For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எடப்பாடி சாமிக்கு ஸ்பெஷல் பூஜை... ஒரு அர்ச்சனைய போடுவோமா?

  By Staff
  |

  யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கான எழுதப்படவில்லை. இது அவ்வளவு சீரியஸ் மேட்டரும் இல்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம்.

  interesting and fun facts about edappadi palanisamy

  சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு அருகில் உள்ள சிலுவம்பாளையத்தில் பிறந்த சின்ன கவுண்டர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் பிறந்தது மே 12, 1954. இவருடைய அப்பா கருப்ப கவுண்டர், அம்மா தவுசாயம்மாள். மனைவி ராதா, மகன் மிதுன்.

  இவருக்கு இன்று (மே 12) ஹேப்பி பர்த்டே. தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளுக்கு செல்பவர்களுக்கு தெரியும். அவரை சாமியாக கும்பிடச் சொல்லி அர்ச்சனை செய்யும் விளம்பரங்கள் போடப்படுவது. அப்படிப்பட்ட நம்ம எடப்பாடி சாமியைப் பற்றிய சில வித்தியாசமான அர்ச்சனையை நாம செய்வோமோ?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  டெபாசிட் போன சாமி

  டெபாசிட் போன சாமி

  1986 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தன் சொந்த ஊரான சிலுவம்பாளையம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, டெபாசிட்டையே இழந்த பெருமைக்கு உரியவர் தான் நம்ம சாமி.

  பட்டப்பெயர்

  பட்டப்பெயர்

  வெறும் பழனிச்சாமியாக இருந்த அவர் 1983 இல் அதிமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றபின், வெறும் பழனிச்சாமியாக இருந்த அவர் தன் தொகுதியின் பெயரால், எடப்பாடி பழனிச்சாமி என்று அழைக்கப்பட்டார்.

   கூவாத்தூர் முதல்வர்

  கூவாத்தூர் முதல்வர்

  சாலை போக்குவரத்து துறை, பொதுப்பணித் துறைகளில் அமைச்சராக இருந்த பழனிச்சாமிக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், சசிகலாவின் ரூபத்தில் அதிர்ஷ்டம் கதவை தட்டியது. ஓபிஎஸ் செய்த சில கோமாளித்தனத்தால், சசிகலா சிறைக்கு செல்லும்முன் இனி இவர்தான் முதல்வர் என கைகாட்டிவிட்டு சென்றார். அவரே கை காட்டினாரா இல்லை அவர் கைநீட்டும்போது இவர் சென்று குறுக்கே நின்று கொண்டாரா என்ற சந்தேகமெல்லாம் தமிழக மக்களுக்குள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது.

  சர்ச்சை

  சர்ச்சை

  எப்போதும் மோடியின் கண்ணசைவுக்கு ஏற்ப ஆட்டம் போட்டால் தான் தன்னுடைய ஆட்சி நிலைக்கும் என்று நினைத்து, தஞ்சாவூரில் நிற்கும் பொம்மை போல தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறார் என எதிர்கட்சிகளும் மக்களும் வசைபாடாத ஒரு மணி நேரம் கூட, பழனிச்சாமியின் காலண்டரில் இருக்க முடியாது. எதிர்கட்சி காரர்களுக்கு வாய்பபே கொடுக்காமல் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் எப்போதும் கண்டன்ட் கொடுக்கும் தாராள பிரபுவாக இருப்பவர் தான் நம்முடைய எடப்பாடி பழனிச்சாமி.

   சோசியல் மீடியா மீம்ஸ்

  சோசியல் மீடியா மீம்ஸ்

  இவர் மேடை ஏறி,மைக் பிடித்து என்ன பேசினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தித்திக்கும் செய்தியாக மாறும் அளவுக்கு உளறிக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு கரும்பையும் தந்து கூலியையும் கொடுக்கும் தாரளமனம் கொண்டவராகவே இருக்கிறார்.

  தர லோக்கல் டாக்

  தர லோக்கல் டாக்

  நீ, வா, போ என்று ஒருமையில் எதிர் கட்சிக்காரர்களை பேசுவது, நீயெல்லாம், உங்க அப்பா, வந்து பாரு என்று மம்மட்டியையும் கையிலெடுத்துகிட்டு, வேட்டியை மடிச்சிகட்டிட்டு மேடையிலயே ஸ்டாலினை எதிர்த்து, வரப்பு வெட்ட கிளம்புனாரு.

  கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார்

  கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார்

  தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய போது, அவர் செய்த காமெடிகளுக்கு அளவே இல்லை. பேசுகிறேன் என்ற பேர்வழியில் மேடையில் ஏறி பேசி சொதப்பினார். அவிழ்த்துவிட்டால், கீழே உட்கார்ந்து கேட்பவர்களுக்கு காமெடிக்கு பஞ்சமே இருக்காது.

  அந்த விழாவில், கம்பராமாயணம்தந்த சேக்கிழார் என்று பேசி, ஊடகங்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் அவல் ஆனார். எட்டுக்கால்பூச்சி எத்தனை கால் என்பதைவிட கொடுமையான காமெடியாக அது மாறிப்போனது.

  டெட்பாடி முதல்வர்

  டெட்பாடி முதல்வர்

  தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் பேசிக்கொள்வது போல் ஒரு மீம் வந்தது. அதில் கேப்டன் பிரேமலதாவை பார்த்து, ஏ புள்ள ஒரு டெட்பாடி முதலமைச்சராமே என்று. அதற்கு பிரேமலதா அது டெட்பாடி இல்ல எடப்பாடி என்று சொல்வது போல் ஒரு மீம் வந்து பெரும் அளப்பறையை கூட்டியது.

  image courtesy -https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/16807177_368761420189234_7204324957539879811_n.png?_nc_cat=0&oh=e04551066f18a30b9336a68e5728ac14&oe=5B89E47C

   எடுபிடி பழனிச்சாமி

  எடுபிடி பழனிச்சாமி

  ஒருமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், நாள் முதலமைச்சர் இல.லை. வெறும் பழனிச்சாமி தான். இப்போதும் ஜெயலலிதா தான் முதலமைச்சர் என்று சொன்னார். சும்மா விடுவோமா?... அப்போ இனிமே உன் பேரு எடப்பாடி பழனிச்சாமி இல்ல. எடுபிடி பழனிச்சாமி என்று மீம்ஸ் போட்டு கலாய்த்துவிட்டார்கள்.

  image courtesy -https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/v/t1.0-9/21751772_754711768048472_6858806197972124695_n.jpg?_nc_cat=0&oh=8bc0fe363d18bd65544fb6cbeb42580d&oe=5B7FC2DB

   எடப்பாடி சாமி மீம்ஸ்

  எடப்பாடி சாமி மீம்ஸ்

  சமீபத்தில் திடீரென திரையரங்குகளில் ஒரு அர்ச்சனை விளம்பரம் வந்தது. அதில் வரும் பெண் அர்ச்சகரிடம் அர்ச்சனை உள்ளே இருக்கும் சாமிக்கு இல்ல. நம்ம எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று சொல்லும்படி, இருந்தது. அதன்மீது பல சர்ச்சைகள் வந்ததால், அமைச்சர் ஜெயக்குமார் அந்த விளம்பரம் இனி வராது என ஊடகங்களில் உறுதியளித்தார். அவர் சொன்னதுபோல், அந்த விளம்பரம் வரவில்லை தான். ஆனால் அதற்கு பதிலாக வேறொரு விளம்பரம் வந்தது. அதில் ஒரு பெண்ணுக்கு பதிலாக ஒரு மாற்றுத் திறனாளி அதே டயலாகை சொல்வது போல இருந்தது. இப்படி அரசு செலவில் தனக்கு தானே விளம்பரமும் செய்து கொள்வதில் இவர் மோடிக்கு ஜூனியராக இருக்கிறார்.

  image courtesy - youtube

  கோவில்பட்டி கடலைமிட்டாய்

  கோவில்பட்டி கடலைமிட்டாய்

  இந்நிலையில், நேற்று கோவில்பட்டியில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற அவர், அந்த ஊர் மக்களைப் பார்த்து, கோவில்பட்டி மக்கள் இந்த ஊர் கடலை மிட்டாயைப் போல இனிமையானவர்கள் என்று பேசியிருக்கிறார். இதில் பலருக்கும் இருக்கும் சந்தேகம் என்னவென்றால், இவர் தானாக இதெல்லாம் பேசி தனக்குத்தானே வைரல் மீம் போட்டுக்கொள்கிறாரா இல்லை இதற்காக 11 பேர் கொண்ட குழு ஏதாவது இருக்கிறதா என்று இளைஞர்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்.

  வோட் ஃபார் பிஜேபி

  வோட் ஃபார் பிஜேபி

  இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடும் இவர் இன்றைக்காவது சும்மா இருக்க்ககூடாதா?... கர்நாடகத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவில் பிஜேபி வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது என்று அவருடைய வழக்கமான குழந்தை சிரிப்போடு (டோண்ட் டேக் சீரியஸ்) சொல்லியிருக்கிறார்.

  இப்படி எதிர்கட்சிக்காரர்களுக்கு கௌரண்டையே கொடுக்காமல், ஃபீல்டிங், பௌலிங், பேட்டிங் என ஃபுல் பார்மில் இருக்கும் நம்முடைய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஹேப்பி பர்த்டே சொல்வதன் மூலம் நாமும் சாமிக்கு ஒரு அர்ச்சனையை போட்டு வைப்போம். ஹேப்பி பர்த்டே சிஎம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  interesting and fun facts about edappadi palanisamy

  Palaniswami was elected by party MLAs, staying at a resort in Koovathur.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more