Latest Updates
-
கடக ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இன்று முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Saturn Nakshatra Transit On Chithirai Amavasya 2026: பராபவ வருடம் பிறந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் அமாவாசையான சித்திரை மாத அமாவாசை ஏப்ரல் 17 ஆம் தேதி வருகிறது. இந்த அமாவாசை நாளில் ஒரு அரிய நிகழ்வு நிகழ்கிறது.
அது என்னவெனில், நீதிமான் சனி பகவான் இந்நாளில் தனது நிலையை மாற்றவுள்ளார். அதாவது அமாவாசை நாளான இன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் நுழைந்து பயணிக்கிறார். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் மே 17 ஆம் தேதி வரை இருந்து, ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

ஜோதிடத்தில் ஒருவரது கர்ம செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். இவர் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
அப்படி ஏப்ரல் 17 ஆம் தேதி நிகழும் சனி பகவானின் பாத சஞ்சாரமானது, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் 4 ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியால் சிறப்பான நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சனி பகவானின் நிலை மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். வேலை மற்றும் தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். நிதி ரீதியாகவும் நல்ல உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். உறவுகளில் உள்ள விரிசல் நீங்கும். தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சனி பகவானின் நிலை மாற்றத்தினால் சிம்ம ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அவருடனான உறவு மேம்படும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். இதன் காரணமாக உங்கள் வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் எதிரிகளின் தாக்கம் இனி குறைந்து, நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.
கன்னி
சனி பகவானின் நிலை மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களின் செல்வம் பெருகும். சொத்து அல்லது நீதிமன்ற வழக்குகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த தகராறுகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு வேலையையும் பொறுமையாகவும், நிதானமாகவும் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான வேலையில் இருந்த தடைகள் நீங்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் பல முக்கியமான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கியமாக உங்களின் ஆரோக்கியம் மேம்படும்.
மகரம்
சனி பகவானின் நிலை மாற்றத்தினால் மகர ராசிக்காரர்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிலும் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். செலவுகள் குறையும். லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு குறையும். முன்பெல்லாம் சின்ன விஷயங்களையும் மனதில் எடுத்துக் கொண்டு மனதளவில் வருத்தப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த சனியின் நிலை மாற்றத்திற்கு பின் சிறு விஷயங்களையும் மனதில் எடுத்துக் கொள்ளமாட்டீர்கள். மற்றவர்களுடன் இருக்கும் பிரச்சனையை பேசி முடிப்பீர்கள். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



