For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  யாருப்பா இந்த ப்ரியா பிரகாஷ் வாரியர்? வாங்க ஒரு அலசு, அலாசுவோம்!

  |

  சமூக தளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற தளங்களில் திடீரென சிலர் வைரலாவது உண்டு. அதில் சிலர் திறமை காரணாமாக, புதுமை காரணமாகவும், வேறு சிலர் மொக்கை போட்டும், கவர்ச்சி காட்டியும் கூட வைரலாகியிருக்கிறார்கள். ஆனால், வெகு சிலரே ஊடங்கள் பேசும் வகையில் ஃபேமஸாகி, இளைஞர்கள் மனதில் பம்பரம் விட்டு தலை சுற்ற வைத்திருக்கிறார்கள்.

  அதில், எருமை சாணி ஹரிஜா முதல் ஜிம்மிக்கி கம்மல் ஷெரில் வரை பலரை குறிப்பிடலாம். அப்படியாக சமீபதில் மற்றுமொரு கேரள பெண் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

  இப்படி திடீரென டிரெண்டாகி இளைஞர்களை கவர்ந்த இந்திய பெண்கள் யார், யாரென்ற இனி இந்த தொகுப்பில் காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பெயர் என்ன?

  பெயர் என்ன?

  கடந்த சில தினங்களாக தனுஷ் நடித்த த்ரீ படத்தின் "இதழில் ஒரு ஓரம்" பாடலின் பின்னணி இசைக்கு, பள்ளி பயிலும் மாணவ, மாணவி இருவர் கண் பாஷையில் காதலித்துக் கொள்வது போன்ற வீடியோ பதிவு வேற லெவல் டிரெண்ட் ஆகிவருகிறது.

  அந்த பெண்ணின் பெயர் என்ன? அந்த வீடியோ பதிவின் உண்மையான வடிவம் எந்த படத்தினுடையது என்று எந்த செய்தியும் அறியாமல் அதை வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக தளங்கள் அனைத்திலும் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  ப்ரியா பிரகாஷ் வாரியர்!

  ப்ரியா பிரகாஷ் வாரியர்!

  கேரளாவை சேர்ந்த அந்த பெண் இப்போது தமிழகத்தில் மட்டுமின்றி ஆல் இந்தியா ஃபேமஸ் ஆகியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் உட்பட பல முன்னணி செய்தி ஊடகங்களும் அந்த பெண்ணை பற்றிய செய்திகளை வைரலாக பதிவிட்டு வருகிறார்கள்.

  அந்த பெண்ணின் பெயர் பிரியா பிரகாஷ் வாரியர்!

  ஒரு அதார் லவ்!

  ஒரு அதார் லவ்!

  இந்த வருடம் வெளியாகவிருக்கும் ஒரு அதார் லவ் (Oru Adaar Love) என்ற படத்தில் வரும் பாடல் வீடியோ தான் இது. "மாணிக்யா மலராய பூவி" என்ற பாடலில் இந்த இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சரியாக 01.30 - 01.50 என்ற இடைவெளியில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர் என்ற இந்த இளம் பெண்ணுடன் நூரின் ஷெரீப் என்ற மிஸ் கேரளா ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் 2017 பட்டம் வென்ற பெண்ணும் நடிக்கிறார்.

  ஜிம்மிக்கி கம்மல் ஷெரில்!

  ஜிம்மிக்கி கம்மல் ஷெரில்!

  ஜிம்மிக்கி கம்மல் என்றாலே ஷெரில் ஜி கடவன் பெயர் தான் நினைவுக்கு வரும். இவர் கொச்சியில் இயங்கி வரும் இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் அக்கவுண்டிங் பயிற்றுவித்து வந்த ஆசிரியை. இவர் மற்றும் இவரது குழு ஜிம்மிக்கி கம்மல் என்ற மோகன் லால் படத்தில் வந்த பாட்டுக்கு நடமாடிய வீடியோ பதிவு யூடியூப்பில் மில்லியன் கணக்கான பார்வைகள் பெற்று பெரும் ஹிட்டானது.

  அதிர்ச்சி!

  அதிர்ச்சி!

  இப்படி ஹிட் ஆகும் என்று இவர்களே எதிர்பாராத தருணத்தில் தான் ஷெரில்க்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. முகநூலில் இவரது பெயரில் எண்ணற்ற போலி கணக்குகள் துவக்கப்பட்டு வந்தன.

  தானும், தனது குழுவும் இப்படி ஒரு ஈர்ப்பு எங்கள் வீடியோவுக்கு வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஓரிரு நாட்களில் எங்கள் கைகளை மீறி ரீச் சென்றுவிட்டது என கூறியிருந்தார் ஷெரில்.

  எருமை சாணி ஹரிஜா!

  எருமை சாணி ஹரிஜா!

  போடா எருமை சாணி... என்றால் நிச்சயம் ஹரிஜாவும், அவருடன் வீடியோக்களில் தோன்றும் ஹாய் ஆன்டி விஜயும் தான் நினைவிற்கு வருவார்கள். இவர்களது ஊட்டி ட்ரிப் வீடியோ செம்ம வைரலானது. அத்துடன் சேர்ந்து ஹரிஜாவும் செம்ம டிரெண்டானார்.

  நிச்சயம்!

  நிச்சயம்!

  மெட்ராஸ் சென்ட்ரல், ஜம்ப்-கட்ஸ் போல தொடர்ந்து ஹிட் வீடியோக்கள் தராமல் போனாலும், ஹரிஜாவுக்காகவே பல வீடியோக்களின் க்ளிப்பிங்க்ஸ், ஸ்க்ரீன் ஷாட்ஸ் மீம் டெம்ப்ளேட்டாக மாறின. நடுவே, ஹரிஜாவுக்கு நிச்சயம் முடிந்த செய்தி கேட்டு வருத்தப்பட்ட ரசிகர்கள் பலர். இதில், எருமை சாணி விஜய்யின் ரசிகர்களும் அடங்கியிருந்தார்கள்.

  சாரா!

  சாரா!

  ம்யூசிக்லி என்பது ஒரு மொபைல் செயலி. இதன் மூலமாக, பாடலுக்கு வாய் அசைத்து அதை வீடியோவாக வெளியிடலாம். இப்படி தான் சாரா என கூறப்படும் இந்த பெண்ணும் ஒருசில நாட்களில் வைரலாக மாறினார்.

  இவரது பெயர் சாரா தானா? இவர் யார்? எவர்? என்ற எந்த தகவலும் தெளிவாக இல்லை. மொத்தமே ஒரு பத்து பதிவுகள் தான் வெளியிட்டிருப்பார் ஆள் ஆல் தமிழ்நாடு ஃபேமஸ் ஆகிவிட்டார்.

  ஆனால், இந்த வைரல், டிரெண்ட்டிங் எல்லாம் பிடிக்காத இந்த பெண் அந்த பத்து வீடியோக்களுடன் காணாமல் போய்விட்டார்.

  'லக்ஷ்மி' லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி!

  'லக்ஷ்மி' லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி!

  லக்ஷ்மி என்ற குறும்படம் மூலம் ஒரே நாளில் வைரலான பெண் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி. இவர் இதற்கு முன்னும் சில குறும்படங்களில் நடித்திருந்தார். மேலும், நிவின் பாலி தமிழில் நடித்த ரிச்சி படத்தில் சதுரங்க வேட்டை புகழ் நடிகர் நட்டியின் காதலியாக நடித்திருந்தார்.

  லக்ஷ்மி குறும்படத்தில் இவர் ஏற்ற பாத்திரம் சமூகத்தில் நடந்திராக விஷயம் அல்ல. ஆயினும், அந்த பாத்திரத்தின் காரணமாக இவரை வன்மையாக பலர் விமர்சித்து கருத்துக்கள் வெளியிட்டிருந்தனர்.

  சப்னா வியாஸ் படேல்!

  சப்னா வியாஸ் படேல்!

  சப்னா வியாஸ் பட்டேல் இன்ஸ்டாகிராம் மூலம் வைரலான பெண். முன்னொரு காலம் குண்டாக இருந்த இந்த இளம்பெண், ஒரு கட்டத்தில், இவரது உறவினர் குழந்தையுடன் வெளியே சென்ற போது.. தவறாக யாரோ இவரது குழந்தை என்று கருதி பேசிடவே.. அதை வைராக்கியமாக கொண்டு, தனது உடல் எடையை குறைத்து ஃபிட்டானார். பிறகு பல பயிற்சிகள் மேற்கொண்டு இப்போது ஃபிட்னஸ் பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார்.

  மிர்னாலினி ரவி!

  மிர்னாலினி ரவி!

  டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் மிர்னாலினி ரவி குறித்து நாம் கூற தேவையே இல்லை, இவரது டப்ஸ்மேஷ்கள் மிகவும் பிரபலம். இவர் பல முன்னணி தொலை காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார். இப்போது சினிமா வாய்ப்புகள் பல இவரது வீடு தேடி வந்துக் கொண்டிருக்கின்றன.

  நூறு நாள் புடவை சவால்!

  நூறு நாள் புடவை சவால்!

  சன்டிவியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஐஸ்வர்யா ராகவ் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு புடவையின் அழகை சமூக தளத்தில் வெளிக்கொண்டு வர #100sareedays சாலஞ் என்ற சவாலை கொண்டுவந்தார். இதன்படி நூறுநாள் தொடர்ந்து புடவை உடுத்தி புகைப்படங்கள் வெளியிட வேண்டும். இவருடன் சேர்ந்து பல பெண்கள் இந்த சவாலை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  India Girls Who Went Viral on Social Media!

  Oru Adaar Love Girl Priya Prakash Varrier and Other Girls Who Went Viral on Social Media!
  Story first published: Monday, February 12, 2018, 14:12 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more