அதிரிபுதிரியான இந்தியர்களின் ஃபேஸ்புக் பதிவுகள். வயிறுகுலுங்க சிரிக்கலாம், சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க

Posted By: Staff
Subscribe to Boldsky

நம்ம ஆளுங்க ஃபேஸ்புக் லைக்ஸ் வேணும்னா என்னா வேணாலும் பண்ணுவாங்ககிறதுக்கு இதுதான் ஆதாரம். அம்மா இறந்துட்டாங்கன்னு சோகமா ஒருத்தர் மயானத்தில இருந்து செல்ஃபீ எடுத்துப் போடுறாங்க... புருஷன் கூட ரக்ஷா பந்தன், பொண்டாட்டி தங்கச்சி கூட ஹனிமூன், அண்ணா - அண்ணி முதலிரவுக்கு தனக்கு விஷ் பண்ண சொல்ற தம்பின்னு நம்ம இந்தியர்கள் ஃபேஸ்புக்குல செய்யாத அலப்பறையே இல்ல.

இந்த போஸ்ட் எல்லாம் காலத்தால் அழியாத சுவடுகளா ஃபேஸ்புக்குல பல வருஷமா நிறையா பேஜ், க்ரூப்ல ஷேர் ஆகிட்டே இருக்குறது தான்.

சப்போஸ் நீங்க கொஞ்சம் மன அழுத்தம், பதட்டம், கோபத்தோட இருந்தீங்கன்னா... இந்த போஸ்ட் எல்லாம் ஒருமுறை பாருங்க... எல்லாம் பறந்து போயிடும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்துங்க...

வாழ்த்துங்க...

அண்ணா - அன்னிக்கி கல்யாணம் ஆயிடுச்சு... அவங்களுக்கு இன்னிக்கி முதலிரவுன்னு போஸ்ட் போட்டதே தப்பு. அதுலயும்... என்ன வாழ்த்துங்க நீ சொன்னத்து ரொம்ப, ரொம்ப தப்பு. நம்ம பசங்க நல்லா தெரிஞ்ச தாய்மொழியில எழுதாம, அரைகுறை ஆங்கிலத்துல எழுதுறதுனால தான் இம்புட்டு பிரச்சனையும்.

50 பேரு கூடவா...

50 பேரு கூடவா...

நல்லவேளை இப்போ இந்த மாதிரி போஸ்ட் எல்லாம் நிறையா வரது இல்ல. முன்னெல்லாம் இந்த மாதிரி போஸ்ட் நிறையா பார்க்க முடியும். லைக்ஸ் வேணும்ங்கிற ஒரே காரணத்துக்காக குட் நை, குட் மார்னிங்ல தொடங்கி, சாப்பிட்டது, எக்ஸாம் எழுதுனது வரைக்கும் எல்லா போஸ்ட்லயும் நம்மள டேக் பண்ணி சாவடிப்பாங்க. அப்படி தான் இந்த பொண்ணும் சிக்கியிருக்கு. ஏம்மா ஐம்பது பேரு கூட ஏடாகூடமா இருக்குன்னு போஸ்ட் போடும்போது கூடவா தெரியல... லைக்ஸ் கண்ண மறைச்சிடுதுல.

தப்பில்ல தம்பி?

தப்பில்ல தம்பி?

ஹனிமூன் போகும்போது சிலர் குடும்பத்தோட கிளம்புறத பார்க்க முடியும். பெரும்பாலும், சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கும் போது இப்படி எல்லாம் செய்வாங்க. சரி! நீ ஹனிமூன் ஃபேமிலியோட போனது தப்பில்ல தம்பி. ஆனால், ஹனிமூன் வித் கொழுந்தியான்னு போட்டது தான் தப்பு.

ரைட்டு...!

ரைட்டு...!

நாம செல்ஃபீக்கும், ஃபேஸ்புக் போஸ்ட்க்கும் எவ்வளோ அடிக்ட் ஆகியிருக்கோம்ங்கிறத எடுத்துக்காட்டுற போஸ்ட் தான் இது. அம்மா இறந்துட்டாங்க... சோகமான நிகழ்வு தான் ஒத்துக்கலாம். ஆனா, இறுதிசடங்கு நடக்குற நேரத்துல எரியிற உடலோட செல்ஃபீ எடுத்துப் போடுறது எல்லாம் என்ன மாதிரியான நாகரீகம் தம்பி?

அடுத்தது!

அடுத்தது!

அங்கிட்டு ஒரு பொண்ணு 50 பேருகூட தூங்கப் போறேன்னு போட்டிருந்தாங்க. இங்கிட்டு ஒரு பொண்ணு எனக்கு 22 பேர் கூட நிச்சயம் ஆயிருக்குன்னு போட்டிருக்கு. லைக் வேணும்னா பேசாமா கேட்டு வாங்கிக்கங்க மக்களே. இதுமாதிரி டேக் பண்ணி எங்கள சாவடிக்காதீங்க.

வேற லெவல்!

வேற லெவல்!

என்னமோ விபத்து நடக்க இருந்த இடத்துல போய் நாலு பெற காப்பாத்துன மாதிரியும், அதுக்கு டிராபிக் போலீஸ் இவருக்கு அவார்டு கொடுத்த மாதிரியும் செல்ஃபீ எடுத்து போஸ்ட் போட்டிருக்கு இந்த பக்கி. பாஸ்.. பண்ணது தப்பு... இது ஃபீலிங் ஹேப்பி வித் டிராபிக் போலீஸ்.

முத்தம்?!!?!

முத்தம்?!!?!

ஏம்பா தம்பி... அந்த ஹீரோ தன் கூட நடிக்கிற நடிகைளுக்கு எல்லாம் எப்படி முத்தம் கொடுப்பார்ன்னு தெரியும்ல... இம்ரான் மாதிரியே முத்தம் தங்கச்சிக்கு கொடுக்குறேன்னு வேற பெருமை.... பாலியல் வன்கொடுமை சட்டத்துல உன்ன உள்ள பிடிச்சுப் போட்டுருவாங்க ஜாக்கிரதை!

புருஷன் கூடவா?

புருஷன் கூடவா?

அங்க என்னடான்னா ஒருத்தர் பொண்டாட்டி, பொண்டாட்டி தங்கச்சியோட ஹனிமூன் கொண்டாடுறேன்னு போஸ்ட் போடுறாப்புல. இங்கே என்னடான்னா... தாலி கட்டுன புருஷன் கூட ரக்ஷா பந்தன் கொண்டாடுறேன்னு பொண்டாட்டியே போஸ்ட் போடுறாங்க. இதுக்கெல்லாம் நடுவுல ஒருத்தன் இம்ரான் ஸ்டைல தங்கச்சிக்கு முத்தம் குடுப்பேன்னு சொல்றான். இவங்க எல்லாம் என்ன ரிலேஷன்ஷிப்ல வாழ்றாங்கன்னே தெரியல...

அப்பாஸ்!

அப்பாஸ்!

அப்பாஸ் ஹீரோ கேள்வி பட்டிருப்பீங்க. இது வேற அப்பா'ஸ். அதாவது அப்பாக்கள். ஹேப்பி ஃபாதர்ஸ் டே டூ எல்லா அப்பாக்களுக்கும். ஏம்பா... பெரியப்பா, சித்தப்பாவாவே இருந்துட்டு போகட்டுமே... அதுக்குன்னு இப்படி மங்குனி அமைச்சர் மாதிரி போஸ்ட் போட்டா வரலாறு தப்பா பேசாதா...?

ஆஹான்!!!

ஆஹான்!!!

அப்படியே ஐ.எஸ்.ஆர்.ஓ-ல சீனியர் சயிண்டிஸ்ட் இவரு... சந்திராயன விண்வெளியில ஏவிவிட்டுட்டாரு... முதல் தடவ செக்ஸ் வெச்சுக்க போறேன்னு போஸ்ட் வேற... ஏதோ கலாய்க்க ட்ரை பண்ணி போஸ்ட் போட்டிருந்தாலுமே கூட.. இப்போ கூகிள், ஃபேஸ்புக்குன்னு இந்த போஸ்ட்ட ஷேர் பண்ணி கலாய்க்கிறாங்களே... இப்போ என்ன பண்ண முடியும்?

தக்காளி சட்னி!

தக்காளி சட்னி!

தட் தக்காளி சட்னி மொமன்ட்!

லவ்லி ஆக்சிடென்ட்???? சரி அப்படியே இருக்கட்டும்ங்க சார்... இது பார்க்க எப்படி இருக்கு தெரியுமா? நெத்தியில மீதமான தக்காளி சட்னி கொட்டுன மாதிரியும், மூஞ்சியில நல்ல பான்பராக் போட்டு துப்புன மாதிரியும் இருக்கு. லெஜண்டு மண்ணை சாதிக்குக்கே டஃப் கொடுப்பாங்க போல...

வருங்கால இந்தியா!

வருங்கால இந்தியா!

இந்தா... சித்த நேரம் முன்ன தான் விமான விபத்துல இருந்து தப்பி பிழைச்சு.. கண்ணாடி போட்டுக்கிட்டு இறங்கி வராரு நம்ம எதிர்காலம்.

இந்த மாதிரி மொக்கையா போட்டோஷாப் பண்றதுக்கு இவங்களுக்கு யாரு கத்துக்கொடுத்தா... இவங்களோட முன்னோடி யாருன்னு தான் தெரியல.

எவ்வளோ பேரு!

எவ்வளோ பேரு!

வர்கிங் அட் காலேஜ், ஸ்கூல், நாட் யட் எம்ப்லாய்டுன்னு... வேற லெவல்ல வர்கிங் போஸ்ட் போடுற மக்கள பார்த்திருப்போம். இந்த தம்பி வேற லெவல். இத படிச்சு புரிஞ்சுக்கவே நாம தனியா பி.எச்.டி படிக்கணும். வடிவேலு சொல்ற மாதிரி.. பைத்தியமா இவன்னு... தான் சொல்ல தோணுது.

டி.ஆர்-க்கே சவால்!

டி.ஆர்-க்கே சவால்!

எதுகை மோனைன்னாலே டி.ஆர் தான் எல்லாரோட நினைவுக்கும் வருவாரு. ஆனால், அவருக்கே சவால் விடுவான் போல நம்ம பய. பார்த்தீங்கல. என் டிபி பார்த்து பிபி (BP) கண்ட்ரோல் பண்ணிக்கிங்கன்னு போட்டிருக்காப்புல.... நல்லா ஸ்டைலா தானப்பு இருக்கீங்க. அப்பறம் எதுக்க்க்க்க்க்க்கு இது!

நட்பு ரத்து!

நட்பு ரத்து!

விவாக ரத்து, காதல் ரத்து எல்லாம் கூட கேள்வி பட்டிருப்போம். நட்பு ரத்து எங்காவது கேள்வி பட்டிருக்கீங்களா? அப்படி இல்லனா... தம்பிய பார்த்துக்குங்க. இனிமேல் முதாசிர் என் நண்பன் கிடையாதுன்னு பிரிக்கப் பண்ணி. எக்ஸ் மார்க் எல்லாம் வேற... புதுசா சல்மான் கூட நட்பு மலர வெச்சிருக்காரு.

திரும்ப...

திரும்ப...

முதாசிர் நட்ப திருப்பி வளர்த்துக்கிட்டு. இப்ப எனக்கும் சல்மானும், முதாசிரும் ரெண்டு கண்ணு மாதிரி ரெண்டு பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்ன்னு போஸ்ட் பண்ணியிருக்காப்புல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indians Funny Facebook Posts!

Hilarious Facebook Post by Indians Will Make You ROFL.