பண்டையக் காலத்தில் கொலை செய்ய பயன்படுத்திய கொடூர கருவிகள் - டாப் 10

Posted By: Staff
Subscribe to Boldsky

மனிதன் வளரவளர அவனுள் மனித நேயம் குறைந்துவிட்டது. நீர் நிலை தனது என்றான் மனதில் ஈரம் வற்றிப் போனது. கடல் எல்லை வகுத்தான், வான் எல்லை வகுத்தான், எல்லை கோடுகளில் படைகளை குவித்தான்.

அனைத்திற்கும் மேல், உலகின் பொருளாதார நிலையை தங்கமும், எண்ணெயும் தான் தீர்மானிக்கிறது என்றதும் எந்தெந்த நாட்டில் எல்லாம் இந்த கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் அரஜாகம் நடப்பதாக இவனாக ஒரு பிம்பம் ஏற்படுத்தி தனது ஊடகங்களில் செய்தியாக்கி பெரிதுப்படுத்தி போரிட்டு அப்பாவி மக்களை கொன்று குவித்து கனிம வளங்களை சுரண்டி, திருட துவங்கினான். இவர்களின் கனிம வள கொள்ளையர்களின் தலைவன் பெயர் அமெரிக்கா.

இது ஒரு வகையிலான கொடுமை என பட்டியலிடப்பட்டால், மற்றொருபுறம் பண்டையக் காலத்தில் தன் பார்வையில் குற்றவாளி என பட்டவன், தன் எதிரியாக திகழ்ந்தவன், துரோகம் செய்தவன் என பலரது உயிரை பறிக்க என்றே பல கொடூரமான கருவிகளை உருவாக்கி துடிக்க, துடிக்க கொன்று குவித்துள்ளனர்.

அவற்றில் வரலாற்றில் மிகவும் கொடூரமான கொலை கருவிகள் என கருதப்பட்ட டாப் 10 கருவிகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ளாயிங்!

ஃப்ளாயிங்!

ஃப்ளாயிங் தண்டனையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட நபரின் தோலை உயிருடன் இருக்கும் போதே உரித்து எடுப்பார்கள். இந்த தண்டனை முறை பல கலாச்சாரம் மற்றும் இனங்களில் பின்பற்றப்பட்டுள்ளதை வரலாற்றில் அறிய முடிகிறது.

அசீரியா எனும் பண்டைய படை குழுவினர் தாங்கள் வென்ற எதிரின் தோலை தங்கள் நகரத்தின் சுவர்களில் தொங்கவிடுவார்கள். இது மக்கள் மனதிலும், தங்கள் எதிரி மனதிலும் அச்சத்தை குறையாமல் வைத்திருக்கும் என்று கருதினார்கள்.

Image Source: © aminoapps

பிரேசன் புல் (பித்தளை காளை)

பிரேசன் புல் (பித்தளை காளை)

பி.சி ஆறாம் நூற்றாண்டில் மிகவும் வலிமிகுந்த கொலை கருவியாக கருதப்பட்டது இந்த பித்தளை காளை கருவி. அந்த காலத்தில் இதை ஒரு அட்வான்ஸ்ட் டெக்னாலஜி என்று கருதினார்கள். அதாவது, குற்றம் செய்தவர்கள் அல்லது எதிரிகளை இந்த பித்தளை காளை உடலுக்குள் அடைத்துவிடுவார்கள்.

பிறகு, கீழே கட்டைகள் எரித்து தீ மூட்டுவார்கள். பித்தளையில் எளிதாக சூடு அதிகமாகும் திறன் இருக்கிறது. உள்ளே சூடு தாங்காமல் அந்நபர் கத்தும் போது, காளையின் வாய் வழியாக, அது கத்துவது போல ஒலி வெளிப்படும் வகையில் இந்த கருவியை உருவாக்கியிருக்கிறார்கள்.

Image Source: © tripadvisor

இம்பெல்மென்ட்!

இம்பெல்மென்ட்!

இது துரோகிகளுக்கும், அரசன் பேச்சை பின்பற்றாத மக்களுக்கும் தரப்படும் தண்டனை ஆகும். இந்த தண்டனை பெற்ற நபர்களை, கட்டாயப்படுத்தி ஒரு கூர்மையான கம்பியின் மீது உட்கார வைப்பார்கள்.

அந்த கூர்மையான கம்பியில் அவர் உடல் மெல்ல, மெல்ல குத்தி, கீழே இறங்கும். அதாவது, உட்காரும் இடத்தில் இருந்து வாய் வழியாக கம்பி வெளியே வருவது போன்ற நிலையில் மரணம் அமையும். இது மிகவும் வலிமிகுந்த கொடூரமான கொலைக் கருவி ஆகும்.

Image Source: © notizie

ஸ்காஃபிஸம்!

ஸ்காஃபிஸம்!

குற்றம் சுமத்தப்பட்ட நபரை உணவாக்கி கொள்ளுதல். கிட்டத்தட்ட அந்நியனில் நாம் கண்ட அதே தண்டனை தான். ஆனால், கொஞ்சம் வித்தியாசமானது. குற்றவாளியை நிர்வாணப்படுத்தி ஒரு தனி படகில் கை, கால்களை கட்டி நீரில் விட்டுவிடுவார்கள். படகு ஒரே இடத்தில் தான் நடு நீர்நிலையில் நின்றிருக்கும்.

குற்றவாளியின் உடல் முழுவதும் தூய்மையான பால் மற்றும் தேனை ஊற்றிவிடுவார்கள். இந்த வாசத்தை கொண்டு பூச்சிகள் மெல்ல, மெல்ல அந்நபரின் உடலை சூழும், அவை மெல்ல, மெல்ல உடலை தின்று கொல்லும். இது நரக வலிக்கு ஈடானது.

Image Source: © sickchirpse

கீல்ஹௌலிங் (KeelHauling)!

கீல்ஹௌலிங் (KeelHauling)!

18ம் நூற்றாண்டில் பின்பற்றி வரப்பட்ட கொடிய தண்டனையாக இது விளங்கி வந்துள்ளது.இது பெரும்பாலும் கடற் கொள்ளையர்கள் கொடுத்து வந்த தண்டனையாகவும் கருதப்படுகிறது. இதில், தங்களிடம் சிக்கிய குற்றவாளிகளை அல்லது பிணைக்கைதிகளை, காயத்துடன் இரத்தம் சொட்ட, சொட்ட ஒரு கட்டையில் துடுப்பு போல கட்டி, கப்பலின் கீழே காட்டி இழுத்து வருவார்கள். இரத்தத்தை நுகர்ந்து சுறாக்கள் கட்டையில் கட்டப்பட்ட அந்த நபரை கடித்து தின்று கொன்றுவிடும்.

Image Source: © entertales

உடலை அறுப்பது!

உடலை அறுப்பது!

இது பெண்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக இருக்கலாம். ஆங்கிலத்தில் பிரெஸ்ட் ரிப்பர் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டிருந்தது. நன்கு சூடாக்கப்பட்ட இரும்பு ரம்பம் போன்ற கருவியை கொன்று, பெண்ணை தலை கீழாக கட்டி தொங்கவிட்டு, அவர்களது பிறப்புறுப்பு முதல், மார்பகங்கள் வரை அறுக்கப்படும். இந்த தண்டனை ஜெர்மனில் விபச்சாரத்தில் ஈடுபட்டு குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றும் கருதப்படுகிறது.

Image Source: © allthatinteresting

பூட்ஸ்!

பூட்ஸ்!

இடைக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமான தண்டனைகளில் இதுவும் ஒன்று. தண்டனை சுமத்தப்பட்ட நபரின் கால்களை மரம் அல்லது இரும்பாலான உறையால் மூடிவிடுவார்கள். அதை ஆணி கொண்டு அடித்துவிடுவார்கள். இந்த கருவி பல வகைகளில் இருந்துள்ளது என வரலாற்று தகவல்கள் மூலம் அறியப்படுகிறது. சிலவன இரும்பாலான முற்கள் போலவும் இருந்துள்ளன.

Image Source: © alamy

தி ரேக்!

தி ரேக்!

மரத்தாலான ஒரு இடத்தில் குற்றவாளியை படுக்கவைத்து இரண்டு, கை, கால்களும் கட்டப்பட்டுவிடும். பிறகு, கயிறால் இணைக்கப்பட்டுள்ளது அந்த கருவியை, இருபுறமும் நின்று இருவர் இறுக்கமாக சுற்றுவார்கள். ஒரு கட்டத்தில் இறுக்கம் தாளாமல், ஸ்ட்ரெச் ஆகி கை, கால்கள் பிரிந்து வந்துவிடும். அல்லது முறிந்து போய்விடும்.

Image Source: © loping

வாட்டர் டார்ச்சர்!

வாட்டர் டார்ச்சர்!

இது ஒரு சீன கருவி ஆகும். தனிமையில் கை, கால் உடல் முழுவதும் கட்டப்பட்டு குற்றவாளி அடைக்கப்பட்டு இருப்பார். அவர் தலையில் தொடர்ந்து தண்ணீர் ஒரே இடத்தில் சொட்டு, சொட்டாக விழுந்துக் கொண்டே இருக்கும். இது அவரது மனநிலையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இது பைத்தியம் பிடிக்கவும் செய்யலாம் என்று கருதப்படுகிறது.

Image Source: © democrati

தொங்கவிடுதல்!

தொங்கவிடுதல்!

இங்கிலாந்தில் துரோகம் செய்த நபர்களுக்கு இந்த தண்டனை அளித்து வந்துள்ளனர். இந்த தண்டனை முறையை 1814ல் தான் அழித்துள்ளனர். இதில், குற்றம் சுமத்தப்பட்ட அந்த நபர் ஒரு மரத்தாலான கருவியில் கட்டப்பட்டு இழுத்து செல்லப்படுவார். பிறகு அவரை கிட்டத்தட்ட இறக்கும் தருவாய் வரையில் தூக்கிட்டு தொங்கவிடுவார்கள். ஆனால், இறக்க விடு மாட்டார்கள். பிறகு அவரை உடனடியாக கீழே இறக்கி, அவரது பிறப்பு உறுப்பை அறுத்து அவர் கண் முன்னாடியே எரித்து சாம்பல் ஆக்குவார்கள். கடைசியாக, அவரது உடல் நான்கு பாகங்களாக வெட்டி கொன்றுவிடுவார்கள்.

Image Source: © ranker

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Horrible Torture Devices Ever Used in History!

The Most Horrible Torture Devices Ever Used in History!