For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல ஆயிர கோடி மதிப்புள்ள புதையலை புதைத்துவிட்டு இறந்த நிஸாம் - Indial's Mysteries

பல ஆயிர கோடி மதிப்புள்ள புதையலை புதைத்துவிட்டு இறந்த நிஸாம் - Indial's Mysteries

By Staff
|

மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர், ஏழாவது மற்றும் கடைசி ஐதராபாத் நிசாம். 1937ல் டைம் பத்திரிக்கை உலகின் முதல் பணக்காரர் என்று செய்தி வெளியிட்டது.மற்றும் இவரது முழுப்படத்தை தங்கள் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பதித்து இவரை கௌரவப் படுத்தியது.

மேலும், இங்கிலாந்து பரப்பளவு கொண்ட ஐதராபாத் நிலத்தை ஆண்ட மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் கடந்த 2008ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ஆல் டைம் டாப் 5 வெல்த்தியஸ்ட் பர்சன்ஸ் என்ற பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார். அதில், இவரது சொத்து மதிப்பு 210.8 பில்லியன் டாலர்கள் என்று கணக்கிட்டு கூறியிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலி!

காலி!

மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் நிசாமாக பதிவியேற்ற போது ஐதராபாத் நிசாமின் கஜானா காலியாக இருந்தது என்றும். இதற்கு காரணம் இவரது தந்தையின் ஆடம்பரமான வாழ்க்கை முறை தான் என்றும் கூறப்பட்டது. ஆனால், தனது 37 ஆண்டு கால ஆட்சியில் மீண்டும் தனது அரசின் கஜானாவை பன்மடங்கு அதிக செல்வாக்குடன் உயர்த்தினார் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர்.

Image Courtesy: wikipedia

செல்வம்!

செல்வம்!

வைரம், முத்து, தங்கம் என இவரது அரசு கஜானாவில் செல்வங்கள் குவிந்திருந்தன. இதன் காரணத்தால் உலகளவில் தனிமனித சொத்து மதிப்பில் இவர் மிகப்பெரிய வளர்ச்சியை, உயர்வை கண்டார். இதன் காரணத்தாலேயே இவர் 1937ல் டைம் பத்திரிக்கையில் உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தைப் பிடிக்க முடிந்தது.

Image Courtesy: wikipedia

ஆசாப் ஜாஹ் சாம்ராஜ்ஜியம்!

ஆசாப் ஜாஹ் சாம்ராஜ்ஜியம்!

மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் ஆசாப் ஜாஹ் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த ஏழாவது மற்றும் கடைசி நிஸாம். இவர் தன்னிடம் இருந்த நகைகள் மற்றும் புதையலுக்கு மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வந்தார். இறக்கும் வரை தெற்காசியாவின் பணக்கார நபர் என்ற புகழ் பெற்ற இருந்தார் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர்.

இவர் இறந்த பிறகு, இவரிடம் இருந்த நிறைய புதையல்கள் மற்றும் தங்க, வைர நகைகள் எங்கே இருக்கின்றன என்று அறியப்படாமல் போனது. இன்றும், இவர் வாழ்ந்து வந்த அரண்மனையின் அடியே, பூமியில் பல புதையல்கள் இருக்கலாம் என்று அரசல்புரசலாக கூறப்படுகிறது.

Image Courtesy: wikipedia

கிங் கோத்தி அரண்மனை!

கிங் கோத்தி அரண்மனை!

இந்த கிங் கோத்தி அரண்மனை (எ) நஸ்ரி பாக் அரண்மனை ஐதராபாத் தெலுங்கானாவில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த அரண்மனை கமல் கான் எனும் நபரால் கட்டி, நிஸாம் விரும்பினார் என்பதற்காக அவருக்கே விற்கப்பட்டதாகும்.

தான் நிஸாம் பதவி ஏற்ற பிறகும் கூட மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் சௌமஹல்லா அரண்மனைக்கு செல்லாமல் கிங் கோத்தி அரண்மனையில் தான் வசித்து வந்தார். தனது 13 வது வயதில் இருந்து மரணிக்கும் வரை இவர் இங்கு தான் வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகிறது.

Image Courtesy: wikipedia

கே.கே.!

கே.கே.!

கமல் கான் இந்த அரண்மனையை தனது சொந்த பயன்பாட்டுக்காக விருப்பட்டு கட்டினார். இந்த காரணத்தால், இந்த அரண்மனையின் ஜன்னல்கள், கதவுகள் போன்ற பல இடங்களில் கே.கே. என்ற சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

நிஸாம் எந்த அரண்மனையை வாங்கிய பிறகு, அந்த கே.கே என்ற எழுத்துகளுக்கு கிங் கோத்தி என அரண்மனைக்கு பெயர் வைத்து, இதன் சுருக்கமே கேகே என்று பொருள் மாற்றினார். கிங் கொத்தி என்பதற்கு King Mansion என்ற பொருளும் கூறப்படுகிறது.

Image Courtesy: southreport

பெரிய நூலகம்!

பெரிய நூலகம்!

இந்த அரண்மணையில் மூன்று முக்கிய கட்டிடங்கள் இருக்கின்றன. இதை இரண்டாக பிரித்து வைத்துள்ளனர். அரண்மனையின் ஒரு பகுதியில் நிஸாம் தனக்கென ஒரு பெரிய நூலகத்தை அமைத்து வைத்திருந்தார்.

கிழக்கு பகுதியில் இருந்த பாதி இடம் இப்போது அரசு மருத்துமனையாக யோங்கி வருகிறது. இந்த இடத்தை நிசாம் வாழ்ந்த போது விழாக்கை கொண்டாட பயன்படுத்தி வந்தார்.

சமூகத்திற்காக!

சமூகத்திற்காக!

மிர் ஒஸ்மான் அலி கான் ஐதராபாத் சமூகத்திற்காக பல சேவைகள் செய்துள்ளார். ஒஸ்மானியா பொது மருத்துவமனை, ஐதராபாத் நீதிமன்றம், மாநில சென்ட்ரல் நூலகம், டவுன் ஹால், ஜூப்ளி ஹால், அருங்காட்சியகம் என ஐதராபாத்தின் பல நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் நிஸாம் காலத்தில் கட்டிகொடுக்கப் பட்டது ஆகும்.

படிப்பு!

படிப்பு!

தனது காலத்தில், தன் செலவீனத்தில் 11% படிப்புக்காக செலவு செய்தார் நிசாம். இந்திய கல்வி நிறுவனங்களுக்கு பணவுதவிகள் செய்தார். விவசாய ஆய்வுகளுக்கும் உதவினார்.

தற்போது இந்தியாவில் ஒரு பெரிய பல்கலைக்கழகளுள் ஒன்றான ஒஸ்மானியா பல்கலைகழகம் இவர் தோற்றுவித்தது தான். பல பள்ளி, கல்லூரிகள் கட்டிக்கொடுத்து ஏழை மக்களுக்கு உதவினார் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர்.

சொத்துமதிப்பு!

சொத்துமதிப்பு!

எண்ணிலடங்காத தனது சொத்துக்களை பல நல்ல விஷயங்களுக்காகவும் செலவு செய்தார் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர்.

1937ல் டைம் பத்திரிக்கை இவரை உலகின் முதல் பணக்காரர் என்று செய்தி வெளியிட்ட போது, இவரது சொத்து மதிப்பு சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் ஆகும். அது இன்றைய மதிப்புக்கு 34.9 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.

இறந்த பிறகு...

இறந்த பிறகு...

மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர் 1967ல் மரணிக்கும் வரை தெற்காசியாவின் பணக்கார நபராக தான் வாழ்ந்து வந்தார். இறக்கும் போதுஇவரின் சொத்து மதிப்பு இரண்டு பில்லியன் டாலர்களில் இருந்து ஒரு பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு கணிசமாக குறைந்திருந்தது.

இவரது மறைவுக்கு பிறகு, இவரது சொத்தில் 97%த்தை அரசு கையகப்படுத்தி கொண்டது. இவரது மகள், பேத்திகளிடம் இருந்த விலைமதிப்பற்ற வைர, வைடூரிய நகைகள் போன்றவையும் அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆபரேஷன் போலோ!

ஆபரேஷன் போலோ!

சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து சாம்ராஜ்ஜியங்களும், குறுநில மன்னர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் கீழ் மொழிவாரியா மாநில பிரவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால், ஐதராபாத் நிசாம் மட்டும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதற்காக சர்தார் வல்லபாய் பட்டேன் ஆபரேஷன் போலே என்பதை உருவாக்கி, இந்திய இராணுவத்தின் உதவியுடன் ஐதராபாத்தையும் மொழிவாரியா மாநில பிரிவுக்கு கீழ் கொண்டு வந்தார்.

Image Courtesy: wikipedia

போர் கால உதவி!

போர் கால உதவி!

இந்தியா - சீனாவுக்கு மத்தியில் நடந்த போர் காலத்தின் போது அன்றைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரி ஐதராபாத் சென்று நிஸாமிடம் பொருளாதார உதவி கேட்டார். அப்போது நிசாம் 75 இலட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

மேலும், தேசிய பாதுகாப்புக்கு 5000 கிலோ தங்கத்தை நிதியுதவியாக அளித்தார் மிர் ஒஸ்மான் அலி கான் பகதூர். இந்தியாவில் இன்றுவரை ஓர் தனிநபர் வழங்கிய பெரிய நிதியுதவியாக இது திகழ்ந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Where is The Hidden Treasure of Mir Osman Ali Khan Bahadur The Last Nizam!

Once In 1937 Times Magazine Announced Mir Osman Ali Khan Bahadur Was The Ritchest Man in The World. And After the death last Nizam, Where the Treasure Gone?
Story first published: Tuesday, February 6, 2018, 12:48 [IST]
Desktop Bottom Promotion