Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க
Hair Care Tips: முகத்தின் அழகு என்பதில் ஆண் பெண் வேறுபாடு இன்றி முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் மற்றும் பல்வேறு உணவு பழக்கங்களின் காரணமாக இளம் வயதிலேயே முடி சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க துவங்குகிறார்கள். அவரவர் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது முடியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி முடியை பாதுகாக்க நினைப்பவர்கள், அவர்களின் முடி முடி வகைகளைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறப்பாக அமையும்.

பொதுவாகவே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்கும் பழக்கம் நம்மில் பரவலாக காணப்படுகிறது. தினசரி தலைக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிக்கும் பழக்கம் மாறி தற்பொழுது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறையாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் தலைக்கு எண்ணெய் வைப்பது மறந்து விட்டார்கள் என்றே கூறலாம். தலைமுடி பாதுகாப்பில் தேங்காய் எண்ணெயை போலவே தேங்காய் பாலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேங்காய் பாலில் உள்ள தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடிக்கு வேரிலிருந்து நுனிவரை போதுமான ஆரோக்கியத்தை கொடுக்கின்றன இவை இயற்கை மெருகூட்டி ஆகவும் செயல்படுகின்றன எப்படி முடியில் உபயோகிப்பது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தேங்காய்ப்பால் மற்றும் தேன்
சருமத்தில் வறட்சி ஏற்படுவது போலவே சிலருக்கு கூந்தலிலும் வறட்சி ஏற்பட்டு அதனால் கூந்தல் பொலிவிலிருந்து காணப்படும். அவர்கள் அப்போது அரைக்கப்பட்ட புதிய அல்லது பதப்படுத்தப்பட்ட தேங்காய் பாலுடன் இரும்பு சத்து, வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த கலவையை கூந்தலில் உபயோகிக்க வேண்டும். இது உங்களின் வேர் முதல் நுனி வரை வலுவாக்குவதோடு முடியின் வேர்க்கால்கள் வரை நன்றாக ஊடுருவிச் செல்லும். மேலும் இதனுடன் இரண்டு டீ ஸ்பூன் தேனை முடியில் கலப்பது ஈரப்பதத்தை தக்க வைத்திருக்க உதவும். 40 நிமிடங்கள் தடவவும். பின்னர், அது நன்கு ஊறி, வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும்.
தேங்காய்ப் பால் மற்றும் தயிர்
பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு, தேங்காய்ப் பால் மற்றும் தயிர் கலந்த ஹேர் பேக்கை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். முதலில், அரை கப் திக்கான தேங்காய்ப் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்த இரண்டு தேக்கரண்டி தயிரை சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தடவுவது சேதமடைந்த முடியைச் சரிசெய்து, மென்மையான பளபளப்பைத் தரும். இதை 30 நிமிடங்கள் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
தேங்காய்ப் பால் மற்றும் கற்றாழை
வறண்ட மற்றும் எளிதில் உடையக்கூடிய முடிகளின் நுனிகளுக்கு, கற்றாழையுடன் கூடிய தேங்காய்ப் பால் சிறந்த தீர்வாக இருக்கும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அரை கப் தேங்காய்ப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இது முடியின் வேர் வரை ஆழமாக ஊடுருவி, ஒவ்வொரு முடியையும் மென்மையாக்கும். பின்னர் ஈரப்பதமூட்டும் தன்மைக்காக அதில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லைச் சேர்க்கவும். இதை நன்றாகக் கலந்து தலைமுடியில் 30 நிமிடங்கள் தடவவும். இது உச்சந்தலையையும், முடியையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தேங்காய்ப் பால் மற்றும் முட்டை
கூந்தல் பலவீனமாக உள்ளவர்கள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து நிறைந்த தேங்காய்ப் பால் மற்றும் முட்டையைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் கூந்தலுக்கு வேர் முதல் நுனி வரை ஊட்டமளித்து வலுப்படுத்தும். புரதச்சத்து நிறைந்த முட்டையையும் தேங்காய்ப் பாலையும் ஒன்றாகக் கலந்து, உச்சந்தலையில் மெதுவாகத் தடவவும். இது இரத்த ஓட்டத்தைத் தூண்டி, முடி வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தேங்காய்ப் பால் மற்றும் வாழைப்பழம்
அரை கப் தேங்காய்ப் பாலுடன், நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து, அது மென்மையாயாகும் வரை நனறாக மசிக்கவும். வாழைப்பழங்களில் இயற்கையான எண்ணெய்கள் நிறைந்துள்ளன, அவை முடியை மென்மையாக்கி, சேதத்தைச் சரிசெய்யும். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து மென்மையாகும் வரை கலக்கவும், பின்னர் இந்த ஹேர் மாஸ்க்கை முடியின் வேர் முதல் நுனி வரை தடவவும். 45 நிமிடங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும்.



Click it and Unblock the Notifications












