பேண்ட் அணியாமல் ரயிலில் பயணம்... #விசித்திர_உலகம் #NoPantsSubwayRide

Posted By:
Subscribe to Boldsky

உலகின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களால் பல நிகழ்சிகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சிலவன சுவாரஸ்யமாக இருக்கும், சிலவன அபாயகரமானாதாக இருக்கும். சிலவன அடச்சீ இப்படி எல்லாமா கொண்டாடுறாங்க என முகம்சுளிக்க செய்யும்.

சரி! அந்த காலத்தில் தான் எதுவும் தெரியாமல் சிலர் விசித்திரமான கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர் என்றால், இன்று படித்தவர்கள் என்ற பெயரில் உலவி வரும் சில மூடர் கூட்டங்களும், கன்றாவியான கொண்டாட்டங்களை பின்பற்றி வருகின்றன.

சிலர், விழிப்புணர்வு ஏற்படுத்த சில வித்தியாசமான ஊர்வலம் மேற்கொள்வதை கூட ஏதோ காரணம் இருக்கிறது என ஒப்புக் கொள்ள முடியும்.

ஆனால், எந்த ஒரு காரணமும் இன்றி, வெறும் பிரான்க்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுக்கு இன்று உலகின் பல்வேறு நகர்களை சேர்ந்த மக்கள் ஆதரவளித்து அரைநிர்வாண கோலத்தில் ரயிலில் பயணிப்பது எல்லாம் எப்படியான மானோபாவம். இதில், என்ன ஒரு கொண்டாட்டம் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அமைப்பு!

No Pants Subway Ride (அ) No Trousers on the Tube Ride என்றும் இந்த நிகழ்வு உலகின் சில பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது, இதில் பங்குபெறுபவர்கள் பேண்ட் அணியக் கூடாது என்பதே விதிமுறை.

இம்ப்ரோவ் எவ்ரிவேர் (Improv Everywhere) என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இப்படி ஒரு விசித்திரமான நிகழ்வை வருடா வருடம் நடத்தி வருகிறார்கள். இந்நிகழ்வு உலகின் பல்வேறு நகர்களில் நடத்தப்படுகிறது.

தேதி!

No Pants Subway Ride எனப்படும் இந்த நிகழ்வு எப்போது எங்கே நடத்தப்படும் என்ற அறிவிப்புகள் Improv Everywhere என்ற அமைப்பின் இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. இவர்கள் எங்கே, எந்த நாளில் என்பதை டிசம்பர் மாத ஆரம்பத்தில் கூறிவிடுவார்கள். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாத துவக்கத்தில் நடத்தப்படும்.

2002!

2002!

இந்த No Pants Subway Ride எனும் நிகழ்வு கடந்த 2002ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக நியூயார்க் நகரில் தான் நடத்தினார்கள். பிறகு, 2006ல் நியூயார்க் நகரத்தில் நடந்த போது 150 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அப்போது ஒழுக்கமற்ற வகையில் நடந்துக் கொண்டதாக எட்டு பேர் மீது புகார் அளிக்கப்பட்டதால். அந்த எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பிறகு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களும் விடுதலை ஆகினர்.

Image Source: Twitter

ஆறு இடங்களில்...

ஆறு இடங்களில்...

பிறகு, 2016ல் இந்த No Pants Subway Ride நிகழ்வு உலகின் ஆறு பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு எனவே, தனி குழு அமைக்கப்பட்டது.

2016ல் முதன்முறையாக ரஷ்யாவின் மாஸ்கோ பகுதியில் இந்த No Pants Subway Ride நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மீதும் போலீஸ், பொது இடத்தில் அநாகரிகமான முறையில் நடந்துக் கொண்டதாக கூறி விசாரணை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: Twitter

2018!

2018!

இந்த வருடமும் No Pants Subway Ride நிகழ்ச்சி நியூயார்க் நகரில் நடைப்பெற்றது. இது நியூயார்க் நகரில் நடக்கும் 17வது No Pants Subway Ride நிகழ்வு ஆகும். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானோர் பேண்ட் அணியாமல், மெட்ரோவில் பயணித்து கொண்டாடினார்கள்.

Image Source: Twitter

சூறாவளி!

சூறாவளி!

Bomb Cyclone என்ற சூறாவளி தாக்கம் ஏற்பட்ட மறுநாளே இந்த No Pants Subway Ride கொண்டாட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டது மற்றவர்களை வியப்படைய வைத்துள்ளது. கால் அளவுக்கு பனிபொழிவு இருந்தும் கூட எடையும் பொருட்படுத்தாமல் இவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.

Image Source: Twitter

ஜனவரி 7!

ஜனவரி 7!

கடந்த ஜனவரி ஏழு அன்று தான் இந்த வருட No Pants Subway Ride நிகழ்வு நடந்தது. மெட்ரோவில் இவர்களுடன் சேர்ந்து பயணிக்க சில பொது பயணிகள் சங்கோஜம் அடைந்தனர். சிலர், தங்கள் முகத்தை திருப்பிக் கொண்டும் பயணித்து வந்தனர். சிலர் இவர்களை கண்டு சிரித்தும், ரசித்தும் பயணித்தனர்.

Image Source: Twitter

கேளிக்கை!

கேளிக்கை!

பேண்ட் இல்லாமல் பயணிப்பது மட்டுமே இன்றி, சுபவேயில் ரயிலுக்கு காத்திருக்கும் வரை அங்கேயே நடனமாடி, விளையாடி மகிழ்ந்து பொழுதுப் போக்கியுள்ளனர் No Pants Subway Ride பங்கேற்பாளர்கள். இந்த முறை யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் இந்த நிகழ்வு நடந்தது.

Image Source: Twitter

பிரான்க்!

பிரான்க்!

No Pants Subway Ride என்ற நிகழ்வு நண்பர்கள் மத்தியில் ஒரு பிரான்க்காக துவங்கப்பட்டு. இன்று உலகின் பல்வேறு நகரங்களில் அமைப்புகளை அமைத்து நடத்துப்பட்டு வரும் நிகழ்வாக வருடம் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைக்கிறார்கள் என்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.

Image Source: Twitter

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

No Pants Subway Ride: New York City's Weird Celebration!

No Pants Subway Ride, New York City's Weird Celebration,