சன்னி லியோன் போஸ்டர் வைத்து 10 ஏக்கர் நிலத்தில் ஏகபோக விளைச்சல் காணும் விவசாயி (வீடியோ)

Posted By: Staff
Subscribe to Boldsky

இந்திய கலாச்சாரத்தில், தங்கள் நிலத்தை காக்க, கெட்ட சக்தியால் பாதிப்பு அடையாமல் இருக்க, யாரேனும் திருடர்கள் வந்தால், தொலைவில் ஒரு ஆள் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த சோளக்காட்டு பொம்மைகள் விவசாயி நிலங்களுக்கு நடுவே வைக்கப்படும்.

விவசாய நிலங்கள் மட்டுமின்றி, புதியதாக காட்டப்படும் கட்டிடங்களிலும் கூட இப்படியான பொம்மைகளை நாம் காண இயலும்.

ஆனால், ஆந்திராவை சேர்ந்த விவசாயி ஒருவர் கெட்ட பார்வையில் இருந்து தனது நிலத்தை பாதுகாக்க ஆபாசப் பட நடிகைகளின் போஸ்டர்களை மாட்டி வைத்திருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொதுவா என்ன பண்ணுவாங்க...

பொதுவா என்ன பண்ணுவாங்க...

விவசாயிகள் தங்கள் விளைச்சல் நன்கு இருக்க வேண்டும் எனில், பூமி, சூரியன், விலங்குகள் போன்றவற்றை வணங்குவதை நாம் அறிவோம். அந்தந்த காலத்திற்கு அந்தந்த தேவையான பூஜைகளையும் செய்வார்கள்.

இதில் சிலவன அறிவியல் ரீதியான நம்பிக்கைகளாக காணப்படுகின்றன. சிலவன மூட நம்பிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால், எங்குமே காணப்படாத ஒரு விஷயமாக ஆந்திராவை சேர்ந்த ஒரு விவசாயி சன்னி லியோன்

போஸ்டரை வணங்கி வருகிறார்.

Image Source: Viral4Real

செஞ்சு ரெட்டி!

செஞ்சு ரெட்டி!

செஞ்சு ரெட்டி எனும் இந்த இந்திய விவாசாயி தான், இப்படியான நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஆண்டு நஷ்டம் அதிகரித்துக் கொண்டே இருக்க மிகவும் நொந்து போயிருந்தார் செஞ்சு ரெட்டி.

இவர் காலிஃபிளவர், மிளகாய் போன்றவற்றை விளைவித்து கொண்டிருந்த விவசாயி ஆவார்.

Image Source: Viral4Real

திடீர் மாற்றம்!

திடீர் மாற்றம்!

இவர் நிலத்தில் காலிஃபிளவர், மிளகாய் நன்கு விளைச்சல் ஆகிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென விளைச்சல் குறைந்து, நிலம் மோசமாக ஆரம்பித்துள்ளது. அப்போது செஞ்சு ரெட்டி தனது நிலம் சாலை ஓரத்தில் இருப்பதையும், அவ்வழியே சென்று வரும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தனது நிலத்தின் மீது கண் வைப்பதையும் அறிந்துள்ளார்.

Image Source: Viral4Real

கெட்ட கண்ணு!

கெட்ட கண்ணு!

செஞ்சு ரெட்டி தனது நிலத்தை கடந்து போகும் நபர்களின் "கண்ணு" தான் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்று முழுமையாக நம்பி இருக்கிறார். எனவே, இவர் தனது நிலத்தை காப்பாற்ற பெரிய அளவிலான ஆபாசப்பட நாயகிகளின் போஸ்டர்களை ஆங்காங்கே வைக்க துவங்கினார். மேலும், அந்த போஸ்டர்களில் "ஏய்! வருந்தாதே, என்னை கண்டு பொறாமைப் படாதே" என்ற வாசகமும் எழுதி இருந்தார் செஞ்சு ரெட்டி.

ஏகபோகமாக!

ஏகபோகமாக!

இந்த போஸ்டர்கள் வைத்த பிறகு மீண்டும் தனது நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது என்று கூறுகிறார் செஞ்சு ரெட்டி. இப்போது இவரது பத்து ஏக்கர் நிலமும் நல்ல விளைச்சல் அடைகிறதாம். மனிதரின் தீய பார்வை விலக வேண்டும் என்பதற்காகவே சன்னி லியோன் படத்தை வைத்திருக்கிறார் செஞ்சு ரெட்டி.

தந்திரம்!

தந்திரம்!

எனது தந்திரம் நன்கு பயன் அளித்தது. இப்போது யாரும் எனது நிலத்தை பார்ப்பது இல்லை. சில மாதங்களில் நான் நல்ல மாற்றத்தை கண்டேன் என்கிறார் செஞ்சு. மேலும், நிலத்தின் மீது கண்ணு வைக்காமல் அனைவரும் படத்தை மட்டுமே கண்டு செல்கிறார்கள் என பெருமிதத்துடன் கூறுகிறார்

ரசிகரா?

சரி சன்னி லியோன் படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? நீங்கள் அவரது ரசிகரா? என்ற கேள்வி எழுப்பியதற்கு. இல்லை தனது நண்பர் மூலமாக சந்நிலி லியோன் பற்றி அறிந்தேன் என பதில் அளித்துள்ளார் செஞ்சு ரெட்டி. இவரது ஆபாச போஸ்டர்களுக்கு இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Indian Farmer Believes That Sunny Leone Poster Only Saves His 10 Acre of Land!

This Indian Farmer Believes That Sunny Leone Poster Only Saves His 10 Acre of Land!
Story first published: Thursday, March 8, 2018, 10:30 [IST]