For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தூத்துக்குடி தவிர அரசு வேற எங்கெல்லாம் துப்பாக்கி சூடு நடத்திருக்குன்னு தெரியுமா?

  |

  தூத்துக்குடியில் ஸ்டெரலைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தில் உறைந்து போயிருக்கும் மக்கள் இன்னும் அதைவிட்டு வெளிவர முடியாத சூழலில், தமிழகம் முழுக்க இதை நினைத்து மக்கள் தூக்கம் தொலைத்துப் போயிருக்கிறார்கள்.

  people death

  தூத்துக்குடியில் உள்ள மக்களாலோ ஒரு நிமிடம் கூட கண்ணை மூடி தூங்க முடியாத நிலை. கண்ணைமூடிப் படுத்தால் எந்த நிமிடம் எந்தப் பக்கமிருந்து தோட்டாக்கள் நம் மீது பாயும், யார் வீட்டுக்குள் புகுந்து போலீசார் அடித்து நொறுக்கப் போகிறார்கள் என்ற திக் திக் வாழ்க்கை தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  துப்பாக்கிச் சூடு

  துப்பாக்கிச் சூடு

  இப்படி அரசாங்கமே தன் சொந்த மண்ணில் வாழும் மக்களை தீவிரவாதிகளைப் போல சுட்டு சுப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கும் நிலை இன்று மட்டும் தான் நிகழ்ந்திருக்கிறது. அதற் பலியானது தூத்துக்குடி மக்கள் தான் என்று நினைத்துவிடாதீர்கள். இதே தமிழக அரசு பல முறை தன் சொந்த மண்ணில் தங்களது உரிமைக்காகப் போராடிய மக்களை துப்பாக்கி சூடு நடத்தி கலைத்திருக்கிறது. அப்படி யார் யாருடைய ஆட்சியில் எத்தனை முறை தமிழகத்தில் அரசாங்கத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று இங்கே பார்ப்போம்.

  வால்பாறை துப்பாக்கிச்சூடு

  வால்பாறை துப்பாக்கிச்சூடு

  1962 காலகட்டங்களில் காமராஜர் ஆட்சியில் இருந்த போதும்கூட ஒருமுறை மக்களுக்கெதிராக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. என்ன காமராசர் ஆட்சியிலா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் என்பது தான் கசப்பான உண்மை. வால்பாறை எஸ்டேட்டுகளில் வேலை பார்த்து வந்த தோட்டத் தொழிலார்கள் கூலி உயர்வு கேட்டபோது, அந்த போராட்டத்தை ஒழுக்குவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் பலியானவர்கள் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

  இந்தி எதிர்ப்பில்

  இந்தி எதிர்ப்பில்

  1965 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அப்போதைய முதல்வராக பக்தவச்சலம் இருந்தார். அது இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டம். அப்போது போராட்டக் காரர்களை ஒடுக்க வேண்டும் என்று சொல்லி தமிழக அரசும் இந்திய ராணுவமும் சேர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மொழிப்போர் தியாகிககளை கொன்று குவித்தது.

  விவசாயிகள் போராட்டம்

  விவசாயிகள் போராட்டம்

  1972 ஆம் ஆண்டு தூத்துக்குடி மற்றும் சங்கரன்கோவில் வட்டாரங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தைக் கலைக்க போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தார்கள்.

  குருஞ்சாக்குளம் துப்பாக்கிச்சூடு

  குருஞ்சாக்குளம் துப்பாக்கிச்சூடு

  1980 ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராட்டக் களத்தில் குதித்த போது, அப்போதைய ஆட்சியில் மக்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 6 விவசாயிகள் பலியானார்கள்.

  1987 துப்பாக்கிச்சூடு

  1987 துப்பாக்கிச்சூடு

  வன்னிய சமூகத்தில் உள்ளவர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வன்னியர் சங்கத்தின் சார்பில், 1987 ஆம் ஆண்டு விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், விக்கிரபாண்டி ஆகிய இடங்களில் போலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மொத்தம் 21 பேர் பலியானார்கள்.

  எம்ஜிஆர் ஆட்சியில்

  எம்ஜிஆர் ஆட்சியில்

  எம்ஜிஆர் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் எம்ஜிஆர் ஆட்சி செய்த காலத்திலும் கூட, மக்களின் மேல், மக்களுடைய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

  அட இதுக்கெல்லாமா சுட்டாங்கன்னு கேட்பீங்க. நீங்களே பாருங்க...

  மெரினா கடற்கரையை அழகுபடுத்த வேண்டுமென்று அங்கிருந்த மீனவ பகுதிகளை மாற்றம் செய்த போது, அதை எதிர்த்த மீனவர்களுக்கு எதிராக அன்றைய அரசு துபு்பாக்கிச் சூடு நடத்தியது.

  அருப்புக்கோட்டை அருகே வாகைக்குளம் என்னும் பகுதியில், ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்காக அந்த மக்கள் மீது அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது.

  திருச்சி சிம்கோ மீட்டர் ஆலைத் தொழிலாளர்கள் மீது, வியாசர்பாடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதற்கான என பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதில், பல உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்துள்ளன. இவையனைத்தும் 1977 முதல் 1987 காலகட்டம் வரையில் நிகழ்ந்தன.

  மாஞ்சோலை துப்பாக்கிச்சூடு

  மாஞ்சோலை துப்பாக்கிச்சூடு

  1999 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராகப் பணிபுரிந்தார். மாஞ்சோலை எஸ்டேட் கூலித் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, ஜூலை 23 ஆம் நாள் திருநெல்வேலியில் பெரிய அளவிலான பேரணி ஒன்றை நடத்தினார்கள். அந்த பேரணியின்போது, போராட்டக்காரர்களுக்கும் போலிசுக்கும் இடையே பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இருந்து தப்பிக்க நினைத்து, ஓடி தாமிரபரணி ஆற்றில் குதித்தவர்களில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.

  பரமக்குடி துப்பாக்கிச்சூடு

  பரமக்குடி துப்பாக்கிச்சூடு

  கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில், இமானுவேல் சேகரனின் நினைவு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருநு்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வரும்போது, தூத்துக்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து மக்கள் பரமக்குடியில் பெரும்அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரமாக மாறியது. அந்த கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 7 பேர் உயிரிழந்தனர்.

  கூடங்குளம்

  கூடங்குளம்

  கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை மக்கள் போராடி வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். அதில் போராட்டம் தீவிரப் படுத்தப்பட்ட போது, மக்கள் கடலில் இறங்கிப் போராடினார்கள். அப்போது, அவர்களை பயமுறுத்துவதற்கான மக்கள் தண்ணீரில் நிற்கும்போது, விமானப் படை விமானங்களை மேலே அணிவகுத்துப் பறக்கவிட்டு, அங்கிருந்து தண்ணீர் குண்டுகளை வீசி மக்களை பயம்காட்டியது ஜெ. அரசு

  ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

  ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு

  இந்த வரிசையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் தங்களுடைய 100 ஆவது நாள் போராட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது, கலவரம் செய்ய முயற்சித்ததாகக் கூறி, அவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் 13 பேர் அநியாயமாக பலியானார். இதை பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள் முழுக்க, உலக அளவில் இது மிகப்பெரிய அரச பயங்கரவாதம் என்று வசைபாடப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலேயே இதுதான் மிக பயங்கரமானது என்று கூறப்படுகிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  tamilnadu police fires on tamil people for various protest

  The death toll in Tuticorin’s anti-Sterlite protest rose to 13.
  Story first published: Monday, May 28, 2018, 17:25 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more