சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப வாரம் 2 முறை இந்த பானத்தை 1 டம்ளர் குடிங்க..- கூறும் டாக்டர். பிள்ளை!

Diabetes In Tamil: இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நிலையாகும். சொல்லப்போனால் சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு நோய் அல்ல, அது ஒரு நாள்பட்ட கோளாறு. உடலில் இன்சுலின் அளவு போதுமான அளவு சுரக்காமல் இருந்தாலோ அல்லது அதை திறம்பட உடலால் பயன்படுத்த முடியாமல் போனாலோ, இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

Doctor Shares a Magical Drink That Helps Prevent Diabetes

சொல்லப்போனால், இது ஒருவரது மோசமான வாழ்க்கை முறையினால் வரக்கூடிய ஒரு பிரச்சனையாகும். இந்த சர்க்கரை நோய் முன்பெல்லாம் குறிப்பிட்ட வயதை எட்டிய பின்பு தான் வந்தது. ஆனால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கு தினந்தோறும் மருந்து மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். இது மிகவும் கொடுமையான விஷயம்.

ஆனால் இப்படிப்பட்ட சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்க உதவும் ஒரு அற்புதமான பானம் குறித்து டாக்டர் பிள்ளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் எல்லோருக்கும் வந்து பாடாய் படுத்துகிறது. பொதுவாக இரத்த சர்க்கரையை பரிசோதனை செய்யும் போது 120 இருந்தால், சாதாரணம். அதுவே உணவுக்கு முன் பரிசோதனை செய்யும் போது 100-க்கும் குறைவாக இருந்தால், சாதாரணம். அதுவே ஏதாவது சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து எடுத்து பார்க்கும் போது, 140-க்குள் இருந்தால் நல்லது. அதுவே HbA1c பரிசோதனை எடுத்து பார்க்கும் போது 5.5-க்கு உள்ளே இருந்தால் நல்லது. அதுவே 5.7-க்கு மேல் போனால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதுவே 6.3-க்கு மேல் போனால் சர்க்கரை நோய் என்று அர்த்தம்" என்று கூறினார்.

மேலும் சர்க்கரை நோய் என்பது ஒரு வியாதி அல்ல. அது உடலின் சமநிலை தவறும் பட்சத்தில் வரக்கூடியது. நமது உடலில் எப்போதும் சர்க்கரை, உப்பு, கொலஸ்ட்ரால் போன்றவை இருக்கும். அதுவும் சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர சர்க்கரை நோயை இயற்கையாக கட்டுப்படுத்தும் ஒரு அற்புதமான பானம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

:இந்த பானத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வரும் போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவதை கண்கூடாக காணலாம். என்ன தான் மருத்து மாத்திரைகளை எடுத்தாலும், இரத்த சர்க்கரை கட்டுப்படுவதில்லை அல்லவா? மேலும் இந்த சர்க்கரை நோயிலும் டைப்-1, டைப்- என பல வகைகள் உள்ளன. இந்நிலையில் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வரும் போது ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்." என்றும் கூறினார்.

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* சோம்பு - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - சிறிய துண்டு
* செம்பருத்திப் பூ
* தண்ணீர் - 2 கப்

தயாரிக்கும் முறை:

* ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அத்துடன் 1 டீஸ்பூன் சோம்பு, 1 பிரியாணி இலை, சிறிய துண்டு பட்டையை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் 1 செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* அப்படி கொதிக்கும் போது, 2 டம்ளர் நீரானது 1 டம்ளர் நீராக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் குடிக்க வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

* இந்த பானம் இரத்த சர்க்கரையைக் குறைக்கும் பண்புகளை அதிகம் கொண்டிருப்பதால், இதை வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும்.

* அதுவும் முதலில் இரண்டு வாரத்திற்கு மட்டும் பின்பற்றினால் போதும். ஒரு வாரத்திற்கு 2 முறை என இரண்டு வாரத்திற்கு 4 முறை குடிக்க வேண்டும். அப்படி குடித்த பின் இரத்த சர்க்கரையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

* முக்கியமாக இந்த பானத்தை குடித்து வரும் போது, ஒவ்வொரு முறை குடித்த பின்னரும் இரத்த சர்க்கரையை பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நன்கு குறைந்து லோ சுகர் ஆகிவிட்டால், இதை குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.

* ஒருவேளை சுகர் படிப்படியாகத் தான் குறைகிறது என்றால், அதிகபட்சமாக 1 மாதம் வரை குடிக்கலாம். ஆனால் தொடர்ந்து குடிக்கக்கூடாது. முக்கியமாக லோ சுகர் உள்ளவர்கள் இந்த பானத்தைக் குடிக்கக்கூடாது என்றும் கூறினார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion