Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
Hotel Style Aloo Dum Recipe in Tamil: வழக்கமாக சப்பாத்தி மற்றும் பூரிக்கு குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும். சில சமயங்களில் சிக்கன் அல்லது மட்டன் வைத்து சைடிஷ் செய்யலாம். ஆனால் எல்லா நேரத்திலும் இவற்றையே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் புதிய சைடிஸ்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.

புதிய சைடிஷ் என்று வரும்போது அதை உருளைக்கிழங்கை வைத்து முயற்சிக்கலாம். உருளைக்கிழங்கை வைத்து பல அட்டகாசமான சைடிஸ்களை சமைக்கலாம். அதில் ஒன்றுதான் தம் ஆலு. இந்த தம் ஆலு வட இந்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். இந்த தம் ஆலு அசைவ உணவு சுவையிலேயே இருக்கும். இது சப்பாத்தி, பூரி, புலாவ் என அனைத்திற்க்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த ரெசிபியை ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு நார்த் இந்தியன் ஸ்டைல் தம் ஆலு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தம் ஆலு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1½ ஸ்பூன் கடலை மாவு
- ½ கப் தயிர்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
- 1 பிரியாணி இலை
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 1 டீஸ்பூன் மல்லித் தூள்
- ½ கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் கடலை மாவு மற்றும் கசூரி மேத்தியைச் சேர்க்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- அதன்பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- வெங்காயம் நன்றாக வெந்து, லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 2 தக்காளியை விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- வேகவைத்த உருளைக்கிழங்கை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து ஒரு நிமிடம் வேக வைக்கவும். இப்போது வாணலியில் தயிரைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- எண்ணெய் பிரியத் தொடங்கும்போது, அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
- தண்ணீர் கொதிக்கும் போது நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து 2 நிமிடங்கள் வேக விடவும். அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான தம் ஆலு ரெடி.
- இதே ரெசிபியில் உருளைக்கிழங்குக்கு பதிலாக பனீர், வெண்டைக்காயை வைத்தும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications