Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசராக அறியப்படுகிறார். புதன் வணிகம், தகவல் தொடர்பு மற்றும் பேச்சாற்றலின் அதிபதியாகள் கருதப்படுகிறார். எனவே ஜோதிடத்தில் புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. புதன் கிரகம் ஜூலை 7 அன்று மிதுன ராசிக்குள் நுழைந்தது, தற்போது புதன் வக்ர நிலையில் பயணித்து வருகிறது, மேலும் இக்காலம் ஜூலை 24 வரை நீடிக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதனின் இந்த நகர்வு தாமதங்கள், தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இந்த வக்ர பெயர்ச்சியால் தங்கள் தொழில், நிதி மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் தடைகளைச் சந்திக்க நேரிடலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
புதன் வக்ரமானது மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதாரரீதியான சிக்கல்களை கொண்டு வரக்கூடும். ஜூலை 24 வரை கடன் கொடுப்பது, அபாயகரமான முதலீடுகளைச் செய்வது அல்லது புதிய முயற்சிகளைத் தொடங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சட்டரீதியான தகராறுகளில் இருந்து விலகி இருங்கள், மேலும் எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும்.
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும், இல்லையெனில் அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் சில தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் புதன் வக்ர காலகட்டத்தில் சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிலம் அல்லது வீடு வாங்குதல் மற்றும் விற்பதில் தாமதங்களோ அல்லது சிக்கல்களோ ஏற்படலாம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் ஏதேனும் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அதை ஒத்தி வைப்பது நல்லது, இல்லையெனில் நீங்கள் நஷ்டமடையக்கூடும். உங்கள் வேலையில் தாமதம் ஏற்படலாம், மேலும் கடந்த காலத்தில் நீங்கள் கடனாக கொடுத்தப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தடைகள் ஏற்படலாம்.
நீங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தால், புதனின் இந்த வக்ர பெயர்ச்சி காரணமாக தாமதம் ஏற்படலாம். உங்கள் வேலையிலும் பிற தொழில் முயற்சிகளிலும் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடும். உங்களின் அனைத்து திட்டங்களிலும் ஏதாவது தடைகள் இருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் நீங்கள் மிகவும் சோர்வாகவும், அழுத்தமாகவும் உணர்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர இயக்கம் பணியிடத்தில் சவால்களை உருவாக்கக்கூடும். உயர் அதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடனான தவறான புரிதல்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடும், எனவே அமைதியாக இருந்து உங்கள் பொறுப்புகளில் கவனம் செலுத்துங்கள். உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் ரகசியங்கள் உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.
வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். நிதி நெருக்கடி மோசமடைவதைத் தடுக்க தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் துணையிடம் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
