ஸ்டைலா, கெத்தா இந்தியர்கள் ரூல்ஸ் பிரேக் பண்ணி, வசமா மாட்டின போட்டோ கலக்ஷன்!

Posted By: Staff
Subscribe to Boldsky
ஸ்டைலா, கெத்தா ரூல்ஸ் பிரேக் பண்ணி, வசமா மாட்டின போட்டோ கலக்ஷன்!- வீடியோ

சில வெளிநாடுகள்ல ரோடு முழுக்க காத்து வாங்குனாலும் கூட ரெட் சிக்னல் போட்டிருந்தா, நின்னு நிதானமா தான் போவாங்க. ஆனா நாம அப்படியா கிரீன் சிக்னல் மாறுறதுக்கு முன்னாடியே முறுக்கிட்டு கிளம்பிடுவோம். சிவப்பு சிக்னல் போட்டா தான் இன்னும் ஸ்பீடா போவோம். மஞ்சள் சிக்னல் எதுக்குன்னு நம்மள பெரும்பாலானவங்களுக்கு தெரியவே, தெரியாது.

நாம ரோட்டுல மட்டும் தான் ரூல்ஸ் ப்ரேக் பண்றோமான்னா? அதுவும் இல்ல. அமைச்சர் பலகோடி லஞ்சம் வாங்குறான், கொள்ளையடிக்கிறான்னு புலம்புவோம்.

ஆனா, நாமலே பாஸ்போர்ட் வாங்குறதுல இருந்து, ரேஷன் கார்டுல எக்ஸ்ட்ரா பொருள் வாங்குறதுக்கு எல்லாம் நூறு, ஆயிரம்ன்னு தயங்காம லஞ்சம்  தருவோம். குடுக்குறவன் இருக்குற வரைக்கும், வாங்குறவன் இருந்துட்டே தான் இருப்பான்.

இதெல்லாம் நாம ஏன் பண்றோம். நம்ம காரியம் சீக்கிரம் ஆகணும்ங்கிற ஒரு அவசரம். இந்த அவசரம் தான் நம்மள ரூல்ஸ் பிரேக் பண்ண வெக்குது.

அப்படி ரூல்ஸ் பிரேக் பண்ணி கேமரா கண்ணுல சிக்கின சில வேடிக்கையான போட்டோ கலக்ஷன் தான் இந்த தொகுப்புல நாம பார்க்க போறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியாயமாரே!

நியாயமாரே!

மக்கள் ரூல்ஸ் பிரேக் பண்ணா, அவங்கள பிடிச்சு ஃபைன் போடுறதே நீங்க தான். இப்படி நீங்களே கார் பார்கிங்ல டூ-வீலர் பார்க் பண்ணி ரூல்ஸ் பிரேக் பண்ணா, உங்க மேல யாரு சாமி ஃபைன் போடுறது?

ஆறு அறிவு?

ஆறு அறிவு?

இந்த போட்டோல சிக்கினது மாடு இல்ல, ஒரு "எரும". ஆறு அறிவு இருந்து என்ன பிரயோசனம். அதுக்கு இருக்க அறிவு கூட நமக்கு இல்லையே. இது மட்டுமில்ல, நடக்குறதுக்கு கிரீன் சிக்னல் போடுற வரைக்கும் காத்திருந்து ரோட் கிராஸ் பண்ண நாய் வீடியோ சமூக தளங்கல ரொம்பவே வைரல் ஆச்சு. அதையும் நாம பார்த்திருக்கோம்.

எதுக்கு?

எதுக்கு?

நாம பல சமயத்துல அரசாங்கம் போடுற ரூல்ஸ் எல்லாம் நம்ம மேல திணிக்கப்படுற ஒரு அழுத்தமா தான் பார்க்குறோம். அதனால தான் ஆபீஸ்ல மேனேஜர ஏமாத்த நினைக்கிற மாதிரி, ஸ்கூல், காலேஜ்ல டீச்சர்ஸ ஏமாத்த நினைக்கிற மாதிரி அரசாங்கத்தையும் ஏமாத்த நினைக்கிறோம்.

இதுல பின்னாடி உட்காரவங்களும் ஹெல்மட் போடனும்னு சொன்னதுக்கு தலைக்கு மேல கோபவம் வந்துச்சு பலருக்கு. ஆமாங்க! விபத்து ஏற்பட்டா வண்டி ஓட்டுறவன்ங்கள காட்டிலும், பின்னாடி உட்கார்ந்து போறவங்களுக்கு அதிக அடியும், மரணிக்கிற வாய்ப்பும் இருக்காமா. பின்ன ஹெல்மட் போட சொல்றது அவசியம் தானே!

வசூல் ராஜா!

வசூல் ராஜா!

பல சமயம் நாம சீக்கிரமா போகணும்ன்னு இப்படி யூ டர்ன் பண்ண கூடாத இடத்துல யூ டர்ன் பண்ணுவோம். சில இடத்துல சிக்னலுக்கு அந்தபக்கமா வசூல் ராஜாக்கள் நிக்கிறத பார்த்தா ஜஸ்ட் மிஸ்ன்னு நெனச்சுக்கிட்டு டக்கனு யூ டர்ன் பண்ணி எஸ்கேப் ஆகிடுவோம்.

நேரு மாமா!

நேரு மாமா!

மக்களுக்கு ஒரு பிரச்சனைனா கடவுள் கிட்ட போவாங்க... அந்த கடவுளுக்கே ஒரு பிரச்சனைனா எங்க போறது. மக்கள் ரூல்ஸ் பிரேக் பண்ணா சரி அவங்களுக்கு போதிய முதிர்ச்சி இல்லன்னு சொல்லலாம். பிரதமரே ரூல்ஸ் ப்ரேக் பண்ணா எப்படி? அதுவும் நீங்க நேரு மாமா இப்படி பண்ணியிருக்கலாமா?

ஆல் இந்தியன்ஸ் சேம் பிளட்!

ஆல் இந்தியன்ஸ் சேம் பிளட்!

மாநில வேறுபாடு இல்லாம நம்ம இந்தியர்கள் ஒற்றுமையா செய்யிற ஒரு விஷயம் இருக்குன்னா... அது நோ பார்கிங் ஏரியாவுல வண்டிய பார்க் பண்றது தான். கொஞ்ச தூரம் தள்ளிப் போனா பார்கிங் ஏரியா வந்திடும். அத தேட நேரம் இருக்காது, இல்ல அவசரம், கிவசரம்ன்னு சொல்லிட்டு கண்ட இடத்துல பார்க் பண்ணிட்டு போயிடுவோம். அப்பறம் ட்ராபிக் போலீஸ் வண்டிய தூக்கிட்டு போயிட்டா... அதுக்கு அவங்கள வசப்பாடி திட்டுறது.

கியா ரே?

கியா ரே?

ஸ்டிக்கர் ஒட்டி இருந்தா மட்டும் கூட பரவாயில்லன்னு சொல்லியிருக்கலாம். சோனமுத்தா அவங்க தான் அம்புக்குறி எல்லாம் போட்டு இங்க பொண்ணுக தான் உட்காரணும்னு சொல்லிருக்காங்க. அப்பவும் பாருங்களேன், ஏதோ முட்டி செத்தவன் மாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் லுக்கு விட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. அதுலயும் கடைசியில இருக்க பயபுள்ள ஸ்டைலா, கெத்தா கால் மேல கால் போட்டுக்கிட்டு வேற. அட்லீஸ்ட் குழந்தைய வெச்சிட்டு இருக்க பொண்ணுக்காவது உட்கார சீட் கொடுத்திருக்கலாம்.

அய்யோ பாவம்!

அய்யோ பாவம்!

எப்படியும் இவன்னுங்க ரெட் சிக்னல் போட்டாலும் க்ராஸ் பண்ணி தான் போறானுங்க, கிரீன் சிக்னல் போடுறதுக்கு முன்னாடியே முறுக்கிட்டு போயிடுறானுங்க. மஞ்சள் சிக்னல் எதுக்குன்னு வெச்சவனுக்கும் தெரியில, வண்டி ஒட்டுரவனுக்கும் தெரியில. அப்பறம் எதுக்கு தனி தனியா ஒளிர விட்டுக்கிட்டுன்னு சிக்னலே கன்ஃப்யூஸ் ஆகி எல்லா லைட்டும் எரிய விட்டுருச்சு போல.

மாற்றம்?

மாற்றம்?

இதுவொரு சின்ன விஷயம், அந்த எடத்துல செருப்பு கழற்று விடும் போது மிதிப்படும், உள்ள வரவங்களுக்கும், வெளிய போறவங்களுக்கும் அசௌகரியமா இருக்கும்னு சொல்லி தான் இங்கே காலணி கழற்றிவிட வேண்டாம்னு பதாகையே வைக்கிறாங்க. காரணம் தெரிஞ்சும் தப்பு பண்றவங்கள என்னன்னு சொல்றது?

அடுத்த லெவல்...

அடுத்த லெவல்...

நாம் பஸ், மெட்ரோ ரயில்லயே லேடீஸ் சீட் தரமாட்டோம். இதுல இப்படி தனி கம்பார்ட்மெண்ட் எல்லாம் கொடுத்து இது பொண்ணுகளுக்குன்னு சொன்னா மட்டும் கேட்டிடுவோமா? அட போங்க பாஸ் சும்மா விளையாட்டு பண்ணிக்கிட்டு.

எதுக்கு யூஸ்?

எதுக்கு யூஸ்?

நாம் எந்த பொருளையும் அதுக்கான காரணத்துக்கு யூஸ் பண்ணவே மாட்டோம். அதுக்கு ஒரு நல்ல உதாரணம் நடைப்பாதை. வண்டியில போகாதாவங்க வசதியா, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாம நடந்து போறதுக்கு பேரு தான் நடைப்பாதை.

ஆனா நாம அத அதுக்கா யூஸ் பண்றோம். அங்க தான் கடைப் போட்டு வியாபாரம் பண்ணுவோம். அதுக்கு நடைப்பாதை வியாபாரிகள் சங்கம்ன்னு வேற ஒன்னு வெச்சுக்குவோம். அப்பறம் அடிக்கடி இப்படி நடைப்பாதையில வாகனம் ஓட்டி, நடந்து வரவங்களுக்கு இடையூறு பண்ணுவோம். நாம எல்லாம் யாரு பாஸ்?

சூச்சூ...

சூச்சூ...

சாரி.. மன்னுச்சுக்குங்க. நோ பார்க்கிங் மட்டும் தான் இந்தியர்கள் மத்தியில மாநில வாரியா எந்த ஒரு வேறுபாடும் இல்லாம கடைப்பிடிக்கபடுற பழக்கம்ன்னு சொல்லிட்டேன்.

அதுக்கு முன்னால இருந்து பல காலமா நாம பண்ணிக்கிட்டு இருக்க ஒரு ஒற்றுமையான பழக்கம் இருக்கு, அதான் இது. யாராவது நம்ம வீட்டு வாசல்ல வந்து நின்னு இப்படி மூச்சா போனா நாம என்ன பண்ணுவோம்?

உசுரு எடுக்குறதுக்கே வராங்க!

உசுரு எடுக்குறதுக்கே வராங்க!

அதாவது முள்ள முள்ளால எடுக்குறதுன்னு சொல்வாங்கல அந்த மாதிரி... ராங்க... ராங்வேல வந்து பண்றாப்புல. பண்றதே தப்பு, இதுல பல்ல வேற காமிச்சிக்கிட்டு. அங்க தான் யாரோ போட்டோ எடுக்குறான்னு தெரியுதுல. முகத்தயச்சும் திருப்பியிருக்கலாம். இப்ப ஊரே... உலகமே உன்ன பார்த்து சிரிக்கிதே தம்பி!

அவசரம்!

அவசரம்!

காலையில கக்கா போறதுல இருந்து, ரூல்ஸ் பிரேக் பண்ற வரைக்கும் நமக்கு எல்லாத்துலயும் அவசரம் தான். கொஞ்ச நேரம் சீக்கிரம் கிளம்பலாம்ங்கிற அறிவு எல்லாம் நமக்கு வராது. ஆனா, ரூலே பிரேக் பண்ணலாம். மத்தது கூட பரவாயில்ல. ஆனா, இப்படி ரயில்வே கிராஸிங்ல ரூல்ஸ் பிரேக் பண்ணி இறந்தவங்க எண்ணிக்க ரொம்பவே அதிகம். இதுக்காக ரயில்வே போலீஸ்காரங்க நிறைய விழிப்புணர்வு பிரச்சாரமும் பண்றாங்க. ஆனா, நாமதான் அதெல்லாம் ஏத்துக்கவே மாட்டோமே.

துப்புக்கெட்ட பயலுக!

துப்புக்கெட்ட பயலுக!

ஒருவேள, துப்பாதேன்னு எழுதுற இடத்துல துப்பிட்டு போற பயலுகள தான் துப்புக்கெட்ட பயலுகன்னு நம்ம பெரியவங்க எல்லாம் சொல்லிட்டு போயிருக்காங்களோ. ஆனா, கரக்டா மேட்ச் ஆவுதுல. துப்புக்கெட்ட பயலுக...

அட பாவத்த!

அட பாவத்த!

இங்கே காலனி கழற்றிவிட வேண்டாம்ன்னு சொன்னா அங்க தான் கழட்டி விடுறோம். இங்கே பார்க்கிங் செய்ய வேண்டாம்ன்னு போர்டு வெச்சா... அங்க தான் வீம்புக்குன்னே வண்டிய பார்க் பண்றோம். இதப் பாருங்களேன். இங்கயே காலனி கழட்டிவிட்டுட்டு போங்கன்னு போர்டு வெச்சிருக்கு. ஆனா, ஒரு பய கூட செருப்ப கழட்டி வெச்சுட்டு போகல.

கின்னஸ் ரெகார்டு!

கின்னஸ் ரெகார்டு!

ஹைவே சாலைகள்ல அதிக விபத்துக்கள் ஏற்பட காரணமே இந்த மாதிரி அதிக லோடு ஏத்திட்டு போறதனால தான். ரெண்டு ட்ரிப் எடுத்தா டீசல் செலவு, பேட்டா செலவுன்னு நெனச்சுக்கிட்டு கிளப்பி விட்டுறாங்க. ஆனா, எதாவது அசம்பாவிதம் ஆச்சுன்னு போறது உசுரு சாமி. அம்மான்னா வருமா, அப்பான்னா வருமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hilarious Rules Breaks in India!

Hilarious photos where Indians prove that 'Rules' are meant to be broken.