Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சர்க்கரை நோயாளிகள் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம் - விளக்குகிறார் கோச். பாஸ்கர்
Diabetes And Exercise: உலகில் சர்க்கரை நோயால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சர்க்கரை நோயால் நாளுக்கு நாள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு வளர்சிதை மாற்ற கோளாறு. சொல்லப்போனால் நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் சில மாற்றங்களால் ஏற்படக்கூடிய ஒருவித கோளாறு தான் சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு.
இந்த சர்க்கரையை நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அதை முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. ஆனால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளுடன், வாழ்க்கை முறையில் ஒருசில மாற்றங்களை செய்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். முக்கியமாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் முதலில் மருத்துவர் மருந்து மாத்திரைகளுடன், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு அறிவுறுத்துவார்.

இதனால் சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் மனதில் இதுக்குறித்த ஒருசில கேள்விகள் இருக்கும். எனவே இப்போது சர்க்கரை நோயாளிகள் ஏன் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்பது குறித்து மனித இயக்க அறிவியல், வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளரான ஏ. பாஸ்கர் அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் விரிவாக பகிர்ந்து கொண்டுள்ளார். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சர்க்கரை நோயாளிகள் எதனால் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
இதற்கு கோச். பாஸ்கர் கூறியதாவது, "சர்க்கரை நோயாளிகளுக்கு உடற்பயிற்சியானது மிகவும் முக்கியம் ஆகும். உடற்பயிற்சி என்பது உடல் அசைவுகளாகும். இப்படிப்பட்ட உடற்பயிற்சியில் சர்க்கரை நோயாளிகள் தினமும் ஈடுபட்டு வந்தால், அதுவும் நடைப்பயிற்சியில் தினமும் ஈடுபட்டு வந்தாலே நிறைய நன்மைகளைப் பெறலாம். அது என்னவெனில் வாக்கிங் மேற்கொள்ளும் போது உடலின் அனைத்து மூட்டுக்களும் அசைவுகளைப் பெறும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், தசைகளில் இரத்த ஓட்டம் சீராகி சோர்வு குறையும், சருமம் பொலிவு பெறும் மற்றும் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் வாக்கிங் பயிற்சியை மேற்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் ஆற்றலாக எரிக்கப்படுகிறது. இதன் மூலம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான க்ளுக்கோஸ் குறைய ஆரம்பித்து, சீரான அளவில் பராமரிக்கப்படுகிறது. இதனால் தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை தினமும் சிறிது நேரம் வாக்கிங் செல்லுமாறு கூறுகின்றனர்.
ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெறும் வாக்கிங் மட்டும் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. அவர்கள் ஸ்ட்ரென்ட் ட்ரெயினிங், ரெசிஸ்டன்ஸ் ட்ரெயினிங், விருப்பமான விளையாட்டுகள், ஏரோபிக்ஸ், சிலம்பம், யோகா போன்ற எந்த ஒரு செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். ஆனால் அவற்றை முறையாக ஆரம்பத்தில் இருந்து செய்ய வேண்டும்.
உதாரணமாக, வாக்கிங் பயிற்சியையே எடுத்துக் கொள்ளலாம். வாக்கிங் செல்ல நினைப்பவர்கள், எடுத்ததும் நடக்கத் தொடங்காமல், முதலில் 5 நிமிடம் வார்ம் அப் பயிற்சிகளில் ஈடுபட்டு, அதன் பின் வாக்கிங் மேற்கொள்ள வேண்டும். அதேப் போல் வாக்கிங் முடித்ததும், உடனே ஓய்வு எடுக்காமல், கூல்டவுன் பயிற்சியை செய்ய வேண்டும். இது வாக்கிங் பயிற்சிக்கு மட்டுமின்றி, எந்த ஒரு உடற்பயிற்சியில் அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவதாக இருந்தாலும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
சர்க்கரை நோயாளிகள் ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் வாக்கிங் செல்லலாம்?
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 30-40 நிமிடம் வாக்கிங் பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது. இப்படி வாக்கிங் செல்வதால் இரத்த சர்க்கரை அளவு குறைவது மட்டுமின்றி, கட்டுப்பாட்டிலும் இருக்கும். அதுமட்டுமின்றி, இப்படி சர்க்கரை நோயாளிகள் வாக்கிங் செல்வதால் உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக இருக்கலாம்.
முடிவு
சர்க்கரை நோய் என்பது ஒரு கோளாறு தானே தவிர, ஒரு நோய் அல்ல. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் விரும்பினால் சரியான பயிற்சியாளரின் உதவியுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, மருத்துவர் வழங்கும் மருந்து மாத்திரைகளையும், சரியான உணவு முறை, சரியான தூக்கம், போதுமான நீரை அருந்துவது, சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், 80-90 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். என்று கோச்.பாஸ்கர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications