Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்!
சிறுநீரகங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற உதவும் பானங்கள்!
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழே சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள்/ அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும் பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்புக்களின் ஒன்றாகும். இவை உடலில் இருந்து கழிவுகளை வடிகட்டும் முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். இச்செயல் சரியாக நடைபெறாவிட்டால், இது உடலில் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இது தீவிரமானால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். சிறுநீரகங்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். உதாரணமாக, டைப்-2 சர்க்கரை நோய், மோசமான இதய ஆரோக்கியம் போன்ற நிலைமைகள் சிறுநீரகங்களை பாதித்து, செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

எனவே தான் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதில் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கீழே சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள்/ அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும் பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பானங்கள் எவையென்பதைத் தெரிந்து, அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

பீட்ரூட் ஜூஸ்
அடர் சிவப்பு நிற காய்கறியான பீட்ரூட், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இருப்பினும், பீட்ரூட் ஜூஸ் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, குறிப்பாக சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகங்களை திறம்பட சுத்தம் செய்யவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

எலுமிச்சை ஜூஸ்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழமாக அறியப்படுவது தான் எலுமிச்சை. இந்த வைட்டமின் சி, நோய்கள் மற்றும் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவி புரிந்து, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

இஞ்சி ஜூஸ்
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த இஞ்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. அதில் சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைப்பது முதல் செரிமானம், எடை இழப்பு போன்றவற்றிற்கும் உதவுகிறது. மேலும் இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளதால், இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே வாரத்திற்கு ஒருமுறை

இளநீர்
இளநீரிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சிறுநீரக பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க விரும்பினால், இளநீரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இளநீரைக் குடிக்கும் போது, அதன் நீரை மட்டுமே குடிக்க வேண்டும். அதன் சதைப் பகுதியில் சோடியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் முகப்பரு பிரச்சனைகளை குறைக்க உதவுவதோடு, எடை இழப்புக்கும் உதவுகிறது. அதோடு ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ப்ரீ-ராடிக்கல்களின் நடவடிக்கையைக் குறைத்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
