Latest Updates
-
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா?
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்!
Chronic Disease Awareness Day 2026: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10 ஆம் தேதி நாள்பட்ட நோய்கள் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கமே, நமது உடல்நலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நாள்பட்ட நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதாகும்.

கோவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் திடீரென தாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. ஆனால் நாள்பட்ட நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறியும் இல்லாமல், நமக்கே தெரியாமல் மெதுவாக உடலுக்குள் வளர்கின்றன. பலருக்கு நோய் இருப்பதே தெரியாமல், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட பிறகே அது கண்டறியப்படுகிறது.
சென்னை கிளீனீகிள்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த உள் மருத்துவ மற்றும் நீரிழிவு சிகிச்சை நிபுணரான டாக்டர். பிரசன்னா கார்த்திக் அவர்கள், இந்த நாள்பட்ட நோய்கள் குறித்தும், அவற்றின் அறிகுறிகள் பற்றியும் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, "திடீர் (Acute) நோய்கள் என்பது சில நாட்களுக்குள் தொடங்கி, குறுகிய காலத்தில் குணமாகக்கூடிய நோய்களாகும். இவற்றிற்கு பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால சிகிச்சையும், குணமடையும் வாய்ப்பும் இருக்கும். டெங்கு காய்ச்சல், உணவு நச்சுத்தன்மை (Food Poisoning), சிறுநீரகப் பாதை தொற்று (Urinary Tract Infection) போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.
நாள்பட்ட (Chronic) நோய்கள் என்பது மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கும் நோய்கள். இவை பெரும்பாலும் முழுமையாக குணப்படுத்தப்படுவதில்லை; ஆனால் சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் திறம்பட கட்டுப்படுத்தப்படலாம். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் தைராய்டு சுரப்பி செயல்பாடு குறைபாடு (Hypothyroidism) ஆகியவை இதற்கு முக்கியமான உதாரணங்களாகும்".
1. நீரிழிவு நோய் (Diabetes Mellitus)
நீரிழிவு நோய் என்பது உடலின் தேவைக்கேற்ப இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத நிலையாகும். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம்.
அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காரணமின்றி உடல் எடை குறைதல், அதிக பசி, நீடித்த சோர்வு, பார்வை மங்குதல், ஆறாத காயங்கள், மீண்டும் மீண்டும் தொற்றுகள் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. இருப்பினும், பலருக்கு ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இருக்காமல் இருக்கலாம். எனவே, வழக்கமான உடல்நல பரிசோதனைகள் மிகவும் அவசியம்.
2. உயர் இரத்த அழுத்தம் (Hypertension)
உயர் இரத்த அழுத்தம் "அமைதியான கொலையாளி" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இதயம், மூளை, கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.
சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல், பார்வை மங்குதல் அல்லது மூச்சுத்திணறல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு சிக்கல்கள் உருவாகும் வரை எந்த அறிகுறியும் இருக்காது. எனவே, ஒவ்வொரு பெரியவரும் தவறாமல் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.
3. உடல் பருமன் (Obesity)
உடல் பருமன் இன்று இளம் வயதினரிடையே வேகமாக அதிகரித்து வரும் ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினையாகும். இது வெறும் தோற்றம் சார்ந்த பிரச்சினை அல்ல; மாறாக, டைப்-2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம், நாள்பட்ட சிறுநீரக நோய், சில வகை புற்றுநோய்கள், மூட்டு தேய்மானம், கல்லீரல் கொழுப்பு நோய், குழந்தையின்மை மற்றும் தூக்கத்தின் போது மூச்சுத்திணறல் (Sleep Apnea) போன்ற பல நோய்களுக்கு முக்கிய ஆபத்துக் காரணியாகும். அதிகப்படியான உடல் கொழுப்பு இதயம், நுரையீரல் மற்றும் மூட்டுகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி, வாழ்க்கைத் தரத்தையும் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது.
4. இதய நோய்கள்
இதய நோய்கள் பொதுவாக திடீரென ஏற்படும் நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை போன்ற அறிகுறிகளுடன் தோன்றலாம். சிலருக்கு அதிக சோர்வு அல்லது அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் மட்டுமே இருக்கலாம். இதய பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்வது கடுமையான சிக்கல்களைத் தவிர்க்க உதவும். இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு (Cholesterol) இருப்பதும் இதய நோய்களுக்கு முக்கிய காரணமாகும்.
5. நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease)
நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது சிறுநீரக செயல்பாட்டின் 90 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட பிறகே அறிகுறிகள் தென்படும் ஒரு நோயாகும். சிறுநீர் அளவு குறைதல், முகம் மற்றும் கால்களில் வீக்கம் போன்றவை பின்னர் தோன்றும். ஆரம்ப நிலையில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலமே இதைக் கண்டறிய முடியும். நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் சிறுநீரக சேதத்திற்கு முக்கிய காரணங்களாகும்.
6. தைராய்டு சுரப்பி செயல்பாடு குறைபாடு (Hypothyroidism)
தைராய்டு சுரப்பி செயல்பாடு குறைபாடு என்பது தைராய்டு சுரப்பி தேவையான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத நிலையாகும். இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) கட்டுப்படுத்துவதால், அவை குறையும்போது உடலின் பல செயல்பாடுகளும் மந்தமாகின்றன.
நீடித்த சோர்வு, காரணமின்றி உடல் எடை அதிகரித்தல், குளிரை அதிகமாக உணர்தல், தோல் வறட்சி, மலச்சிக்கல், தலைமுடி உதிர்தல், முக வீக்கம், தசை வலி, குரல் கரகரப்பு, சிந்தனை மந்தம், கவனக்குறைவு, மனச்சோர்வு மற்றும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இவை மெதுவாக தோன்றுவதால், பலர் வயது முதிர்வு அல்லது மனஅழுத்தத்தின் விளைவாக தவறாக நினைத்து அலட்சியப்படுத்துகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

