவன குறித்து பேசி வருகிறார்.

மாணவர் விருப்பம்!

மாணவர் விருப்பம்!

நினா ஹார்ட்லி உரையாடல் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, மாணவர்களின் பல்கலைகழக வேந்தர் ஜோ கோவ், அவரிடம் என்ன பேச வேண்டும் அல்லது அவர் எது குறித்து பேச வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டு, அதையே நினா ஹார்ட்லியை உரையாட செய்தார்.

அபாயம்!

அபாயம்!

இந்த தலைமுறை இளைஞர்களிடம் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களுக்கு பார்ன் குறித்த ஆர்வம் இருக்கிறதே தவிர, அதன்பால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அறிவதில்லை. மேலும், இதனால் அவர்கள் கற்பழிப்பு சம்பவங்கள், ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபடவும் முனைகிறார்கள்.

சர்ச்சை!

சர்ச்சை!

ஒருவர் கற்பழிக்க முனைகிறார் என்றால் அதற்கு முதல் காரணம், அவர் மனநிலை தெளிவாகவும், முழுமையாகவும், ஆரோக்கியமாகவும் இல்லை என்பதே ஆகும் என நினா கூறியிருந்தார்.

ஒரு ஆபாச நடிகையை அழைத்து வந்து மாணவர்களுடன் உரையாட வைத்த நிகழ்வு சர்ச்சை இல்லாமல் முடிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! சில மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wisconsin University Chancellor Invited Former Porn Actress to Speak With Students

Wisconsin University Chancellor Invited Former Porn Actress to Speak With Students and Paid 5000 Dollars!
Story first published: Thursday, November 8, 2018, 17:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more