Latest Updates
-
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம்
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: பீட்ரூட் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு சூப்பர் ஃபுட் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த பீட்ரூட் சருமத்தின் அழகையும் மேம்படுத்த உதவும் என்பது தெரியுமா? ஏனெனில் இதில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இவை முகப்பரு மற்றும் கருந்திட்டுக்களை போக்கவும் உதவி புரிந்து, பொலிவிழந்த முகத்தை பொலிவாக்க உதவும்.

அதற்கு பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்ப்பது மட்டுமின்றி, அவற்றைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பை கொடுத்து வந்தால், சருமம் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். கீழே சரும அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த, பீட்ரூட்டைக் கொண்டு சருமத்திற்கு எப்படியெல்லாம் பராமரிப்பு கொடுக்கலாம் என்பது குறித்து காண்போம்.
1. பீட்ரூட் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் தயிர் அல்லது தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை குறையும்.
2. பீட்ரூட் ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி அல்லது சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் ஸ்க்ரக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் சருமத்துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்குவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும்.
3. பீட்ரூட் லிப் பாம்
* உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகளை பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள பீட்ரூட் பெரிதும் உதவி புரியும்.
* அதற்கு தேங்காய் எண்ணெயுடன் சிறிது பீட்ரூட் ஜூஸை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தினமும் இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவுங்கள்.
* இப்படி தினமும் செய்து வரும் போது, கருப்பாக இருக்கும் உதடுகள் பிங்க் நிறத்தில் மாறுவதைக் காணலாம்.
4. பீட்ரூட் மிஸ்ட்
* முகம் புத்துணர்ச்சியிழந்து காணப்படுகிறதா? உடனடியாக முகத்தின் பொலிவை கூட்ட வேண்டுமா? அப்படியானால் பீட்ரூட் மிஸ்ட் தயாரித்து பயன்படுத்துங்கள்.
* அதற்கு பீட்ரூட் ஜூஸ் உடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பகல் வேளையில் முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.
* இப்படி செய்யும் போது முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.
5. பீட்ரூட் ஜூஸ்
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது போல் நமது உடல் ஆரோக்கியமாக இருந்தாலே, சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும். எனவே பீட்ரூட் ஜூலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் நீங்கி, இரத்தம் சுத்தமாகும். இப்படி உடலில் இரத்தம் நச்சுக்களின்றி சுத்தமாக இருந்தால், இயற்கையாகவே சருமம் ஆரோக்கியமாக காட்சியளிக்கும். ஆகவே எப்பவும் அழகாக தெரிய பீட்ரூட்டை சருமத்தில் பயன்படுத்துவது மட்டுமின்றி, அதன் ஜூஸை குடிக்கவும் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
