For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கிரிக்கெட் வீரர்களை செம்மையாக கலாய்த்த ரசிகர்களின் கலக்கல் பேனர்கள் - போட்டோஸ்!

  By Staff
  |

  கிரிக்கெட் என்று மட்டுமல்ல, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், என எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி! தங்களது விருப்பமான அணி மற்றும் வீரரைப் புகழ்ந்து வாசகங்கள் எழுதி பெரிய அளவிலான பதாகைகள் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் ரசிகர்கள். இதை நாம் பெரும்பாலும் கவனித்திருப்போம்.

  The Ever Best Cricket Banner Hoardings Shown By Fans inside The Ground!

  Image Source: Reddif

  ஆனால், இவற்றில் சிலவன மட்டுமே நம்மை ரசிக்க வைத்திருக்கும். அவர்களது சுவாரஸ்யமான பதாகைகள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும். இதுமட்டுமின்றி, பிடித்த வீரர், பிடித்த அணி என்றில்லாது.. சில சில்மிஷவாதிகள் தங்களுக்கு பிடிக்காத அணி மற்றும் வீரரரை கேலி, கிண்டல் செய்தும் இது போன்ற வாசக பதாகைகள் கொண்டு வருவார்கள்.

  அந்த வகையில்... மீடியா மற்றும் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட ரசிகர்களின் சுவாரஸ்யமான பதாகைகள் அடங்கிய படங்களை தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  எங்க அம்மா நான் ஹோம் வர்க் பண்ணிட்டு இருக்கேன்னு நெனைச்சுட்டு இருக்காங்க... எனக்கு கிடைக்க போற பனிஷ்மென்ட் வர்த்தா இருக்க மாதிரி விளையாடுங்க... புஷ் ஆக்கிடாதிங்கன்னு செமையா பேனர் கொண்டு வந்திருக்காரு இந்த குட்டி சுட்டி கிரிக்கெட் ரசிகர்.

  கிரிக்கெட் மேட்ச்னா காய்ச்சல்ன்னு சொல்லி லீவ் போட்ட காலம் போய். நேரா கிரவுண்டுக்கு போற காலம் வந்திடுச்சு.

  #2

  #2

  அக்மல் பாகிஸ்தான் அணி விக்கெட் கீப்பர். இவரது அருமை, பெருமைகள் அறியாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி உங்களுக்கு தெரியாது என்றால்.. நீங்கள் கிரிக்கெட் பார்ப்பதே வீண். எப்படி எல்லாம் எளிதான கேட்சுகளை, ஸ்டம்பிங்களை கோட்டைவிட வேண்டும் என்பதில் கில்லாடி நம்ம ஆள். அதை குறித்து தான் அக்மல் என் ஹார்ட் வேணும்னாலும் வெச்சுக்க... கேட்ச் விட்டுடாதன்னு பாக்கிஸ்தான் பொண்ணுங்க கேலி பண்ணி பேனர் கொண்டு வந்திருக்காங்க...

  #3

  #3

  கிரிக்கெட் மேட்ச் பார்க்க விரும்பும் பொண்ணு உண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னா.. இரண்டாவது எண்ணமே இல்லாம ஓகே சொல்லிடு. இதெல்லாம் அரிதான விஷயம்ன்னு சொல்லி அடிக்கடி ஒரு ஃபார்வேர்ட் மெசேஜ் வரும்... இங்க பாருங்களேன்... என் லவ்வர் கிரிக்கெட்டா.. லவ்வான்னு கேட்டான்.. இப்ப நான் இங்க இருக்கேன்னு ஒரு பொண்ணு பேனர் கொண்டு வந்திருக்கு.

  #4

  #4

  கெயில் ஒரு சிக்ஸர் மன்னன் என்பது அனைவருக்கும் தெரியும். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பால் கெயிலால் வேகமாக ஓட முடியாது. அதனால் தான் அத்தனை உயரம் இருக்கும் நபர் ஸ்லோ பவுலிங் மற்றும் ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்வதன் காரணம். தன்னால் அதிகம் ஓடி ரன்கள் சேகரிக்க முடியாது என்ற காரணத்தால் தான் கெயில் அதிகம் ஆக்ரோஷமாக அடித்து விளையாடுகிறார்.

  இதனால் சில சமயம் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கு அடிப்படுவதும் உண்டு. பெங்களூருவில் ஒருமுறை சிறுமி ஒருவருக்கு அடிப்பட்டு அவரை மேட்ச் முடிந்து கெயில் மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதலும் கூறியது அனைவரும் அறிந்தது.

  இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான்.. ஒரு மருத்துவர்கள்... கவலைப்பாடாதிங்க.. கெயில் சிக்ஸ் அடிச்சா அதுக்கு மருத்துவம் பார்க்க நாங்க இருக்கோம்ன்னு சொல்லி பேனர் எடுத்துட்டு வந்திருக்காங்க.. பலே பலே!

  #5

  #5

  சச்சின் கிரிக்கெட் கடவுள்... கங்குலி ஆப் சைடில் ஆடுவதில் கடவுள் என்றே கூறலாம்.. லக்ஸ்மன் நான்காவது இன்னிங்க்ஸில் கலக்கும் கடவுள். ஒருவேளை கோவிலின் கதவுகள் மூடப்பட்டுவிட்டால்.. கவலை வேண்டாம்.. கடவுள்களே சுவரின் பின்னே தான் இருக்கிறார்கள். இது தி கிரேட் வால் ஆப் இந்தியா ராகுல் திராவிடை குறிக்கறது. நல்ல கிரியேட்டிவ் திங்கிங் பாஸ்.

  #6

  #6

  அமெரிக்காவில் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் கிடையாது. கூடைப்பந்து, பேஸ்பால், தடகளம், கால்பந்து போன்ற விளையாட்டுகள் தான் அங்கே மிகவும் பிரபலம். ஆனால், அங்கே இருக்கும் இந்தியர்களுக்கு மட்டும் சச்சினை தங்கள் ஊரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா... ஸ்டார்ஸ் கிரிக்கெட் மூலம் சச்சின் அந்த ஆசையை தீர்த்து வைக்க... அமெரிக்க வாழ் இந்தியார்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பேனர்.

  #7

  #7

  என்ன தான் எதிரி நாடு என்ற கண்ணோட்டம் இருந்தாலும்... உலகிலேயே இரு நாடுகள் மத்தியில் நடக்கும் விளையாட்டு ஒரு நாட்டின் தன்மானமாக காணப்படுவது இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி தான். எந்த நாடு தோற்றாலும் அடுத்த நாளே மீடியா, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்திற்கு ஆளாக வேண்டும். வீரர்களின் வீடுகள் முன் போராட்டமே நடக்கும். அந்த அளவிற்கு கோபம் வெளிப்படும்.

  ஆனால், இருவர் மத்தியில் போட்டிகள் நடக்காமல் இருப்பது இருநாட்டு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு சோகத்தை உண்டாக்கி இருக்கிறது என்பதற்கான உதாரணம் இது தான்.

  #8

  #8

  புஷ் இங்க பாருங்க.. எங்க இந்தியாவோட பெரும் அழிவு உண்டாக்கும் ஆயதங்கள் இதோ! என்று லக்ஸ்மன் மற்றும் திராவிட் படங்களை போட்டு பேனர் வைத்துள்ளனர். என்ன தான் இன்று இந்தியா அனைத்து வகையிலுமான போட்டியிலும் திறன் மிகுந்த அணியாக இருந்தாலும்... அன்று சச்சின், கங்குலி, திராவிட், லக்ஸ்மன் இருந்த அணி மீது ரசிகர்கள் கொண்டிருந்த ஆர்வம், ஈர்ப்பு, ரசிப்பு என்பது தனித்தன்மை வாய்ந்தது.

  #9

  #9

  உங்களுக்கு ஒரூ வீடியோ காட்சி நினைவிருக்கிறதா? மைதானத்தில் இருந்து ஒரு பெண் ஜாகீர் கானுக்கு பிரபோஸ் செய்து முத்தங்களை பறக்கவிட்டு அப்போதே வைரல் ஆனார்.

  அப்படி தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின்க்கு வந்திருக்கும் ஒரு பிரபோசல். அதென்னம்மா வேகப்பந்து வீச்சாளரா பார்த்து ப்ரபோஸ் பண்றீங்க...

  #10

  #10

  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் தான். அதிலும் ஆஷிஸ் தொடர் வந்துவிட்டால்... அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தன்மான போராட்டமே நடக்கும்.

  இதோ, ஆஸ்திரேலிய அணி வெறும் பட்டாசு சாம்பல் மட்டும் தான் எடுத்துக் கொண்டு போக முடியும் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து ஒரு ரசிகர் பேனர் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

  #11

  #11

  2011 உலகக் கோப்பை போட்டிகளின் போது... இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆஸ்திரிய அணி வீரர்கள் எப்போது, எங்கிருந்து புறப்பட வேண்டும் என்று நேர அட்டவணை போட்டு பிரியாவிடை கொடுத்து அனுப்பி அலப்பறை கூட்டும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள்.

  #12

  #12

  அம்மா என்னை தீபாவளி தினத்தன்று கோவிலுக்கு செல்ல கூறினார்... ஆனால், நான் கடவுளை காண இங்கே வந்திருக்கிறேன் என்று பேனர் வைத்திருக்கும் ஒரு இந்திய ரசிகர். இந்தியர்களுக்கு கிரிக்கெட் ஒரு மதம் என்றால்.. அந்த மதத்தின் கடவுள் சச்சின் தான். இதை எந்த காலத்திலும் மாற்றவே முடியாது.

  #13

  #13

  அதென்னமோ தெரியல கோலி மீது பெண்களுக்கு அம்புட்டு காதல் எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியவில்லை. ஆனால், விராத் கோலிக்கு காதல் வந்தது என்னவோ அனுஷ்கா ஷர்மா மீது மட்டும் தான்.

  இதோ! கோலிக்கு ஆபர் கொடுத்து அழைக்கும் இந்திய ரசிகர்கள். இனிமேல் இப்படி காண்பிச்சா அனுஷ்கா வூடு தேடி வந்து அடிப்பாங்க.

  #14

  #14

  எங்களை கேமராவில் காண்பிக்க வேண்டாம்... எங்கள் மனைவியர் நாங்கள் வேலை செய்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேனர் தூக்கி கொண்டு வந்த போதிலும், பரட்டை கேமரா மேன் டிவியில் காண்பித்துவிட்டார்... பத்த வெச்சுட்டையே பரட்ட...

  #15

  #15

  இதோ மறுக்கா ஒரு விராத் கோலி ரசிகர். எல்லாரும் தேவதைகளை கண்டதாக கூறுவார்கள். ஆனால், நான் விராத் கோலியை கண்டுவிட்டேன். அதுவே போதும் என்று விராத் கோலியை நேரில் காணும் தனது ஆசையை கவிதையாக வெளிப்படுத்தி இருக்கிறார் இந்த ரசிகை.

  #16

  #16

  சச்சின் கடவுள் என்று புகழ்பாடும் மற்றுமொரு சூப்பர் ரசிகரின் பேனர். நான் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தவன் தான். ஆனால், சச்சினுக்கு பிறகு அப்படி இல்லை என்பதை குறிக்கும் வகையிலான அசத்தல் பேனருடன் ஆர்வமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஒரு இந்திய ரசிகர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Ever Best Cricket Banner Hoardings Shown By Fans inside The Ground!

  The Ever Best Cricket Banner Hoardings Shown By Fans inside The Ground!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more