Latest Updates
-
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..!
Weight Loss Diet Chart In Tamil: உலகில் பெரும்பாலான மக்கள் அவதிப்படும் ஒரு பிரச்சனை தான் உடல் பருமன். தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், உடலில் கொழுப்புக்கள் தேங்கி உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. இப்படி உடல் பருமனாகிவிட்டால் தினசரி செயல்பாடுகளை செய்வது கூட சிரமமாக இருப்பதோடு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயமும் அதிகரித்துவிடும்.

அதுவும் அதிகரித்த உடல் எடையைக் குறைக்க முயற்சிக்காவிட்டால், நாளடைவில் இதய நோய் போன்ற அபாயகரமான நோய்களின் தாக்கமும் அதிகரித்துவிடும். எனவே ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இப்படி அதிகரித்த உடல் எடையைக் குறைக்க ஏராளமான டயட்டுகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் அனைத்து டயட்டுகளுமே அனைவருக்கும் சிறப்பான பலனைத் தந்துவிடுவதில்லை. சிலருக்கு சில டயட்டுகள் நல்ல பலனை தரும், இன்னும் சில டயட்டுகள் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
இப்படி உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்காகவே டாக்டர். பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 'டயட் சார்ட்' ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த டயட்டை ஒருவர் தினமும் பின்பற்றி வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம் என்றும் கூறியுள்ளார். அந்த டயட் சார்ட் பின்வருமாறு:
காபி, டீ-க்கு பதிலாக..
"காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக, ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சிறிது கருஞ்சீரகம், வெந்தயம், புதினா இலைகள், மல்லி விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, குடித்து வர, உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
காலை உணவு
இந்த டயட்டில் காலை உணவின் போது, நீங்கள் இட்லி, தோசை பிரியர் என்றால், 4 இட்லி, தோசை சாப்பிடும் இடத்தில் 2 இட்லி, தோசை சாப்பிடலாம். அத்துடன் ஒரு பௌல் வெஜிடேபிள் சாலட்டை சாப்பிடலாம். ஏனெனில் இந்த சாலட்டில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு.
நண்பகல்
காலை உணவுக்கு பின், 11-11.30 மணியளவில் பசிப்பது போன்று இருந்தால், நட்ஸ், பூசணி விதைகள், நிலக்கடலை போன்றவற்றை கொஞ்சமாக சாப்பிடலாம். அத்துடன் சுடுநீரையும் குடிக்க வேண்டும்.
மதிய உணவு
மதிய உணவை 1-2 மணிக்குள் சாப்பிட வேண்டும். இது தான் மிகவும் முக்கியம். அதுவும் அப்போது வெள்ளை அரிசி சாதத்திற்கு பதிலாக, கருப்பு கவுனி அரிசி, கைக்குத்தல் அரிசி சாதம், மாப்பிள்ளை சம்பா அரிசி போன்ற கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவான, கலோரி குறைவான சாதத்தை உட்கொள்ளும் போது, சற்று அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. அதோடு சாலட்டுகள், பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம்.
மாலை வேளை
மாலை வேளையில் 5-5.30 மணியளவில் க்ரீன் டீ, ப்ளாக் காபி, ப்ளாக் டீ போன்றவற்றை சர்க்கரை சேர்க்காமல் உட்கொள்ளலாம். இல்லாவிட்டால் சுடுநீரை மட்டும் குடிக்கலாம். பசி எடுத்தால், பச்சை பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றை வேக வைத்து சாப்பிடலாம்.
இரவு உணவு
இரவு உணவை 8-9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஒருவேளை வேலைக்கு செல்பவர்களால் அப்போது முடியாவிட்டால், 10 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அப்போது இட்லி, தோசைகளை சாப்பிடுவதைத் தவிர்த்து, 2-3 சப்பாத்திகளை சாப்பிடலாம். அதுவும் காய்கறிகள் அதிகம் சேர்த்த குருமாவுடன் சாப்பிடலாம். வேண்டுமானால் அத்துடன் ஒரு பௌல் பழங்கள், காய்கறிகளால் ஆன சாலட்டுகளை சாப்பிடலாம். அசைவ பிரியர் என்றால் க்ரில் செய்யப்பட்ட மீன் அல்லது சிக்கனை சாப்பிடலாம்.
சாப்பிட்டு முடித்த உடனே தூங்க செல்லாமல், 15-20 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இரவு உணவு உட்கொண்ட பின் 1 - 1 1/2 மணிநேரத்திற்குள் தூங்க செல்வது நல்லது. எவ்வளவு நேரம் விழித்துள்ளோமோ, அவ்வளவு பசி எடுக்கத் தொடங்கும். எனவே சீக்கிரம் தூங்க செல்ல வேண்டும். ஒருவேளை பசி எடுத்தால், நீர் அதிகம் சேர்த்த மஞ்சள் தூள் கலந்த பாலைக் குடிக்கலாம்.
இந்த டயட் மேற்கொள்ளும் காலங்களில் அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க, மதிய வேளை அல்லது இரவு நேரங்களில் தயிரை கொஞ்சமாக உணவில் சேர்த்து கொள்ளுங்கள்." என்றும் டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! டாக்டர் பிள்ளை கூறிய இந்த டயட்டுடன், தினசரி உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தால், உடல் எடை வேகமாக குறைவதைக் காணலாம். முக்கியமாக எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும், அதில் நம்பிக்கையுடன் இறங்குங்கள். இதனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

