ஆசன வாய் வழியாக தங்க காசுகளை திருட முயற்சித்த நபர் கைது!

Posted By:
Subscribe to Boldsky

நாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...

இன்றைய டைம் பாஸ் #010ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...

  • ஆசன வாய் மூலமாக தங்கம் கடத்திய நபர் கைது...
  • இரண்டாயிரம் ஆண்டுகளாக சரும பொலிவு இழக்காமல் பாதுகாக்கப்பட்டு வந்த மம்மி...
  • மதுபானம், ஒயின், காபி, பீர் குறித்து நடத்தும் அளவிற்கு தாய் பால் குறித்த ஆய்வுகள் நடப்பதில்லை ஏன்?
  • உங்கள் மனம் கவர்ந்த இந்த ஆக்ஷன் ஹீரோ, விழாக்களில் கோமாளி வேடமிட்டு வந்தவர் தெரியுமா?
  • உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா குறித்த இந்த உண்மைகள் நீங்கள் அறிவீர்களா?
  • குளங்களின் தேசம் என்று வர்ணிக்கப்படும் நாடு எது தெரியுமா?
  • பருவ வயதில் கருத்தரித்து வலிவின்றி எத்தனை இளம் பெண்கள் உயிரிழக்கிறார்கள் தெரியுமா?
  • தற்கொலை செய்ய பயந்து, துப்பாக்கியால் சுட்டு கொல்ல ஆள் செட் செய்த நடிகை...
  • ஒவ்வொரு வருடமும் வெள்ளை சுறாக்கள் செய்யும் மர்மமான வேலை....
  • அமெரிக்கர்களின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக வருடம் எத்தனை ஆயிரம் லிட்டர் வீணாகிறது தெரியுமா?
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசன வாய் வழியாக திருட்டு!

ஆசன வாய் வழியாக திருட்டு!

கடந்த 2016ம் ஆண்டு, ராயல் கனடியன் தங்க சுரங்கத்தில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் தங்க காசுகளை தனது ஆசன வாயில் வழியாக திருடி மாட்டிக் கண்டார்.

லெஸ்டன் லாரன்ஸ் (35) எனும் இந்நபர் திருடிய தங்கத்தின் விலையானது $1,80,000 டாலர்கள் மதிப்புடையது ஆகும். ஆனால், அங்கே வேலை செய்பவர்கள் எல்லாரும் பல கட்ட பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்லும் நிலை இருந்தது.

அந்த பரிசோதனைகளில் ஒன்றில், இவரது உடலுக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு, தங்கம் கடத்திய குற்றத்திற்காக கைதும் செய்யப்பட்டார்.

மிருதுவான சருமம் கொண்ட மம்மி!

மிருதுவான சருமம் கொண்ட மம்மி!

ஏறத்தாழ 163 BCEல் வாழ்ந்ததாக அறியப்பரும் சீனாவை சேர்ந்த அரசி க்ஸின் சூயி என்பவரின் உடல் அந்த காலத்தில் பதப்படுத்தி மம்மி போல கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது உடல் ஓர் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், இதில் என்ன ஆச்சரியம் எனில், இவரது உடல் ஏதோ ஒரு நாளுக்கு முன் இறந்தவரின் உடலை போல மிகவும் மிருதுவாக, சருமம் பொலிவு இழக்காமல் இருந்தது. மேலும், உடல் உறுப்புகளும் கூட சில மணிநேரங்களுக்கு முன் இறந்தது போல இருந்தது.

தாய் பால்!

தாய் பால்!

நாம் காபி, டீ, தக்காளி, ஒயின், மதுபானங்கள் மீது ஆய்வு செய்ததை காட்டிலும், குறைவாக தான் தாய்பாலில் ஆய்வு செய்துள்ளோம். தாய் பாலானது குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கிய வாழ்க்கைக்கும் பெரும் பங்குவகிக்கிறது.

மேலும், இது நோய்தொற்று ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. இப்படிப்பட்ட மகத்துவமான தாய் பால் பற்றி இன்றளும் பெருமளவு ஆராய்ச்சிகள் நடத்தப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கேட்டி ஹின்டே எனும் பேச்சாளர் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஹக் ஜேக்மேன்!

ஹக் ஜேக்மேன்!

ஹக் ஜேக்மேன் என்பதை காட்டிலும் வால்வரின் அல்லது லோகன் என்றால் இவரை பலருக்கும் மிக பரிச்சயமாக தெரியும். எக்ஸ்-மேன் கதையும் ஹீரோவாக உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை வைத்திருக்கும் ஹக் ஜேக்மேன், நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பு, பார்ட்டி, விழாக்களில் கோமாளி வேஷமிட்டு வருவோரை குதுகலப்படுத்தும் வேலையை செய்து வந்தாராம்.

புர்ஜ் கலீஃபா

புர்ஜ் கலீஃபா

உலகின் உயரிய கட்டிடம் என்ற புகழ் கொண்டு வானுயர்ந்து நிற்கும் புர்ஜ் கலீஃபா கட்டிடமானது 828 மீட்டர் உயரம் கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 24,000 ஜன்னல்கள் இருக்கின்றன, 3,30,000 கியூபிக் மீட்டர் கான்க்ரீட் இருக்கிறது.

மேலும், உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபாவை கட்டி முடிக்க 22 மில்லியன் மணிநேர மனித சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், துபாய் அரசு வெளியிட்ட தகவல் அறிக்கை ஒன்றில், துபாய் கூட்டாச்சியில் வசிக்கும் மக்களில் 90% பேர் வெளிநாட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு துபாய் உலகளவில் பெரும் சுற்றுலா நகராக மாரியிருப்பதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

குளங்கள்!

குளங்கள்!

பின்லாந்தை குலங்களின் தேசம் என்று பெருமையாக கூறலாம். அந்த அளவிற்கு ஆயிரக்கணக்கான குளங்கள் இருக்கின்றன. பின்லாந்தில் இருக்கும் குளங்களின் எண்ணிக்கையானது 1,88,000 ஆயிரத்திற்கும் மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பின்லாந்தின் தூய நீர் நிலைகளானது அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பத்து சதவீதம் ஆகும்.

பின்லாந்தின் வடக்கு மாகாணத்தில் இருக்கும் ஹெல்சின்கி எனும் தலைநகர் பகுதியில் 25% நிலப்பரப்பு நீர்நிலைகள் தான். இந்நகரை நிஜமாகவே குலங்களின் தேசம் என்றே அழைக்கிறார்கள். மேலும், இது தான் ஐரோப்பாவில் இருக்கும் பெரிய குளங்கள் கொண்ட மாவட்டம் என்றும் கூறப்படுகிறது.

பருவ மங்கைகள்!

பருவ மங்கைகள்!

வளரும் நாடுகளில் பருவ வயதை தாண்டும் முன்னே கர்ப்பமடையும் நிகழ்வுகளில் 90% திருமணமான பெண்களுக்கு மத்தியில் தான் நடக்கிறது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

இதில் 15 வயதுக்குட்ப்பட்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிகம் மரணம் அடைகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இருபது வயதில் கர்ப்ப காலத்தில் இறக்கும் பெண்களோடு ஒப்பிடுகையில், இவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக கர்ப்ப காலத்தில் மரணிக்கிறார்கள் என்று அறியப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் ஆரோக்கியமின்மை காரணமாக மட்டுமே உலகில் 15 - 19 வயதுக்குள் கர்ப்பமாகும் பெண்கள் இறக்கிறார்களாம்.

நடிகை கொலை!?

நடிகை கொலை!?

ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ஏஞ்சலினா ஜூலி, ஒருமுறை தன்னை கொலை செய்யுமாறு ஒரு ஹிட் மேனிடம் கூறியுள்ளார்.

ஹிட் மேன் என்பவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யும் கூலிப்படை போன்றவர்கள் ஆவர்.

ஏஞ்சலினா ஜூலி பேசி வைத்திருந்த ஹிட் மேன் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டதாகவும், அந்த இடைவேளையில் தனது முடிவை இவர் மாற்றிக் கொண்டார் என்றும் அறியப்படுகிறது.

ஏன்?

ஏன்?

ஒவ்வொரு குளிர் காலத்திலும் தி கிரேட் ஒயிட் ஷார்க்ஸ் எனப்படும் வெள்ளை சுறாக்கள் நாற்பது நாட்கள் நீந்தி மெக்ஸிகோ மற்றும் ஹவாய் மத்தியில் இருக்கும் பசிபிக் கடல் பகுதிக்கு செல்கின்றனவாம்.

இந்த நிகழ்வு ஏன் நடக்கிறது, இந்த சுறாக்கள் தவறாமல் ஏன் அந்த இடத்திற்கு வருகிறது என்று இந்நாள் வரை அறியப்படவில்லை.

எழுபது பவுண்ட்!

எழுபது பவுண்ட்!

சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கரும், வருடத்திற்கு 70 பவுண்ட் எடை கொண்ட ஆடைகளை தூக்கி எறிகிறார்கள் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

டீஷர்ட், ஜீன்ஸ், ஷூ, சட்டைகள் என தாங்கள் உடுத்தும், பயன்படுத்தும் ஆடை, உபகரணங்களை கிட்டத்தட்ட வருடத்திற்கு 70 பவுண்ட் என்ற கணக்கில் பயன்படுத்த பிடிக்காமல் தூக்கி எறிகிறார்களாம் அமெரிக்கர்கள்.

சராசரியாக ஒரு நபர் பயன்படுத்தும் ஆடையை தயாரிக்க ஆயிரம் கேலன் நீர் தேவைப்படுகிறதாம். இதை அறிந்தால், ஆடை விஷயத்தில் இவர்கள் இத்தனை அஜாக்கிரதையாக நடந்துக் கொள்ள மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: pulse, facts, insync
English summary

Random Facts to Know #010

Random Facts to Know
Subscribe Newsletter