Latest Updates
-
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்!
காலையில் இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க சிறுநீரகம் மோசமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Kidney Damage Symptoms In Tamil: நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுமே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றன. குறிப்பாக சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான பல வேலைகளை செய்கின்றன. முக்கியமாக நமது உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

அதுவும் இந்த சிறுநீரகங்கள்நமது உடலில் சுற்றிக் கொண்டிருக்கும் ரத்தத்தை சுத்தம் செய்து, கழிவுகள், நச்சுகள் மற்றும் அதிகப்படியான திரவங்களை உடலில் இருந்து அகற்றும் ஒரு வடிகட்டியாக செயல்படுகின்றன. அதுமட்டுமின்றி, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும், சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற எலக்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிக்கவும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யுவும், வைட்டமின் டி-யை செயல்படுத்தி எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
இப்படி பல முக்கியமான வேலைகளை செய்யும் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பாக அந்த அறிகுறிகள் அதிகாலையில் தெரியக்கூடும் என்பது தெரியுமா? இப்படி நமது உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கவனித்து உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை தீவிரமாவதைத் தடுப்பதோடு, ஆரம்பத்திலேயே சரிசெய்துவிடலாம். இப்போது ஒருவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால் காலையில் தெரியக்கூடிய அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
1. முகத்தில் வீக்கம்
சிறுநீரக பிரச்சனையின் முதல் அறிகுறியே முகத்தில் வீக்கம் ஏற்படுவது தான். எப்போது சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியவில்லையோ, அப்போது உடலால் அதிகப்படியான சோடியம் மற்றும் நீரை வெளியேற்ற முடியாமல் போகும். இந்நிலையில் உடலில் திரவங்கள் குவியத் தொடங்கும். இதை எடிமா என்று அழைப்பர். இப்படியான வேளையில் இரவு தூங்கும் போது, அந்த திரவம் முகத்தில் குறிப்பாக கண்களைச் சுற்றி தேங்கி, தூங்கி எழும் போது முகத்தை வீங்கச் செய்து காட்டுகிறது. எனவே உங்களுக்கு திடீரென்று தூங்கி எழும் போது முகம் இப்படி வீங்கினால், உடனே மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள்.
2. குமட்டல்
சிறுநீரக செயலிழப்பானது உடலில் யூரியா போன்ற நச்சுக்களின் அளவை அதிகரித்துவிடும். இந்நிலையை யூரிமியா என்று அழைப்பர். இந்த யூரியாவானது செரிமான மண்டலத்தில் நுழையும் போது, அது குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். எனவே இந்த அறிகுறிகளை ஒருவர் காலையில் சந்தித்தால், அதுவும் வெறும் வயிற்றில் இருக்கும் போது குமட்டல் உணர்வை சந்தித்தால், சிறுநீரகம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.
3. சிறுநீரில் மாற்றம்
சிறுநீரகங்களில் உள்ள பிரச்சனையை காலையில் எழுந்ததும் கழிக்கும் சிறுநீரைக் கொண்டே அறியலாம். சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், அது சிறுநீரில் மாற்றத்தை உண்டாக்கும். அதில் நுரையுடன் சிறுநீரை கழித்தால், அது புரோட்டீன் கசிவின் அறிகுறி. அதுவும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்திலோ அல்லது இரத்தம் கலந்து வெளிவந்தாலோ, சிறுநீரகங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.
4. கீழ் முதுகு வலி
சில சமயங்களில் சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், அது கீழ் முதுகு வலியை உண்டாக்கும். அதுவும் இந்த வலியானது மிகவும் கூர்மையாக இருக்கும். முக்கியமாக இந்த வலியை அதிகாலையில் அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. சரும வறட்சி மற்றும் அரிப்பு
வழக்கத்திற்கு மாறாக சருமம் அதிகமாக வறட்சி அடைந்தாலோ அல்லது அரிப்பு ஏற்பட்டாலோ, சிறுநீரகங்களில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எப்போது சிறுநீரங்களால் நச்சுக்களை இரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து வெளியேற்ற முடியவில்லையோ, அப்போது இரத்தத்தில் நச்சுக்கள் அதிகரித்து, அதன் விளைவாக சரும வறட்சி, அரிப்பு, சரும எரிச்சல் போன்றவற்றை அதிகம் சந்திக்க நேரிடும். முக்கியமாக அதிகாலையில் இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே கவனமாக இருங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுள் ஏதேனும் ஒன்று இருந்தால், சிறுநீரகங்களில் பிரச்சனை உள்ளது என்று நினைத்துவிட வேண்டாம். ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட அறிகுறிகளை தொடர்ந்து காலை வேளையில் சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

