ஏன் 5 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்?... அதில் அப்படி என்ன அற்புதம் இருக்கு?

Subscribe to Boldsky

ருத்ராட்சை என்பது சிவ பக்தர்கள் அணியும் ஒரு ஆன்மீக அடையாளமாகும். இது பொதுவாக உருண்டை வடிவத்தில் மணி போல் இருக்கும். ருத்ராட்சதில் பலவகை உண்டு. ருத்ரன் என்பது சிவ பெருமானைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். ஒரு முகம், இரண்டு முகம் என்று 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாகக் கூறுகின்றனர்.

spirituality

இதில் 14 முகம் ருத்ராட்சம் வரை மனிதர்கள் அணிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் 5 முக ருத்ராட்சம் மிகவும் புகழ் பெற்றது. ருத்ராட்ச உற்பத்தியில் 50-60% 5 முக ருத்ராட்ச உற்பத்தியே ஆகும். இந்தோனேசியா ருத்ராட்சம் அளவில் மிகவும் சிறியதாக கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐந்து முக ருத்ராட்சம்

ஐந்து முக ருத்ராட்சம்

ருத்ராட்சத்தில் குறிப்பாக இந்த 5 முக ருத்ராட்சத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ருத்ராட்சம் சிவ பெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று என்று நம்பப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தை ஒருவர் பக்தி சிரத்தையோடு அணிவதால் அவருடைய பாவங்கள் அழிக்கப்படுகின்றன. நவகிரகத்தில் குருவின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவ குரு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கெல்லாம் குரு என்பது இதன் பொருள் ஆகும்.

எங்கு அணிய வேண்டும்?

எங்கு அணிய வேண்டும்?

ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் மிகப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக அறியப்படுகிறது. மேலும் இதய தொடர்பான கோளாறுகள், டென்ஷன், பதட்டம், இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சிலர் கைகளில் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார்கள். பிரேஸ்லெட்டில் இணைத்து அணிவார்கள். அதையெல்லாம் விட, கழுத்தில் அணிவது தான் சிறந்த நன்மைகளைத் தரும்.

அணியும் வழிமுறைகள்

அணியும் வழிமுறைகள்

இந்த 5 முக ருத்ராட்சத்தை அணிவதற்கான வழிமுறைகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சிவன் கோயிலில் உள்ள பிராமண குருக்களின் மூலமாக ருத்ராட்சத்திற்கு பூஜை செய்து ஆற்றலை செலுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பிராண பிரதிஷ்டை பூஜை முடிந்தவுடன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளுங்கள்.

பண்டிதரிடம் ஆலோசித்து, நல்ல சுப முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து பிராண பிரதிஷ்டை பூஜையை செய்யுங்கள்.

தினமும் உங்களால் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள முடியாவிட்டால், ஒரு சிறிய பெட்டியில் இதனை வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு தினமும் பூஜை செய்து வரலாம்.

கனமான நூல் அல்லது கயிறில் கழன்று விடாதபடி, இந்த ருத்ராட்சத்தை அணித்து கொள்ளுங்கள். இந்த ருத்ராட்சம் கீழே நிலத்தில் விழாதபடி ஆழ்ந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

ருத்ராட்சத்தை அணியும் நாள் நல்ல சுப முகூர்த்த நாளாக இருக்க வேண்டும். குறிப்பாக திங்கள், வியாழன் போன்ற நாட்களாக இருப்பது நல்லது.

அடிக்கடி ருத்ராட்சத்தை சுத்தம் செய்யுங்கள். இதன் துளைகளில் அழுக்கு அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த பிறகு, புனித நீரால் இதனை கழுவுங்கள். இதனால் ருத்ராட்சத்தின் புனிதம் பாதுகாக்கப்படுகிறது.

ருத்ராட்சத்திற்கு எண்ணெய் தடவுவதை எப்போதும் மறக்க வேண்டாம். சுத்தம் செய்தவுடன் இதற்கு எண்ணெய் விட்டு, ஊதுபத்தி கொண்டு பூஜை செய்யவும். நீண்ட நாட்கள் கழுத்தில் அணியாமல் இதனை பெட்டியில் வைத்திருப்பவர்கள் இந்த முறையை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

ருத்ராட்சத்தின் அளவு மற்றும் வடிவம் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. முகம் சரியாக வரையறுக்கப்பட்டதாகவும், அதன் கோடுகள் தெளிவாக தெரியும்படியாகவும் இருப்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளவும். ருத்ராட்சத்தின் மத்தியில் விரிசல் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ருத்ராட்சத்தை உள்ளங்கையில் வைத்தவுடன், ஆன்மீக நோக்குள்ளவர்களுக்கு ஒரு அதிர்வு உண்டாகும். இத்தகைய அதிர்வை நீங்கள் உணர்ந்தால், இந்த ருத்ராட்சம் உங்களுக்கு ஏற்றது.

இறுதியாக, ருத்ராட்சத்தை அணிந்தவுடன், சிவபெருமானை நோக்கி பக்தியோடு அவரின் ஆசிர்வாதம் மற்றும் கிருபை எப்போதும் கிடைக்க மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

இந்த 5 முக ருத்ராட்சத்தை எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தை பிறந்த வீட்டிற்கு அல்லது இறந்தவர்களின் வீட்டிற்கு செல்லும்போது சிலர் இந்த மணியை கழட்டி விட்டு செல்வார்கள். இந்த ருத்ராட்சம் என்பது உயர் ஆற்றலைக் கொண்ட ஒரு கல் என்று நம்பப்படுவதால் இத்தகைய தீட்டு உள்ள இடங்களுக்கு இதனை அணிந்து செல்லக் கூடாது என்பது நம்பிக்கை.

மண் படிந்த அல்லது அழுக்கு கைகளுடன் ருத்ராட்சத்தைத் தொடக் கூடாது.

தொடர்ந்து ருத்ராட்சத்தை அணித்து கொள்பவர் மாமிச உணவுகள் உட்கொள்வது மற்றும் மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு இந்த ருத்ராட்சத்தை வாங்குங்கள். மற்றவரிடம் கடனாகப் பெற்ற பணத்தில் இருந்து இந்த சக்தி மிகுந்த ருத்ராட்சத்தை வாங்கி அணியக் கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How to wear a 5 Mukhi Rudraksha

    Amongst all the different variants of Rudraksha that are available, the 5 Mukhi Rudraksha is the most popular.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more