Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
கீரை வாங்குனா அடுத்தமுறை இந்த ஆந்திரா கீரை வேப்புடுவை செய்யுங்க - கீரை பிடிக்காதவர்களும் ஆசையா சாப்பிடுவாங்க
Keerai Vepudu Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி கீரை செய்வீர்களா? அதுவும் கீரை வாங்கினால் பொரியல் தான் அடிக்கடி செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் கீரையை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அடுத்தமுறை கீரை வாங்கினால், அத்துடன் சில பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் கீரை வேப்புடு செய்யுங்கள். இந்த பொரியல் மிகவும் சுவையாக இருப்பதால், பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இது சுவையானதாக இருப்பதுடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த கீரை வேப்புடு டக்கென்று செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த கீரை வேப்புடு சைடிஷாக மட்டுமின்றி சாதத்துடனும் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கீரை வேப்புடுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை வேப்புடு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கீரை - 1 கட்டு (நறுக்கியது)
- பூண்டு - 20 பல்
- சின்ன வெங்காயம் - அரை கப்
- வர மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 1
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
- வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
- கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சர்க்கரையைச் சேர்க்கவும்.
- நன்றாகக் கொதிக்கும்போது, நறுக்கி வைத்துள்ள கீரையைச் சேர்த்து, அடுப்பை அணைத்துவிடவும்.
- உடனடியாக நீரை வடித்துவிட்டு, அதன் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும். இந்தச் செயல் கீரை மேலும் வெந்துபோவதைத் தடுத்து, அதன் பச்சைப் நிறத்தைத் தக்கவைக்க உதவும்.
- பின்னர் இந்த கீரையை தனியே எடுத்து வைக்கவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டின் தோலை நீக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும். பச்சை மிளகாயைக் கீறி அதையும் சேர்க்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் முழு பூண்டைச் சேர்க்கவும்.
- வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
- இதனுடன் வேக வைத்த கீரையைச் சேர்க்கவும்.
- உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 2 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.
- வறுத்த வேர்க்கடலையைத் தூளாக அரைத்து இப்போது இதனுடன் சேர்க்கவும்.
- இறுதியாக நறுக்கிய தேங்காயையும் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் ஆந்திரா ஸ்டைல் கீரை வேப்புடு ரெடி!



Click it and Unblock the Notifications