Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
ராகி கூழ் குடிச்சா உண்மையில் சுகர் குறையுமா அதிகரிக்குமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Ragi Koozh And Blood Sugar: தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் தான்.
அதுவும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலருக்கும் வயதுக்கு ஏற்ப நீரிழிவு நோயின் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

ICMR INDIAB-17 ஆய்வின்படி, இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 136 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதோடு தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது சர்க்கரை நோயாளிகளிடையே சிறுதானிய உணவுகள் பிரபலமாக உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பலர் ராகி கூழை தங்களின் காலை உணவில் சேர்த்து வருகிறார்கள். ஆனால் உண்மையிலேயே ராகி கூழ் இரத்த சர்க்கரையைக் குறைக்குமா என்றால் தெரியாது. இதுக்குறித்து நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "சுகர் வந்துவிட்டது என்று தெரிந்தவுடனேயே, படித்தவர்கள் அனைவரும் இன்ஸ்டன்ட் ஓட்ஸை வாங்கி கஞ்சி வைத்து குடிக்கிறார்கள். படிக்காத பாமர மக்கள் ராகி/கேப்பை கூழ் வைத்து குடிக்கிறார்கள். ஆனால் இவை இரண்டுமே இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கத் தான் செய்யும்" என்று கூறினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த சிறுதானியங்கள்
"சிறு தானியங்களிலேயே நிறைய வகைகள் உள்ளன. சாமை, திணை, குதிரைவாலி, வரகு அரிசி, பனிவரகு அரிசி போன்றவை நேர்மறையான நன்மைகளை வழங்கும் சிறுதானியங்களாகும். சிறுதானியங்களிலேயே கிளைசீமிக் இன்டென்ஸ் மிகவும் குறைவாக இருப்பது இந்த வகை சிறுதானியங்களில் தான். மேலும் கிளைசீமிக் லோடும் குறைவாக உள்ளது.
அதுவும் சாமை பொங்கல், வரகரிசி பொங்கல், குதிரைவாலி பொங்கல் என்று சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. அதிலும் உளுந்து, வெந்தயம், பாசிப்பருப்பு எல்லாம் சேர்த்து அரைத்து இட்லியாகவோ, தோசையாகவோ சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு நன்கு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் கம்பு மிதமான கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டது.
ராகி கூழை ஏன் குடிக்கக்கூடாது?
இந்த சிறுதானிய வகை வரிசையிலேயே அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பது ராகி, அதாவது கேழ்வரகு, கேப்பையில் தான். இதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் 70 ஆகும். 100 கிராம் ராகி சாப்பிட்டால், அதன் கிளைசீமிக் லோடு 15-18 வரை உள்ளது.
பொதுவாக 10-க்கு கீழே கிளைசீமிக் லோடு இருந்தால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். 10-20 இருந்தால் மிதமான அளவு சாப்பிடலாம். 20-க்கு மேலே இருந்தால் தொடவே கூடாது. ஆனால் இதில் 100 கிராம் ராகியில் 15-18 தானே உள்ளது என்று கேட்கலாம்.
ஆனால் ராகியை கூழாக குடிக்கும் போது, 100 கிராம் அளவுள்ள 1 டம்ளர் மட்டும் குடிக்கமாட்டோம். 2-3 டம்ளர் கூழை குடிப்போம். அப்படி குடித்தால் 2-3 மடங்கு கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகரித்து, இரத்த சர்க்கரையும் உயரும். என்று கூறினார்.
ராகியை எப்படி சாப்பிடலாம்?
ராகியில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பது என்பது உண்மை தான். ஆனால் அதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் கிளைசீமிக் லோடு அதிகமாக இருப்பதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ராகி ஒத்து வராது. அப்படியே ராகி தான் சாப்பிட வேண்டும் என்றால், 100 கிராம் ராகியை களியாக செய்து சாப்பிடுங்கள். ராகியை கஞ்சியாகவோ, கூழாகவோ சாப்பிடாதீர்கள் என்றும் டாக்டர் கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்து இதுவரை ராகி கூழை தினசரி காலை உணவின் போது எடுத்து வந்தால், உடனே அதை நிறுத்துங்கள். வேண்டுமானால் ராகியைக் கொண்டு களி செய்து சாப்பிடுங்கள். இதனால் சர்க்கரை அளவு அதிகரிக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


