Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்..
Meal Maker Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்தால், அடிக்கடி மீல் மேக்கரை சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் மீல் மேக்கரை செய்வீர்களா? சற்று அசைவ சுவையில் மீல் மேக்கரை செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் மசாலா அரைத்து செய்யுங்கள். இந்த மீல் மேக்கர் கிரேவியை சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, புலாவ், சாதம் போன்றவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்தால், பின் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.

உங்களுக்கு இந்த மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 2 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* புதினா - 10 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* முந்திரி - 7
* பெரிய தக்காளி - 1
* உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு...
* கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - சிறிது
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மீல் மேக்கர்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கிரேவி தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த மசாலா விழுது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்துக் கொண்டு, அதில்
நன்கு கொதிக்கும் சுடுநீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் மீல்
மேக்கரை 2 முறை கழுவிவிட்டு, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு
சேர்த்து கிளறி, பின் மீல் மேக்கரை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி
வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புதினா, கொத்தமல்லி, முந்திரி சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஊற வைத்த மீல் மேக்கரை சேர்த்து லேசாக நிறம் மாறும்
வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு
வதக்க வேண்டும். அதன் பின் அதில் சிறிது நீரை ஜாரில் ஊற்றி அலசி
சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன்
மசாலா அல்லது கரம் மசாலாவை சேர்த்து கிளறி, நன்கு எண்ணெய் பிரிய
வந்ததும், அதில் 2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மீல் மேக்கரை சேர்த்து கிளறி, மூடி
வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
