உங்க ராசி உங்களைப் பத்தி சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?... இத படிங்க தெரியும்...

By Kripa Saravanan
Subscribe to Boldsky

நீங்கள் மற்ற ராசிக்காரர்களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்று என்றாவது யோசித்ததுண்டா? உங்களைப் பற்றிய சிறந்த விஷயங்கள் எப்போதும் உண்டு. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவது உங்கள் ராசி.

உங்கள் ராசிகள் சொல்லும் விஷயங்களின் விவரங்களை நாங்கள் உங்களுக்குச் சொல்ல விழைகிறோம். இதன் மூலம் உங்களுக்கு நெருக்கமானவர்களைப் பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களுடைய துணையை இத்தகைய சுவாரஸ்யமான குணநலன்களுடன் தான் பெறுகிறார்கள். உங்களுடைய அழகான பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்கள் துணை உங்களை அதிகமாக விரும்ப இவைகள் தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் : (மார்ச் 21- ஏப்ரல் 19)

மேஷம் : (மார்ச் 21- ஏப்ரல் 19)

உங்கள் கட்டுக்கடங்கா உணர்வு உங்கள் மேல் உங்கள் துணையை பைத்தியமாக்குகிறது. எல்லாவற்றிற்கும் நீங்கள் விட்டுக் கொடுப்பீர்கள். காதலிக்க ஏற்ற ஒரு துணையாக உங்களைத் தவிர உங்கள் துணையால் வேறு யாரையும் நினைத்து பார்க்கவும் முடியாது என்பதால் அவர்கள் உங்களை முழுமையாக நேசிக்கத் தொடங்குவார்கள். உங்கள் ஆழ்ந்த பக்கம் அவரை உங்களிடம் சரணடையச் செய்கிறது.

ரிஷபம் : ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம் : ஏப்ரல் 20 - மே 20

உங்கள் அர்ப்பணிப்பு உங்களைக் கவர்ச்சிகரமான தனிநபராக ஆக்குகிறது. நீங்கள் அவசரப்பட்டு காதலிக்க மாட்டீர்கள். ஆனால் உங்களுக்கான ஒருவரைக் கண்டுபிடித்தவுடன் அவருக்கு உங்களிடம் உள்ள சிறந்த குணங்களை வெளிப்படுத்துவீர்கள். என்றென்றும் உங்கள் துணைவரின் இதயம் உங்களிடம் மட்டும் தான் இருக்கும். எல்லா நேரத்திலும் உங்கள் துணைவருக்கு பக்க பலமாக நீங்கள் இருப்பீர்கள்.

மிதுனம் : மே 21 - ஜூன் 20

மிதுனம் : மே 21 - ஜூன் 20

உங்களிடமிருந்து வெளிப்படும் ஆற்றலைப் பார்த்து உங்கள் துணைவர் உங்கள் மேல் அதிக பற்று கொள்வார். வாழ்க்கையை அனுபவிக்க தெரிந்தவர் நீங்கள். உங்களிடம் உள்ள வியக்கத்தக்க உற்சாகம் உங்கள்பால் உங்கள் துணைவரை ஈர்ப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. இது மட்டும் இல்லாமல் நீங்கள் பெரிய மனது படைத்தவர். இதனால், உங்கள் அறிவு, விருப்பம் மற்றும் உள்ளுணர்வுகளை நீங்கள் உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.

கடகம் : ஜூன் 21- ஜூலை 22

கடகம் : ஜூன் 21- ஜூலை 22

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் உங்கள் தொடர்ச்சியான விடாமுயற்சி, கூட்டத்தில் இருந்து உங்களை தனித்து நிற்க வைக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்களை நீங்கள் மிகுந்த அரவணைப்புடன் பாதுகாப்பீர்கள் . இது இயல்பாகவே உங்களுக்கு இருக்கும் ஒரு குணம் ஆகும். உங்களுடன் கழிக்கும் பொழுதுகள் மிகவும் ரொமாண்டிக் தருணங்களாக இருக்கும். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் கூட உங்கள் அருகாமை, ஒரு வித பாதுகாப்பு உணர்வைத் தரும். உங்களுடன் இருப்பதை உங்கள் துணைவர் மிகவும் சௌகரியமாக மற்றும் பாதுகாப்பாக உணர்வார்.

சிம்மம் : ஜூலை 23 - ஆகஸ்ட் 23

சிம்மம் : ஜூலை 23 - ஆகஸ்ட் 23

உங்கள் பெருந்தன்மை பிறரின் இதயத்தை உருக வைக்கும். உங்களுடைய அன்பு, சூரியனை போல் மிகவும் ஆழமானதாக, வலிமையானதாக மற்றும் நம்பிக்கை நிறைந்தாக இருக்கும். உங்களை போன்ற குணவான்களைப் பார்ப்பது மிகவும் கடினம். ஆகையால் இந்த குனங்களுக்காகவே உங்க துணைவர் உங்கள் மீது மாறாத அன்பைச் செலுத்துவார்.

கன்னி : ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 23

கன்னி : ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 23

உங்கள் கவனிப்பு உங்கள் துணைவரை உங்கள் பின்னால் வரச் செய்யும். உங்கள் துணைவரைப் பற்றி அனைத்தையும் அறிந்தவர் நீங்கள். அவருடைய வலிமை மற்றும் தவறுகள் ஆகிய இரண்டுடனும் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். எப்போதும் அவர் மேல் நீங்கள் அன்பு செலுத்துவீர்கள். அவரை அவராகவே ஏற்றுக் கொள்ளும் தன்மை உங்களுக்கு இருப்பதால், உங்கள் துணைவரும் உங்களை மற்றவர்கள் மத்தியில் விட்டுக் கொடுக்க மாட்டார்.

துலாம் : செப்டம்பர் 24 - அக்டோபர் 23

துலாம் : செப்டம்பர் 24 - அக்டோபர் 23

உங்களுடைய இனிமையான பழுகும் தன்மை உங்கள் துணைவரை உங்கள் மேல் அதிக ஈடுபாடு கொள்ள வைக்கும். இந்த குணநலன் உங்கள் துணைவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். உங்கள் துணைவரிடம் கொடுக்க அபரிவிதமான அன்பு உங்களிடம் இருக்கும். உற்சாகமான மற்றும் நிறைவான வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் உங்கள் துணையுடன் கழிக்க அதிகம் விரும்புவீர்கள். உங்களுடன் இருப்பதை உங்கள் துணைவர் அதிகம் விரும்புவார். உங்களை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு அதிக சிரமம் இருக்காது. போலித்தனத்திற்கு இங்கு இடமே கிடையாது.

விருச்சிகம் : அக்டோபர் 24 - நவம்பர் 22

விருச்சிகம் : அக்டோபர் 24 - நவம்பர் 22

உங்கள் பக்தி மற்றும் அளவிட முடியாத அன்பு, உங்கள் துணைவருக்கு உங்களிடம் மிகவும் பிடித்த குணமாக உள்ளது. உங்களை திசை திருப்பும் மற்ற விஷயங்களில் ஈடுபடுவதை விட்டு, விட்டு, உங்களுக்கு முக்கியமானவற்றில் கவனம் கொள்வது நல்லது. நீங்கள் எந்த நேரத்திலும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நபராக இருக்கிறீர்கள், ஏனென்றால் எப்போதும் சிறந்ததை மட்டுமே நீங்கள் கொடுப்பீர்கள்.

தனுசு : நவம்பர் 23 - டிசம்பர் 22

தனுசு : நவம்பர் 23 - டிசம்பர் 22

உங்கள் நேர்மறை எண்ணம் எப்போதும் வெற்றியை நோக்கி உங்களைச் செலுத்தும். உங்களுடைய உற்சாகமான மற்றும் மகிழ்ச்சிகரமான பக்கம், உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியுடன் இருக்க வைக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் அதில் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்க்கும் உங்கள் மனோபாவம் , உங்கள் துணைவரை உங்கள் பக்கம் கவர்ந்திழுக்க உதவும்.

மகரம் : டிசம்பர் 23 - ஜனவரி 20

மகரம் : டிசம்பர் 23 - ஜனவரி 20

உங்களுக்கு இருக்கும் ஸ்திரத்தன்மை உங்கள் துணைவரைச் சுண்டி இழுக்கும். உறவு என்று வரும்போது, உங்கள் துணைவருக்கு மிகவும் தேவையான எல்லா நேரங்களிலும் நீங்கள் அவருடன் இருப்பீர்கள். இந்த உறவின் ஆதாரமாக நீங்கள் இருப்பீர்கள். உங்கள் துணையின் எந்த ஒரு தருணத்திலும் நீங்கள் அவருக்கு பக்கபலமாக ஒரு தூணாக இருந்து செயல்படுவீர்கள். அவருக்கு எந்த நேரத்திலும் துணை நிற்ப்பீர்கள்.

கும்பம் : ஜனவரி 21 - பிப்ரவரி 18

கும்பம் : ஜனவரி 21 - பிப்ரவரி 18

உங்கள் நேர்மைக் குணம், உங்கள் துணைவரை அதிகம் கவரும். இதனால் அவர் உங்களை அதிகம் நேசிப்பார். உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக மனம் திறந்து சொல்வது உங்களுக்கு மிகவும் கடினம், ஆனால் உங்கள் துணைவரிடம் நீங்கள் வெளிப்படையாக, திறந்த மனதுடன், மிகவும் நேர்மையாக இருப்பீர்கள். திருமண உறவில் மட்டும் இல்லாமல் எந்த ஒரு உறவிலும், இந்த ஒரு குணம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு துணைவரும் இப்படியான குணங்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மீனம் : பிப்ரவரி 19 - மார்ச் 20

மீனம் : பிப்ரவரி 19 - மார்ச் 20

நீங்கள் மென்மையான உணர்வுகள் கொண்ட ஒரு மனிதர். உங்கள் துணைவரிடம் நீங்கள் செலுத்தும், அன்பு, பரிவு, அரவணைப்பு போன்றவற்றிற்கு எல்லைகள் கிடையாது. அவர்கள் உணர்வோடு உங்களை தொடர்பு படுத்திக் கொள்வீர்கள். இதனால் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பீர்கள். உங்கள் துணையின் இதயத்தில் உங்களுக்கு ஒரு சிறந்த தனி இடம் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Qualities That Attract Your Soulmate To You, Based On Your Zodiac Sign

    There is always something special about you and this can be explained by your zodiac sign.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more