For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்பின் தெரியாத பொண்ணு 'அது'க்கு கூப்பிட்டா என்ன பண்ணுவீங்க? # Random Facts

By John
|

நமக்கு தெரியாத விஷயங்கள் எல்லாம், யாருக்குமே தெரியாதுன்னு நாம நெனைக்கிறோம்ல, அதுதான் நாம சறுக்குற முதல் இடம். இந்த ஒரு நெனப்பு நம்ம மனசுல இருந்து விலகிடுச்சுனா.. நம்ம வளர்சிய ஆண்டவனே நெனச்சாலும் தடுக்க முடியாது.

Random Facts #020

Image: Wiki Prank

இன்னிக்கி Random Factsல நாம பார்க்க போற உண்மைகள் உங்களுக்கு நிச்சயமா சுவாரஸ்யமானதா இருக்கும்னு நம்புறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சிலர் சந்தோசமா இருந்தா அத நெனச்சு ரொம்ப பயப்படுவாங்களாம். ஏன்னா, ரொம்ப சந்தோசமா இருந்தாலோ, நிறைய வெற்றி வந்தாலோ, நிறையா சிரிச்சாலோ, அதுக்கு அடுத்ததா, அத தொடர்ந்து துன்பம், தோல்வி வரும்னு நெனச்சு, சந்தோசத்த கொண்டாடாம அவங்க பயப்படுவாங்க. இந்த பயத்துக்கு, உணர்வுக்கு பேரு தான் Cherophobia

#2

#2

சில சமயம் வயுத்துக்குள்ள கடமுட, கடமுடனு சத்தம் வரும். சும்மா யாராச்சும் வயத்துல காது வெச்சு பார்த்தா இத நீங்களே கேட்டு உணர முடியும். சிலர் இதுக்கு காரணம் பசின்னு நெனச்சுட்டு இருக்காங்க. ஆனா, உண்மை என்ன தெரியுமா? உங்க செரிமான குழாயில காத்து பாஸாகி போகும் போது தான் இந்த மாதிரியான சத்தம் வரும்.

#3

#3

இன்னிக்கி நிறைய விவாகரத்து வழக்கு நாம பார்க்குறோம். சின்ன, சின்ன சண்டை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு கருத்துவேறுபாடுனு சொல்லி விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சு போயிடுறாங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நெருங்கிய நண்பர்கள் கல்யாணம் பண்ணிக்கும் போது விவாகரத்துக்கான வாய்ப்பு 70% குறையுதாம்.

அதுமட்டுமில்லாம, மத்தவங்களோட ஒப்பிடும் போது இவங்க இல்லற வாழ்க்கை லைப் டைம் நீடிக்குதாம். இதுக்கு காரணம் அவங்க மத்தியில இருக்க நட்பு. இதனால என்ன தெரியுது, நீங்களும் உங்க துணை கூட ஒரு நல்ல ஃபிரெண்டு மாதிரி நடந்துக்கிட்டா வாழ்க்கை சுபிட்சமா இருக்கும் ஓய்!

#4

#4

பொண்ணுங்க நிறையா கிசுகிசு பேசுவாங்கன்னு நமக்கு தெரியும்... ஆனா, அதுல அவங்க அப்படி என்ன தான் பேசுவாங்கன்னு தெரியுமா? பெரும்பாலும் மத்தவங்க கதை, இவங்க கிட்ட யாராச்சும் மனசுல இருக்குறத எல்லாம் கொட்டிட்டு... இத யார்கிட்டையும் சொல்லிடாதம்மா... ரகசியமா வெச்சுக்கோன்னு சொல்லிருப்பாங்க. ஆனா, இவங்கனால அத பாதுகாக்க முடியாது. சராசரியா ஒரு பொண்ணால இரகசியத்த 47 மணிநேரம் 15 நிமிஷம் தான் பாதுகப்பா வெச்சுக்க முடியுமாம்.

#5

#5

ஊர் பேர் தெரியாத ஒரு ஸ்ட்ரேஞ்சர் வந்து, நான் உங்க கூட நைட் தங்கலாமா, ஒண்ணா தூங்கலாமா ன்னு (!?!?! அதே தான்) கேட்டா... 75% ஆண்கள் உடனே ஒகேனு சொல்லிடுறாங்கன்னும். பொண்ணுங்க ஒருத்தர் கூட ஒகே சொல்றது இல்லனும் ஒரு ஆய்வு நடத்தி கண்டுப்பிடிச்சிருக்காங்க. என்ன பண்றது உற்பத்தி குறைபாடு பசங்களுக்கு (manufacturing defect).

#6

#6

பெரும்பாலும் ஒருத்தர் உங்கள அதிகமா வெறுக்குறாங்கன்னா அதுக்கு மூணு காரணம் தான் இருக்க முடியும். 1. அவங்க உங்கள அதிகமா நேசிச்சிருக்கணும், உங்க கூட இருக்க விரும்பி இருக்கனும். 2. அவக தங்கள தானே வெறுத்து இருக்கணும். 3. அவங்க உங்கள ஒரு அபாயமான நபரா பார்த்திருக்கணும், உணர்ந்திருக்கணும்.

#7

#7

உங்களுக்கு இது மிகுந்த ஆச்சரியத்த கொடுக்கலாம். ஆமாங்க! அதிகமான இசை கேட்கும் போது, பூக்கள் வேகமாக வளருமாம். அடடே! நிஜமாலே ஆச்சரியமா இருக்குல...

#8

#8

தனியா இருக்கும் நீங்க அமைதியா இருக்கலாமே தவிர, உங்க மனசு அமைதியா இருக்காது. ஆமா, நாமா பேசாம இருந்தாலும், நம்ம மனசு பேசிக்கிட்டே தான் இருக்கும், எதையாவது யோசிச்சுக்கிட்டே தான் இருக்கும். அப்படி பார்த்தா, சராசரியா ஒரு நாள்ல நமக்கு மூவாயிரம் எண்ணங்கள் வரை வருமாம்.

#9

#9

சில ஆய்வறிக்கைகள் என்ன சொல்லுதுன்னா.. நீங்க தைரியமான ஆளா இருக்கணும்ங்கிற அவசியம் இல்ல. ஆனா, குறைந்தபட்சம் தைரியமான ஆள் மாதிரி நடிச்சா, இல்ல காமிச்சிக்கிட்டா கூட போதும், நீங்க ஜெயிச்சிடலாம்னு சொல்றாங்க. ஆமாங்க.. இங்க நிறையா பேரு அப்படி தான் இருக்காங்க.

#10

#10

நல்ல வெளிச்சமான சொல்லல கன் விழிக்கும் போது, அவங்க நாள் முழுக்க ரொம்ப அலர்ட்டா, கவனமா இருப்பாங்களாம். இதனால, அவங்களோட புரோடக்டிவிட்டி, செயல்திறம் கூட அதிகமா இருக்குமாம். அதுக்குன்னு, ஃபுல் ப்ரைட்னஸ் வெச்ச மொபைல் ஸ்க்ரீன்ல எல்லாம் கண்ணு முழிக்க கூடாது. அப்பறம் கூடிய சீக்கிரம் கண்ணு கெட்டு போயிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: facts உண்மைகள்
English summary

Random Facts #020

From Fear of happines to effect of marring your close friend. Today we have given you a lot of interesting random facts. That surely amaze you.
Story first published: Saturday, November 24, 2018, 13:52 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more