For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நீங்க நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க.. இதெல்லாம் நிஜமாவே உலகத்துல நடக்குது!

  By Staff
  |

  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப்ன்னு உலகமே மூன்று மொபைல் செயலிக்குள்ள அடங்கிடுச்சு. நம்மள்ல பலர் இதுல வரது தான் உண்மைன்னு நம்பி குருட்டுத்தனமா வர எல்லா செய்தியையும் பகிர்ந்துட்டு வரோம்.

  அதுலயும் தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்கன்னு ஒரு கமெண்டு போட்டுட்டா போதுமே... உணர்ச்சி பொங்க ஆயிரக்கணக்குல ஷேர் பண்ணி டிரெண்ட் ஆக்கிடுவாங்க. கடைசில பார்த்தா அது ஒரு ஃபேக் நியூஸா இருக்கும்.

  Strange Things That Actually Exists in The World

  இங்க நாம பார்க்க போற விஷயங்கள், படங்கள் உங்களுக்கு போட்டோஷாப் பண்ணது, இல்ல ஃபேக் நியூஸ்ன்னு தோணலாம். ஆனா, இதெல்லாம் உண்மைங்கிறது தான் உண்மை.

  புரியலையா.. இதெல்லாம் உண்மையாகவே உலகத்துல நடந்த, நடக்குற விஷயங்கள் தான்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கருப்பு பர்கர்!

  கருப்பு பர்கர்!

  அடே! இதென்னடா சொல்றீங்க ஏதோ போட்டோஷாப் பண்ண மாதிரி இருக்கு இத போய் நம்பனுமா என்ன பார்த்தா என்ன முட்டாள் மாதிரி இருக்கா என்னன்னு? சிலர் பொங்கலாம். சாரி ப்ரோ... நிஜமாவே இது இருக்கு.

  2014 செப்டம்பர் மாதம் ஜப்பானில் பர்கர் கிங் என்ற பர்கர் உணவு தயாரிப்பு நிறுவனம் கருப்பு, பன், சீஸ் மற்றும் சாஸ் எல்லாம் கொண்டு இந்த கருப்பு பர்கர் தயாரித்து.

  அதே போல 2015 ஆண்டில் முழுக்க, முழுக்க ப்ரைட் ரெட் நின்றத்திலான பர்கரும் தயாரித்திருந்தது இந்த நிறுவனம்.

  ஹை கிளாஸ் ஸ்டூல்

  ஹை கிளாஸ் ஸ்டூல்

  காசு பணம் இருந்த கருமம் காக்கா கூட சிவப்பு ஆயிடும்ன்னு செவ்வாழை சொல்லியிருக்காரு. அப்பறம் கக்கூஸ் சிவப்பாகாதா...

  அது சரி... ஏற்கனவே உட்கார்ந்து போறதால... குடல் இயக்கம், மலம் கழித்தல் விஷயங்கள் சரிவர இயங்க மாட்டேங்கிது இது தப்புன்னு ஆய்வுல கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டு இருக்காங்க.

  இதுல... சொகுசா வேற உட்கார்ந்து போக கேட்குதோ... ஆமா, இதுல உட்கார்ந்து எப்படி கழுவுவாங்க...

  ஐஸ் வண்டி!

  ஐஸ் வண்டி!

  இத பார்க்கும் போது உங்களுக்கு காதலன் படத்துல ஊர்வசி பாட்டுல வர பஸ் நியாபகத்துக்கு வருதா... சரி விடுங்க... மேட்டர் அது இல்ல...

  ஐஸ் விக்கிற ஐஸ் வண்டி தெரியும். ஆனால், ஐஸ்னாலயே உருவாக்கப்பட்ட ஐஸ் வண்டி தெரியுமா? இத கனடாவ சேர்ந்த டயர் ரீடெய்லர் உருவாக்கி இருக்காரு. இதுவொரு முற்றிலும் இயங்க கூடிய ட்ரக் தான். இதுக்கு பேரு ஐஸ் ட்ரக்.

  இத உருவாக்கும் போதும் சரி, பராமரிக்கும் போதும் சரி மைனஸ் நாற்பது டிகிரியில வெச்சிருக்கணும்.

  கல்லா?

  கல்லா?

  இதென்னடா ஏதோ பெரிய கல்லு பக்கத்துல ஒருத்தன் உட்கார்ந்து உருளைக்கிழங்கு காமிச்சிட்டு இருக்கான்னு நீங்க நெனச்சா அது தப்பு. உண்மையில, அந்த மனுஷன் உட்கார்ந்துட்டு இருக்குறதே ஒரு உருளைக்கிழங்கு பக்கத்துல தான்.

  இதோட எடை ஏறத்தாழ 80 கிலோ. இத வாங்கவும் முடியாது, சமைக்கவும் முடியாது. உலக சாதனை வேணும்னா பண்ணலாம்.

  சாணம்!

  சாணம்!

  அடடே! இதென்னடா ஒரு அழகான மலை அடிவாரத்துல போய் மாடு மேய்ச்சுட்டு இருக்காங்க. கொஞ்சம் ஓரமா போய் மேய்க்கலாமே அழகை ரசிக்க விடுங்கன்னு யோசிக்கிறீங்களா? சாரி! நீங்க பார்த்துட்டு இருக்கிறது மலை இல்ல. அது மாட்டு சாணத்தால உண்டான ஒரு குன்று.

  Nebraskaங்கிற இடத்துல தான் இந்த பகுதி அமைந்திருக்கு. இங்க இருக்க 3500 மாடுங்க வருஷத்துக்கு 40 ஆயிரத்துக்கும் மேலான டன் அளவுல சாணம் போடுதாம்.

  இதுக்கிட்டத்தட்ட ஒரு சிறிய நகரத்துல இருந்து உருவாகுற அளவுன்னும் சொல்றாங்க. சில சமயம் இது தீப்பிடிச்சுக்குமாம். இதை அணைக்க முடியாம தீயணைப்பு வீரர்கள் படாதபாடு படுறாங்கனும் பேசிக்கிறாங்க.

  துண்டு!

  துண்டு!

  குளித்து விட்டு உடலை துவட்ட நாம் அனைவரும் ஒரு டவல் பயன்படுத்துவோம். பெரியவர்களின் டவல் ஒரே நிறத்தினால் ஆனதாக இருக்கும். குழந்தைகளின் டவல் மட்டும் பொம்மை டிசைன் கொண்டிருக்கும்.

  அப்படியாக தான் கேலியாக ஒரு நிறுவனம் Butt Towel என்ற பெயரில் இந்த டவலை இடுப்பில் கட்டினால், பின்னாடி டோர் ஓப்பனாகி இருப்பது போன்ற டிசைனில் தயாரித்துள்ளது. எதுக்க்க்கு???

  சாப்பாடு தான்...

  சாப்பாடு தான்...

  என்னடா இது மிச்ச மீதம் ஆனது ஏதோ பிட்சா டப்பாவுல போட்டு குப்பையில கொட்டுன மாதிரி இருக்குன்னு நீங்க நினைக்கிறது எங்க காதுல விழுது. ஆனால், இது மீதமான சாப்பாடு இல்ல. இதுதான் சாப்பாடே. அதாவது மீட், பிட்சா, சிக்கன் டிக்கா, ஆனியன் ரிங்க்ஸ், நான் பிரெட், கார்லிக் பிரெட்ன்னு பல உணவு கலவைகள் கொண்ட மலிவு விலையில் கிடைக்கும் உணவு இது ஆரம்பத்துல ஸ்காட்லாந்துல விற்கப்பட்டு வந்தது இந்த உணவு.

  இத பலரும் விமர்சனம் பண்ணியிருக்காங்க. இதுல உப்பு சத்து அதிகம். இந்த ஒரு மீல்ஸ்ல மூவாயிரம் கலோரி வரைக்கும் இருக்கும். அதிகளவிலான உணவு மற்றும் குறைவான பணம் என்றதும் இந்த உணவு விரைவில் பிரபலம் ஆனது.

  ஆனால், இது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், சில ஊட்டச்சத்து நிபுணர்கள் இதன் அளவை குறைக்க வேண்டும், ஆரோக்கியமான பொருட்கள் கொண்டு சமைக்க வேண்டும் என்று அறிவுரைத்து. இதை சட்டமாகவும் ஆக்கினார்கள்.

  கிரியேட்டிவாமா...

  கிரியேட்டிவாமா...

  கிரியேட்டிவ் மைண்ட் எங்கெல்லாம் இருக்கணும்னு ஒரு அறிவே இல்லங்க நம்ம ஆளுங்களுக்கு. இது என்னடா காதுக்குள்ள பூச்சி உட்கார்ந்துட்டு இருக்குன்னு குச்சிய எடுத்துட்டு போய் தட்டிவிட போனா.. தூங்கிட்டு இருக்குற பய எழுந்து நான் பாட்டு கேட்டுட்டு இருக்கேன் சொல்றான். ஆமாங்க! இது ஹெட்போனாம். என்னத்த சொல்றது.

  இது கிரியேட்டிவ்!

  இது கிரியேட்டிவ்!

  உண்மையில இது தானுங்க கிரியேட்டிவ். தானாவே ரோடு சுத்தம் பண்ண தென்கொரியாவுல இப்படி ஒரு யுக்திய பயன்படுத்துறாங்கன்னு சொல்லப்படுது. கூகுள்ல போய் தேடி பார்த்தா.. இப்படியான சாலைகள் இருக்குறதா பல படங்கள் காண்பிக்கப்படுது. பரவாயில்ல கொஞ்சம் நல்லா தான் யோசிச்சிருக்காங்க. நம்ம ஊருல தான் தர்மாக்கோல் வெச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க.

  மெகாலேப்டரிக்ஸ்

  மெகாலேப்டரிக்ஸ்

  அப்லேன்ட் மோவோ அல்லது மெகாலேப்டரிக்ஸ் என்று அறியப்படும் இது நியூசிலாந்தில் காணப்பட்ட பெரிய வகை பறக்கும் உயிரினம். இது அழிந்துவிட்ட உயிரினமாக கருதப்படுகிறது.

  இது கிபி 1500லேயே அழிந்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த இனத்தை சேர்ந்த ஒரு பறவையின் கால் மட்டும் இன்றும் நியூசிலாந்தில் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  All Image Source: Funcage

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Strange Things That Actually Exists in The World

  Strange Things You Wont Believe That Actually Exists in The World
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more