Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
Mars Nakshatra Transit On 24 July 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது செவ்வாய் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த செவ்வாய் ஜூலை 24 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அப்போது அவர் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். சொந்த நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தலைமைத்துவ திறன்கள் மேம்படும், நிதி நிலையில் உயர்வு ஏற்படும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல உயரத்தை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல ஆதாயங்களைத் தரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நல்ல லாபத்தையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காண்பார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த செவ்வாய் பெயர்ச்சியால் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, அதன் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சந்தோஷமும், அமைதியும் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இக்காலத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



