Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்!
Summer Health Tips In Tamil: கோடைக்காலம் என்பதால் ஏகப்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். முக்கியமாக உடல் சூடு, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றால் ஏராளமானோர் அவதிப்படுவார்கள். இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெப்பநிலை தான். இப்படி கொளுத்தும் வெயில் நேரத்தில் சிறிது நேரம் வெளியே சென்று வந்தாலே, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, மோர், முலாம் பழம் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும் இது தவிர ஒரு அருமையான மற்றொரு பொருளும் உள்ளது. அது தான் பாதாம் பிசின்.
பாதாம் மரங்களின் பட்டைகளில் இருந்து வடியும் பிசினை உலர வைத்து பெறப்படுவது தான் பாதாம் பிசின். இந்த பாதாம் பிசின் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. சொல்லப்போனால் இது பாரம்பரியமாக நம் முன்னோர்களால் கோடைக்காலத்தில் அதிகம் உட்கொண்டு வந்த பொருள். அதுமட்டுமின்றி, இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக இந்த பாதாம் பிசின் விலை மலிவில் கிடைக்கக்கூடியது. நாட்டு மருந்து கடைகளில் வெறும் 5 ரூபாய்க்கு கிடைக்கும் அளவில் விலை குறைவான ஒரு அற்புதமான மருத்துவ குணம் வாய்ந்த பொருள்.
கோடைக்காலத்தில் இப்படிப்பட்ட பாதாம் பிசினை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், யாரெல்லாம் இதை சாப்பிடலாம் மற்றும் எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து மன்னார்குடியைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "கோடை வெயிலால் வரக்கூடிய மூன்று முக்கியமான பிரச்சனைகள் உடல் சூடு, மலச்சிக்கல், சூடாக சிறுநீர் கழிப்பது போன்றவை. இவை அனைத்தையும் சரிசெய்யக்கூடிய ஒரு சூப்பரான பொருள் தான் பாதாம் பிசின். இது வெறும் 5 ரூபாயில் கிடைக்கக்கூடியது." என்று கூறினார்.
பாதாம் பிசினை எப்படி சாப்பிடலாம்?
* "ஒரு 5 கிராம் பாதாம் பிசினை எடுத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இந்த பாதாம் பிசின் ஜெல் போன்று இருக்கும். அதை மற்றொரு டம்ளரில் எடுத்து போட்டு, நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் தேனை சேர்த்து கலந்து குடிக்கலாம்.
* இல்லாவிட்டால், காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில் பாதாம் பிசினை சேர்த்து ஊற வைத்து, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், ஒரு டம்ளர் மோரில் இந்த பாதாம் பிசினை சேர்த்தும் சேர்க்கலாம். இது இன்னும் அருமையாக இருக்கும்" என்று கூறினார்.
பாதாம் பிசின் நன்மைகள்
1. மலச்சிக்கல் நீங்கும்
பாதாம் பிசினை ஊற வைத்து, காலையில் எழுந்ததும் தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, கோடையில் சந்திக்கும மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் பாதாம் பிசினில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால், பாதாம் பிசினை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வாருங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
2. உடல் சூடு குறையும்
கோடையில் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, உடல் சூடு தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே விலைக் குறைவில் உடல் சூட்டை குறைக்க நினைத்தால், பாதாம் பிசின் சிறந்த தேர்வாகும்.
3. செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்
ஊற வைத்த பாதாம் பிசினை மோருடன் சேர்த்து உட்கொள்ளும் போது, இதில் உள்ள புரோபயோடிக் மற்றும் நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சிறப்பாக செயல்படத் தூண்டி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
யாரெல்லாம் பாதாம் பிசினை சாப்பிடலாம்?
"பாதாம் பிசினை சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் என அனைவருமே சாப்பிடலாம். ஏன் கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு கூட இதை சாப்பிட கொடுக்கலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் பாதாம் பிசினை சாப்பிடும் போது தினமும் தேன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது." என்று டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! பணம் அதிகம் செலவழிக்காமல் உடல் சூட்டைக் குறைக்க அல்லது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நினைத்தால், இந்த பாதாம் பிசினை தினமும் சாப்பிடுங்கள். அதுவும் இதை நீருடன், மோருடன் மட்டுமின்றி, எலுமிச்சை ஜூஸ், சர்பத் என எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடுங்கள். அருமையாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
