For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'தீவிரவாதிக்கு டிப்ஸ் தர மாட்டேன்' என ரெஸ்டாரண்டில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட நபர்!

  |

  "ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லன்னு கேட்கிறது எவ்வளவு பெரிய வன்முறை..." சமீபத்தில் வெளியான பேரன்பு திரைப்படத்தின் டீசரில் பதிவான இந்த வசனத்தில் பெரும் அர்த்தம் இருக்கிறது.

  அதே போல, யாரோ சிலர் செய்யும் / செய்த தவறுக்காக ஒரு குழு, இனம் அல்லது மதத்தை சேர்ந்தவர்களை, அவர்களில் யாரோ செய்த குற்றத்தை சுட்டி காட்டி திட்டுவது, ஒதுக்குவது என்பது மனிதத்தன்மையற்ற செயல்.

  அந்த வகையில் உலகெங்கிலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் பல காலமாக பெரும் கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். நம் அனைவருக்கும் நிச்சயம் ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்த உயிர் தோழனோ, ரம்சான் காலத்தில் நாள் தவறாது நோம்பு கஞ்சி கொண்டு வந்து தரும் அக்கம்பக்கத்தினரோ, கடையில் நம்முடன் வேலை செய்யும் பாயோ.. நிச்சயம் இருப்பார்கள்.

  ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், ஈராக் ஆங்காங்கே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபடுவதால்.. நமக்கிடையே வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களையும் தீவிரவாதி என்று கூறி அழைப்பது, கேலி  செய்வது, தீவிரவாதியாக கருதுவது எவ்வளவு பெரிய தவறு.

  ஏன்? இந்து மதத்தை சேர்ந்த சில சாமியார்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு நிரூபிக்கப்பட்டுள்ளனர்.., தண்டனையும் பெற்றுள்ளனர். அதற்காக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் நாம் பாலியல் குற்றவாளிகள் என்று அழைப்போமா? சிறுபான்மையினர் என்பதால் எதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது விதியா என்ன?

  ஒரு ஊரா, ஒரு நாடா... உலகெங்கிலும்... செய்யாத குற்றத்திற்காக தீவிரவாதி என்று அழைக்கப்படுவதால் மனம் நொந்து வாழும் இஸ்லாமிய நண்பர்கள் எண்ணிலடங்காது இருக்கிறார்கள்.

  இந்த நிகழ்வும் அப்படியான ஒன்று தான்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  கஹாலில் காவில்!

  கஹாலில் காவில்!

  அவர் பெயர் கஹாலில் காவில். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் பகுதி நேரமாக ஒரு ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்தார். அப்போது தான், என்றும் எதிர்ப்பார்த்திடாத விதமாக ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்தது. சில உணவகங்களில் பில், சர்வ் செய்த நபரின் பெயரோடு வரும்.

  இது, தனிப்பட்ட நபரின் வேலை திறனை கணக்கிட சில நிறுவனங்கள், ரெஸ்டாரன்ட் பின்பற்றும் முறை. கஹாலில் காவில் பணிபுரியும் ரெஸ்டாரண்டும் அப்படியொரு முறையை பின்பற்றுபவர்கள் தான்.

  பில்லில் பெயர்!

  பில்லில் பெயர்!

  தான் பகுதி நேர ஊழியராக பணிபுரியும் ரெஸ்டாரண்டுக்கு உணவருந்த ஒரு நபர் வந்திருக்கிறார். அவருக்கு கஹாலில் சர்வ் செய்திருக்கிறார். பில் கொடுத்த போது, கஹாலில் காவிலின் பெயரை பில்லில் பார்த்த அந்த உணவருந்த நபர், "நாங்கள் தீவிரவாதிக்கு டிப்ஸ் தருவதில்லை" என்று எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

  உண்மை என்ன தெரியுமா?

  உணவருந்த வந்தவர் கஹாலில் காவில் என்ற பெயரை படித்து, அவர் ஒரு இஸ்லாமியர் என்று கருதி, இப்படியான ஒரு கருத்தை பதிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், உண்மையில் கஹாலில் காவில் இஸ்லாமியரே இல்லை. அவர், இந்த சம்பவம் குறித்து முகநூலில் இட்ட பதிவில், All day I've had to remind myself that Jesus died for these people too. என்று குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமியரே அல்லாத ஒரு நபரை, இஸ்லாமியர் என்று கருதி தீவிரவாதி என்று பச்ச்சக்குத்தி சென்று அந்த நபரை கண்டு என்னவென்று வருந்துவது.

  வைரல்!

  வைரல்!

  கடந்த திங்களன்று நடந்ததாக கருதப்படும் இந்த சமபவத்தை குறித்து கஹாலில் காவில் தனது முகநூல் முகவரியில் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவு மக்களிடையே வைரலாக பரவியது.

  இன்று வரையிலும் 21 ஆயிரம் பேர் அதை லைக் செய்திருக்கிறார்கள், 6.5 ஆயிரம் பேர் மற்றவர்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள்., 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்கள் கமெண்ட்டுகளாக பதிவாகி இருக்கிறது.

  நன்றி!

  இனவெறி சார்ந்து தான் பதிவிட்டு முகநூல் பதிவு வைரலாக பரவியதை கண்டு, பதிவை பகிர்ந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றி மற்றும் அன்பினை வெளிப்படுத்திக் கொள்கிறேன்.

  இந்த ஒரு பரபரப்பான வாரத்தில் எனக்கு துணையாக, உறுதுணையாக எனது குடும்பத்தாரும் இருந்தனர். அவர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து மற்றுமொரு முகநூல் பதிவிட்டிருக்கிறார் கஹாலில் காவில்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Real Life Story: Customer Refused To Tip Waiter With A ‘Muslim Name’

  A muslim man shared a picture of a bill that had We dont tip terrorist as his name was being displayed on the bill. Check out the whole story.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more