Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
Venus Transit In Rohini Nakshatra 2026: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அழகு, காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சுக்கிரன் மிகவும் செல்வாக்குமிக்கவராக இருப்பார். இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த ரோகிணி நட்சத்திரமானது அழகு, அன்பு, படைப்பாற்றலைக் குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன்.
இப்படி சந்திரனின் நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவதோடு, தொழிலில் வெற்றியையும், லாபத்தையும் பெறக்கூடும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் கணிசமான பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக தொழிலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலைகளையும் திறம்பட, உரிய நேரத்தில் முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவதோடு, நல்ல லாபத்தையும் பெறுவார்கள்.
கடகம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் முடிவுகள் சாதகமாக வரும். சுக்கிரனின் செல்வாக்கு உங்கள் மீது அதிகமாக இருப்பதால், உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பேச்சு மிகவும் இனிமையாக இருக்கும். இந்த பேச்சால் பல வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உங்கள் குழந்தைகள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கல்கள் தீரும். உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். உங்களின் திறமைகள் மேம்படும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


