Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
Heart Attack Diet Chart In Tamil: முன்பெல்லாம் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு தான் வந்தது. ஆனால் தற்போது இயம் வயதிலேயே நிறைய பேர் மாரடைப்பால் மரணமடைந்து வருகிறார்கள். இப்படி இயம் வயதிலேயே மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தான். இதற்கு தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மட்டுமின்றி, மோசமான ஜங்க் உணவுகளும் தான் முதன்மையான காரணிகளாகும்.

இவற்றால் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ரால் உடலில் குறிப்பாக இரத்தக்குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தி, காலப்போக்கில் மாரடைப்பு வர வழிவகை செய்கின்றன. எனவே மாரடைப்பு ஒருவருக்கு வரக்கூடாதெனில் முதலில் உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அப்படி தான் நமது உடல் ஆரோக்கியமும் இருக்கும்.
இந்நிலையில் டாக்டர் பிள்ளை அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாரடைப்பைத் தடுக்கும் அற்புதமான ஒரு டயட் சார்ட்டை பகிர்ந்துள்ளார். இந்த டயட்டை ஒருவர் தொடர்ந்து பின்பற்றி வந்தால், மாரடைப்பு வரும் அபாயம் கண்டிப்பாக குறையும். இப்போது மாரடைப்பைத் தடுக்கும் அந்த டயட் சார்ட் என்னவென்பதைக் காண்போம்.
இதய நோய்க்கான காரணம்
"சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றும் தான் இதய நோய் வர முக்கிய காரணங்களாகும். இந்த மூன்றையும் ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாலே இதய நோயைத் தடுக்கலாம்." என்று டாக்டர்.பிள்ளை கூறினார். இந்த மூன்றையும் கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் டயட் சார்ட் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அந்த டயட் சார்ட் பின்வருமாறு:
அதிகாலை
காலையில் எழுந்ததும் 6-7 மணிக்குள் காபி, டீ குடிப்பதைத் தவிர்த்துவிட்டு, வெதுவெதுப்பான சுடுநீரில் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து குடியுங்கள். இப்படி தினமும் குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
காலை உணவு
காலை உணவை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அப்படி காலை உணவின் போது ஓட்ஸ் கஞ்சியைக் குடிக்கலாம். அதுவும் தடிமனாக உருண்டையாக இருக்குமாறான ஓட்ஸ் கொண்டு கஞ்சி தயாரித்து குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ராகி கஞ்சியைக் குடிக்கலாம். மேலும் நிறைய காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்தும் சாப்பிடலாம். அத்துடன் ஒரு பௌலில் ஆப்பிள் அல்லது கொய்யாப்பழத்தை வெட்டி சாலட்டாக சாப்பிட வேண்டும். முட்டையின் வெள்ளைக்கருவை வேக வைத்து சாப்பிடலாம்.
11 மணியளவில்..
காலை உணவுக்கு பின் 11-11.30 மணியளவில் பப்பாளி அல்லது தர்பூசணி பழத்தை சாலட்டாக செய்து, ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம்.
மதிய உணவு
மதிய உணவை 1-2 மணிக்குள் முடிக்க வேண்டும். அதுவும் அப்போது கருப்பு கவுனி அரிசி, சம்பா அரிசி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை சாதமாக சாப்பிடலாம். இதற்கு சைடு டிஷ்ஷாக பருப்பை வேக வைத்து தால் போன்று சாப்பிடலாம். இல்லாவிட்டால் சப்பாத்தி மற்றும் நிறைய காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் குருமாவை சாப்பிடலாம். கூடுதலாக ஒரு பௌல் காய்கறி சாலட்டையும் சாப்பிடலாம். அதுவும் இந்த சாலட்டிற்கு ப்ராக்கோலி, கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
க்ரில் செய்த மீன்களை சாப்பிடலாம். இப்படி க்ரில் செய்யும் போது, அதில் உள்ள கெட்ட கொழுப்பு கரைத்து, நல்ல கொழுப்பு உடலுக்கு கிடைத்து இதய ஆரோக்கியம் மேம்படும். வேண்டுமானால் சிக்கனைக் கூட க்ரில் செய்து சாப்பிடலாம். அதுவும் தோல் நீக்கிய சிக்கனை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதன் தோலில் கெட்ட கொழுப்பு இருக்கும்.
மாலை வேளை
மாலை நேரத்தில் 4.30-5.30 மணியளவில் சர்க்கரை இல்லாத லெமன் டீ, ப்ளாக் டீ, ப்ளாக் காபி போன்றவற்றை குடிக்கலாம். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. பச்சை பயறு, கொண்டைக்கடலை போன்றவற்றை வேக வைத்தும் சாப்பிடலாம். இல்லாவிட்டால், நட்ஸ் மற்றும் விதைகளையும் சாப்பிடலாம்.
இரவு உணவு
இரவு உணவு மிகவும் முக்கியம். எவ்வளவு சக்கிரம் சாப்பிடுகிறோமோ, அவ்வளவு நல்லது. அதுவும் 8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை முடியாவிட்டால், 9-10 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். சைவ உணவை உண்பவரானால், 2 சப்பாத்தி மற்றும் நிறைய காய்கறி சேர்த்த குருமாவை சாப்பிடுங்கள். மேலும் வெஜிடேபிள் சூப் குடிக்கலாம். அசைவ உணவை உண்பவரானால், க்ரில் செய்த சிக்கன், மீன் போன்ற இறைச்சிகளை தான் சாப்பிட வேண்டும். அதோடு சிக்கன் சூப், மட்டன் சூப் போன்றவற்றை குடிக்கலாம்.
குறிப்பு
"எப்போதும் இரவு உணவை முடித்த பின் ஒரு 20 நிமிடம் வாக்கிங் செல்லுங்கள். முக்கியமாக தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன் இரவு உணவை முடித்துவிடுங்கள். ஒருவேளை தூங்கும் போது பசி எடுப்பது போன்று இருந்தால், மஞ்சள் சேர்த்த பால் குடியுங்கள். இது உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கும். முக்கியமாக இதயத்தை சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும்." என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

