For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பாலியல் அடிமைகள் 60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டிய கொடுமை

  |
  60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்!- வீடியோ

  வங்காளத்தில் உள்ள கிராமங்களில் இன்றும் இவர்கள் வசித்து வருகிறார்கள். நடனம் ஆடுவது பிடிக்கும், அது பொழுது போக்கு, அல்லது லட்சியம் என்று சொல்லிக் கொண்டு மேடையேறி ஆடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. பிடித்தமான விஷயத்தை செய்வதில் என்ன பிரச்சனை இருந்துவிடப்போகிறது என்று தானே யோசிக்கிறீர்கள். சற்று மாற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.

  இதையே உங்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டால்... ஒரு மணி நேரம் மேடையில் ஆடி, ரசிகர்களின் கைத்தட்டு எனும் போதையை பெரும் விஷயமாக இருக்காமல் தொடர்ந்து ஆடச்சொன்னால் ஒரு மணிநேரம் இரண்டு மணி நேரம் கடந்து நாள் முழுவதும் என்றால்??? அதே நேரத்தில் உங்களுக்கு கைத்தட்டுக்கள் எல்லாம் கிடைக்காது. கேலி பேச்சுக்கள் தான் அதிகம் கிடைத்தால்..... அதை விட கொடுமையாக ஆடினால் தான் உனக்கு சாப்பாடு எனும் நிலை வந்தால்?

  இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு நான் நடனமாட வேண்டுமா? விருப்பமிருந்தும் வேறு வழியில்லை அதனால் நான் இதிலிருந்து விலகுகிறேன், உணவுக்கும் வாழ்வாதாரத்திற்கும் வேறு வேலை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிட வேண்டும் என்று இவர்களுக்கும் ஆசை தான் ஆனால் இன்னமும் பல்லை கடித்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வலி மிகுந்த கதையை கேட்கலாம் வாருங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஐந்து வயதில் :

  ஐந்து வயதில் :

  பிமலா தேவிக்கு திருமணம் பேசி முடிக்கும் போது ஐந்து வயது, ஆம். ஐந்து வயது குழந்தைக்கு திருமணம் முடித்து அனுப்பி விடுவதை அவர்கள் வாடிக்கையாக வைத்திருந்தார்கள். பிமலா தேவியுடன் பிறந்தவர்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர். தாயும் தந்தையும் இதே நடனத் தொழில் தான்.

  அவர்களுக்கு கிடைக்கிற சொற்ப வருமானத்தில் அத்தனை குழந்தைகளுக்கும் ஒரு வேளை உணவளிப்பது என்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

  Image Courtesy

  திருமணம் எனும் வடிகால் :

  திருமணம் எனும் வடிகால் :

  அதனை சமாளிக்க, வறுமையினால் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் செய்து அனுப்பி வைக்கப்பட்டார்கள். தங்களின் மிகப்பெரிய குறை நீங்கியதாகவே அவர்கள் நினைத்ததால் குழந்தைகள் ஐந்து வயதினை கடப்பதற்கு முன்னாலேயே திருமணம் செய்து அனுப்பி வைப்பது அங்கே சர்வ சாதரணமாக இருந்தது.

  Image Courtesy

  விதவை :

  விதவை :

  அப்படி அனுப்பி வைக்கப்பட்ட பிமலா தேவி இரண்டே ஆண்டுகளில் கணவரை இழந்தார்.காய்ச்சாலால் உயிரிழந்த கணவன் வீட்டிலிருந்து பிறந்தகத்திற்கே ஏழு வயதில் அனுப்பி வைக்கப்பட்டார் பிமலா தேவி. கொல்கத்தாவிலிருந்து 200கி.மீ தொலைவில் இருக்கிறது பன்குரா மாவட்டம். இங்கே தான் பிமலா தேவியின் பெற்றோர் வசிக்கிறார்கள்.

  ஒரு வேலை உணவுக்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

  Image Courtesy

  பன்னிரெண்டு வயதில் :

  பன்னிரெண்டு வயதில் :

  பிமலா தேவிக்கு பன்னிரெண்டு வயதான போது ஒரு நடன க்ரூப்பில் சேருகிறார். இவர்களை நாச்னி அல்லது நாச்னியா என்று அழைப்பார்கள். அந்த கூட்டத்திற்கு தலைவராக இருந்த ரகுநந்தன் குமார் தான் பிமலா தேவியின் மாஸ்டர். இந்த கூட்டத்தின் பெண்கள் ஒரு வகை இசைக்கருவியை இசைத்தபடியே நடனமாடுவார்கள்.

  Image Courtesy

  மன்னர்கள் :

  மன்னர்கள் :

  அந்தக்காலத்தில் மன்னர்கள், ஜமீந்தார்கள் இவர்களை போற்றினார்கள். நிறைய வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது. ஆனால் காலம் செல்லச் செல்ல மன்னர்,ஜமீன் ஆகிய வழக்கம் முற்றிலும் அழிந்தது போலவே இவர்களின் கலையும் அழிந்து போனது, ஆனால் இந்தமக்கள்? பெயரளவிற்கு மட்டும் இவர்கள் கோவில் திருவிழாக்கள், திருமண விழா ஆகியவற்றிற்கு வெகு சிலர் அழைக்கிறார்கள்.

  Image Courtesy

  72 வயதில் :

  72 வயதில் :

  அப்போதும் கை நிறைய காசு கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. தற்போது பிமலா தேவிக்கு 73 வயதாகிறது. அந்த கூட்டத்திலேயே மூத்த நடனக்கலைஞராக இருக்கிறார். இன்றளவும் வறுமையை வென்றெடுக்க இந்த நடனக்கூட்டத்தில் வந்து நடனமாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  Image Courtesy

  கணவனின் கொடுமை :

  கணவனின் கொடுமை :

  பிமலா தேவியைப் போலவே சாரு பாலா என்ற சிறுமியை தன்னை விட இரண்டு மடங்கு மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். தொடர்ந்து கணவர் வீட்டில் அடி உதை என பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தார். அதோடு சாருவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால் வீட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்.

  ஏற்கனவே வறுமையினால் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் பிறந்த வீட்டிற்கே சென்றால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் அதனால் கெஞ்சியிருக்கிறார் ஆனால் எதற்குமே அவரது கணவன் மசியவில்லையாம்.

  Image Courtesy

  குழுவில் இணைப்பு :

  குழுவில் இணைப்பு :

  எங்கு செல்வது,பெற்றோர் தன்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற குழப்பத்துடன் திரிந்த இவரை பிமலா தேவி இருந்த நடனக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மூன்று வேலை உணவு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது, பெற்றோரும் எப்படியோ எங்களுக்கு பாரமாக இல்லாமல் இருந்தால் சரி என்று ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

  Image Courtesy

  பாலியல் வன்புணர்வு :

  பாலியல் வன்புணர்வு :

  இவர்களிடத்தில் இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது.பாதுகாப்பளிக்கிறேன்,உணவளிக்கிறேன் என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி அழைத்து வந்த மாஸ்டர்களே சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதும் தொடர்ந்திருக்கிறது.

  பெண்களை கருத்தடை ஆப்ரேஷன் செய்யது கொள்ளவும் வர்புறுத்துவார்களாம், இதனால் கரு உருவாகிடுமோ என்ற பயம் கொள்ளத்தேவையில்லை அல்லவா?

  Image Courtesy

  கடவுள் :

  கடவுள் :

  இந்த சிறுமிகள் தங்களது மாஸ்டர்களை கடவுளைப் போல பாவித்து வணங்குகிறார்கள். ஏனென்றால் அவர் நமக்கு உணவளிக்கிறார், பணம் சம்பாதிக்க நடனக் கலையை கற்றுக் கொடுக்கிறார், இதற்கு மேல் என்ன வேண்டும் என்று தீராத நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள்.

  இதனால் மாஸ்டார்கள் தங்கள் மீது அத்துமீறும் போது கூட, அவருக்கு அந்த உரிமை இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

  Image Courtesy

  மகிழ்விக்க வேண்டும் :

  மகிழ்விக்க வேண்டும் :

  புருலியா மாவட்டத்தில் இருக்கக்கூடிய இந்த நடனக்கலைஞர்கள், தங்களது மாஸ்டர்களை மகிழ்விக்க வேண்டியது தங்களுடைய கடமைகளில் ஒன்றாக கருதுகிறார்கள். அந்த மகிழ்ப்படுத்துதலில் பாலியல் வன்கொடுமை, மாஸ்டரின் வாரிசை சுமப்பது ஆகியவையும் அடக்கம்.

  இது தவறல்ல, மாஸ்டர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது, பாலியல் ரீதியாக உறவு கொள்வது எல்லாம் இயற்கையானது தான் என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

  Image Courtesy

  சம்பளம் :

  சம்பளம் :

  உழைப்புக்கேற்ற ஊதியம் எல்லாம் இங்கு எதிர்ப்பார்க்க முடியாது. பல மணி நேரங்கள் ஆடியிருப்போம். சரி, இன்றைக்கு நிறைய கூலி கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தால் கையில் இருநூறு ரூபாயோ அல்லது முன்னூறு ரூபாயையோ திணித்துவிட்டுச் செல்வார்கள்.

  அதையும் மாஸ்டர்கள் வாங்கிக் கொண்டு எல்லாருக்கும் பிரித்துக் கொடுப்பார். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தது ஏழு முதல் பத்து பேர் வரை இருப்பார்கள்.

  Image Courtesy

  கேள்விக்குறி :

  கேள்விக்குறி :

  இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த மாஸ்டர் இறந்து விட்டால் அதற்கடுத்து இவர்களின் வாழ்க்கை திண்டாட்டம் தான். பிமலா தேவிக்கு மாஸ்டர் மூலமாக பிறந்த குழந்தையுடன் வசித்து வருகிறார். 26 வருடங்களுக்கு முன்பு மாஸ்டர் இறந்து விட்டார். அதன் பிறகு தனக்கும் குழந்தைக்கும் சேர்த்து உணவு தேட வேண்டிய கட்டாயம் பிமலா தேவிக்கு ஏற்பட்டிருக்கிறது.

  Image Courtesy

  கணவரை திருடி விட்டாய் :

  கணவரை திருடி விட்டாய் :

  சாருபாலாவின் மாஸ்டர், இவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இனி குடும்பமாக வாழலாம் என்று மகிழ்ச்சியாக சென்றவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்கே அவரது மனைவியும் குழந்தைகளும் இருந்தார்கள் என் கணவரை என்னிடமிருந்து பிரித்து விட்டாய், என் கணவரை திருடிக் கொண்டாய் என்று சொல்லி இருவருக்கும் பலத்த சண்டை. அதோடு அடியும் கிடைத்திருக்கிறது.

  Image Courtesy

  தீண்டத்தகாதவர்கள் :

  தீண்டத்தகாதவர்கள் :

  சில காலங்களுக்கு பிறகு இந்த நடனக் கலைஞர் தீண்டத்தகாதவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். கிராமங்களுக்கு உள்ளே கூட நுழைய அனுமத்க்கப்படவில்லை. அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. இவர்கள் சுத்தமானவர்கள் அல்ல இவர்களை கொல்ல வேண்டும் என்று சொல்லி கல்லால் அடிப்பது, நெருப்பு வைப்பது உட்பட பல்வேறு கொடுமைகளை செய்திருக்கிறார்கள்.

  அதோடு பிணக்குழியை வெட்டி அதில் இவர்களை கட்டி வைத்து விடுவார்களாம்.

  Image Courtesy

  ஆதாரம் :

  ஆதாரம் :

  சில நேரங்களில் அந்த மாஸ்டர்களின் மொத்த வருமானமே இவர்களை நம்பித்தான் இருக்குமாம், கணவரின் தொழில் இது தான் என்று ஏற்றுக் கொண்ட பெண்கள், இந்த நடனக்கலைஞர்களை வீட்டில் அனுமதிக்கவும் செய்திருக்கிறார்கள்.

  மாஸ்டர், மாஸ்டரின் பெற்றோர், மனைவி குழந்தைகள் என எல்லாருக்கும் சம்பாதித்து போட வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறுபது வயதானாலும் இவர்கள் நடனமாடி சம்பாதித்து வர கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பது தான் கொடுமை. இதனால் நடனமாடுவது மட்டுமின்றி வாய்ப்பில்லாத நேரங்களில் பிற வேலைகளை செய்யவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Shocking Story About Nachaniyas In West Bengal

  Shocking Story About Nachaniyas In West Bengal
  Story first published: Tuesday, March 27, 2018, 12:04 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more