Latest Updates
-
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, 1 மாசத்துல உடல் எடை குறைவதை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு பெரிய நஷ்டம் தேடிவரப்போகுதாம் -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்!
மாத்திரையின்றி பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்லும் இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்..
World Hypertension Day 2026: தற்போது இளம் வயதினரிடையே இரத்த அழுத்த பிரச்சனையானது அதிகரித்து வருகிறது. உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹைப்பர் டென்சன் என்பது வெறும் ஒரு நோய் மட்டுமல்ல. அது பக்கவாதம், மாரடைப்பு, இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் மறதி நோய் (Dementia) ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய மிகவும் கொடிய நோய். அதாவது, ஹைப்பர் டென்சன் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல், இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடிய ஒரு மோசமான நோயாகும்.

இப்படிப்பட்ட ஹைப்பர் டென்சன் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக ஹைப்பர் டென்சன் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். இதை ஒருவர் தவறாமல் எடுக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.
அதிர்ஷ்டவசமாக, இந்த உயர் இரத்த அழுத்தத்தை உணவுகளின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இப்படி உணவுகளால் கட்டுப்படுத்த முடிந்தால், மருந்து மாத்திரைகளை போட வேண்டிய அவசியம் இருக்காது. இதுக்குறித்து டாக்டர் பிள்ளை அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் மருந்து மாத்திரையின்றி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் 5 உணவுகளை பட்டியலிட்டுள்ளார். அந்த உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தாலே கட்டுப்படுத்திவிடலாம்.
அதில் அவர் கூறியதாவது, "இரத்த அழுத்த நோயில் இரண்டு உள்ளன. அவை ஹை பிபி, லோ பிபி. இதில் ஹை பிபி தான் ஒரு நோய். ஹை பிபி உள்ளவர்களுக்கு அவ்வப்போது லோ பிபி ஏற்பட்டு பிரச்சனையை ஏற்படுத்தும். இந்நிலையில் பிபி-யி கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நார்மல் பிபி என்பது 120/80, 60-65 வயதுள்ளவர்களுக்கு 120 முதல் 140 வரை இருந்தாலும் நார்மல் தான்.
எவ்வளவு தான் மருந்துகளை எடுத்தாலும், சில சமயங்களில் இரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படும். ஆனால் ஒரு 5 உணவுகளை தினமும் உட்கொள்ளும் போது கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கியமாக இந்த உணவுகள் அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவைகள்." என்று கூறினார்.
1. வாழைப்பழம்
"வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எப்போதும் உடலில் சோடியமும் பொட்டாசியமும், கீரியும் பாம்பும் போல. உடலில் சோடியம் அதிகமாக இருக்கும் போது, நீர்கோர்வை ஏற்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்நிலையில் வாழைப்பழத்தை சாப்பிடும் போது, அதில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகங்களை செயல்படுத்தி சோடியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றி, இரத்த அழுத்தத்தை குறைக்கும். எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். அதுவும் உயர் இரத்த அழுத்தத்துடன் சர்க்கரை நோயும் இருந்தால், தினமும் 1 வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும். ஆனால் பிபி மட்டும் தான் உள்ளது என்றால் காலை 1, மாலை 1 என இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடலாம்." என்று கூறினார்.
2. டார்க் சாக்லேட்
"டார்க் சாக்லேட்டில் பாலிஃபீனால்கள், மெக்னீசியம், ப்ளேவோனால்கள் போன்றவை அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் உடலில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி புரிகின்றன. அதுவும் இது உடலில் நைட்ரஸ் ஆக்ஸைடை அதிகரித்து, அதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது." என்று கூறினார்.
3. பீட்ரூட்
"உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய மூன்றாவது உணவு தான் பீட்ரூட். இந்த பீட்ரூட்டில் ஆர்கானிக் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலினுள் செல்லும் போது, நைட்ரஸ் ஆக்ஸைடாக மாறி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது." என்று கூறினார்.
4. மாதுளை
"மாதுளம் பழம் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. நமது உடலில் ரெனின் ஆன்ஜியோடென்சின் சிஸ்டம் என்ற ஒன்று உள்ளது. இது சிறுநீரகங்களுடனும் இதயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. மாதுளையை சாப்பிடும் போது, அது அந்த சிஸ்டமில் உள்ள நொதிகளை குறைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இந்த சிஸ்டத்தின் வேலை என்றால் உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது தான். எனவே மாதுளையை அதிகம் சாப்பிடும் போது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்" என்று டாக்டர் கூறினார்.
5. இஞ்சி
"இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பதை அனைவரும் அறிவோம். இந்த இஞ்சியை உட்கொள்ளும் போது, அது கால்சியம் சேனல் ப்ளாக்கராக செயல்படுகிறது. உடலில் கால்சியம் சேனல் செயல்படும் போது, உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும் மற்றும் தசைகளை இறுக்கமடையச் செய்யும். இந்நிலையில் இஞ்சியை எடுத்து வரும் போது, அது கால்சியம் சேனல் ப்ளாக்கராக செயல்பட்டு, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் தசைகளை தளர்வடையச் செய்யும். எனவே தினசரி உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வர வேண்டும்." என்று கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


