Latest Updates
-
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க.. -
40 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பு - எப்படி? இந்த ஒரு ஜப்பானிய பழக்கம் தான் காரணமாம்! -
சிங்கப்பூர் வெஜ் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ரைஸ் செஞ்சா இனிமே ஹோட்டல் பக்கமே போகமாட்டிங்க -
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்! -
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த 4 நபர்களுடன் சண்டையிடுவது உங்கள் நிம்மதியை காணாமல் போகச்செய்யுமாம் - சாணக்கிய ரகசியம்
Chanakya Niti: பண்டைய இந்தியயாவின் தலைசிறந்த தத்துவஞானி, பொருளாதார நிபுணர் மற்றும் இராஜதந்திரியான சாணக்கியர், சாணக்கிய நீதி என்று அறியப்படும் அவரது புகழ்பெற்ற நூலில் அவரது அறிவுரைகளையும், அனுபவங்களையும் தொகுத்துள்ளார். சாணக்கியரின் அறிவுரைகளை பின்பற்றுபவர்கள் வளமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று நம்பப்படுகிறது.

ஆச்சாரிய சாணக்கியர் தனது கோட்பாடுகள் மூலம் மனிதர்களுக்குச் சரியான வாழ்க்கை முறையை எடுத்துரைத்தார். இந்தக் கொள்கையின் வாயிலாக, கோபத்தினால் மனிதன் இழைக்கும் தீங்குகளைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். தனது சாணக்கிய நீதியில் ஒருவர் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கு சாணக்கியர், வாழ்க்கையில் ஒருபோதும் நான்கு வகையான மனிதர்களுடன் சண்டையிடவோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது என்று கூறியுள்ளார். ஆச்சாரிய சாணக்கியரின் கூற்றுப்படி, நாம் யாருடன் மோதக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா? இவர்களுடன் மோதினால் நமக்குத்தான் இழப்பு ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்கள்
ஆச்சார்ய சாணக்கியர் தனது 'சாணக்கிய நீதி'யில், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ குடும்ப உறுப்பினர்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். நாம் இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும்போதோ அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும்போதோ, நம் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் நமக்கு உதவ முன்வர மாட்டார்கள். தங்களின் அன்புக்குரியவர்களுடன் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரால் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆசிரியர்
நமது வாழ்க்கையில் ஆசிரியர் மற்றும் குருவின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. குருவே நம் வாழ்க்கையை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்கிறார். அவர் நம் மனதிலிருந்து அறியாமை எனும் இருளை நீக்கி, ஞானம் எனும் ஒளியால் நம்மை நிரப்புகிறார். நாம் எப்போதும் குருவை மதிக்க வேண்டும்; அவருடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யவோ அல்லது அவர்களை அவமதிக்கவோக்கூடாது.
முட்டாள்களுடன் சண்டையிடக்கூடாது
புத்திசாலித்தனம் இல்லாதவர்களுடனோ அல்லது மற்றவர்களைப் போலச் சிந்திக்கும் திறன் இல்லாதவர்களுடனோ ஒருபோதும் சண்டையிடக்கூடாது என்று கூறப்படுகிறது. அத்தகையவர்களுடன் விவாதிப்பதோ அல்லது சண்டையிடுவதோ உங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கும் செயலாகும். அத்தகையவர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்குத் தேவைப்படும்போது உதவுவதே சிறந்தது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
நண்பர்களுடன் சண்டையிடக்கூடாது
நண்பர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள். நாம் துன்பத்தில் இருக்கும்போது நமக்கு ஓடோடி வருபவர்கள் நம் நண்பர்கள் மட்டுமே. அதனால்தான் நாம் நண்பர்களுடன் ஒருபோதும் சண்டையிடக்கூடாது. நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது அவர்களின் குறைகளை மறந்து விட வேண்டுமே தவிர, ஒருபோதும் நண்பர்களை விட்டுவிடக்கூடாது. ஒரு நண்பரை இழப்பது என்பது, கண்மூடித்தனமாக நம்பக்கூடிய ஒரு துணையை இழப்பதற்குச் சமம் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications

