அர்த்தம் தெரியாமல் தவறான பெயர் வைத்திருக்கும் இந்திய உணவகங்கள் - புகைப்படத் தொகுப்பு!

Posted By: Staff
Subscribe to Boldsky

இந்த ரெஸ்டாரண்ட் பெயர் பதாகைகள் எல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு ஃபிரெண்ட்ஸ் படத்துல வடிவேலு, கோபத்துல... என் உசுர எடுக்கவே வரீங்களாடா...ங்கிற... வசனம் உள்ள அசரீரியாக கேட்டுச்சுன்னா... நாம எல்லாம் ஒரே இனம் தலைவா!

ஒருத்தர் என்னனா ஜில் பீர்'ன்னு எழுத தெரியாம சைல்டு பியர்னு எழுதி வெச்சிருக்கார். இன்னொருத்தர் என்னனா, கோக்ன்னு எழுத வராம காக்னு எழுதி வெச்சிருக்காரு. இதுக்கு நடுவுல ஒரு பயபக்கி கம் (Cum) அண்ட் ஈட்னு வேற எழுதி வெச்சிருக்கு. இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்னே தெரியலையே கடவுளே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைல்டு பியர்!

சைல்டு பியர்!

சைல்டு பியர்... அதாவது குழந்தை கரடி... அதாங்க நீங்க எழுதி வெச்சிருக்கீங்க... பயபுள்ள எழுத நினைச்சது ஜில் பீர்... அதாவது கூலனா பீர். இவங்கெல்லாம் எங்கிருந்து தான் வராங்கன்னு தெரியல. நம்ம நாட்டுல மட்டும் தான் இப்படி எல்லாம் சுத்துறாங்களா? இல்ல மத்த நாட்டுலயும் இப்படியான இடியட்ஸ் இருப்பாங்களான்னு சந்தேகமா இருக்கு.

காக், கோக்!

காக், கோக்!

Cokeனா தான் கோக். நீங்கள் எழுதி வெச்சிருக்கிறது Cock, அதாவது காக். இதுக்கு சேவல்ன்னு மட்டும் பொருள் இல்ல... பாட்ஷா ரஜினி ஸ்டைலா சொல்லனும்னா இதுக்கு வேற ஒரு அர்த்தமும் இருக்கு.

கம்!

கம்!

மறுக்கா, மறுக்கா நோகடிக்கிறாங்களே. சிலர் இப்படி தான் ஷார்ட் ஃபார்ம்ல எழுதுறேன்னு, அதுக்கு இருக்க வேற பொருள் தெரியாமல் ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிடுறாங்க. இதுக்கான அர்த்தம் வேற வெட்டவெளியில சொல்ல முடியாது. அந்த இன்னொரு அர்த்தம் தெரியாதவங்க வேணும்னா கூகிள் பண்ணி பார்த்துக்குங்க.

எம்புட்டு...

எம்புட்டு...

விஸ்கி, வோட்கா, மறுக்கா ஒரு சைல்டு பீர்... (அங்க பெயின்ட் பண்ண அதே தம்பி போட்டோஷாப் படிச்சுட்டு வந்திருப்பாரு போல...) இதுல சைல்டு பீர் ஸ்ட்ராங் வேற. ஓஹோ இதெல்லாம் ஆர்டர் பண்ணதே பஞ்சாப் போலீஸ் தானாம்ல... இதுல நமக்கு தெரிஞ்ச ஒரே ஒரு உண்மை என்னனா... இந்த கிறுக்குத்தனம் ஓவர்லோடான அந்த தம்பி ஒரு பஞ்சாப் காரர்.

கே!

கே!

நம்ம நட்பு வட்டாரத்துல Guyனு டைப் பண்றத.. ஸ்டைலா Gayனு டைப் பண்ற மாமேதைகள் சிலர் இருப்பாங்கள். அதாகப்பட்டது இன்னுமே கூட பலருக்கு Gayனா என்ன? Guyனா என்னன்னு அர்த்தம் தெரியறது இல்லை. தம்பிகளா... Gayனா ஓரினச் சேர்க்கையாளர்கள். ஆணும், ஆணும் சேர்ந்து உறவாடுறதுக்கு ஆங்கிலத்துல Gay.

விக்கிறது ஐஸ் க்ரீம். பேரு Gaylord. அற்புதம்.!!!

உவாக்!

உவாக்!

உங்க கடைக்கு வரவங்க... உங்க கடை பேர பார்த்தா... எப்படி பாஸ் காபி குடிக்க வருவாங்க... கடைக்கு பெயரு வைக்கிறதுல ஒரு நியாய தர்மம் வேண்டாமா... HANDJOBங்கிறது எல்லாம் ஒரு பெயராமா...? என்னமா நீங்க இப்படி பண்றீங்களே மா...

என்னாது...

என்னாது...

வஜைனா தந்தூரி.. இந்தியன் குஷன். இதுக்கு அந்த Handjob'எ தேவையில போலவே. இவங்களுக்கு எல்லாம் இந்த பெயரு யாரு செலக்ட் பண்ணி தராங்க? செயல் தலைவருக்கு பழமொழி எழுதிக் கொடுக்கிறது போல, இதுக்குன்னு ஒரு தனி குழு அமைப்பு இருக்குமோ...

வெஜ்!

வெஜ்!

நம்மாளுங்க... பல இடத்துல பண்ற தப்பே ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான். Coke - Cock, Chill - Child, Beer - Bear, அந்த வரிசையில.. நம்ம அண்ணாச்சி Veg - Vag.

வேற லெவல்...

வேற லெவல்...

ரெஸ்டாரன்ட் பேருல டிக்'ங்கிற வார்த்தை சேர்த்தே டர்டி தான். இதுல என்ன கூடுதலா முன்னாடியே ஒரு டர்டி. இதுவரைக்கும் நாம பார்த்தது கூட ஏதோ ஐஸ் வண்டி தள்ளுரவரு, டீக்கடை வெச்சிருக்கவரு தான். நம்மாளு ஹைக்ளாஸ் போல... தரமான போர்டு எல்லாம் வெச்சிருக்காப்புல...

ஆசனமா?

ஆசனமா?

அவங்க என்ன அர்த்தத்துல அந்த பெயர வெச்சாங்கன்னு தெரியல... ஆனா, அதுக்கு ஆங்கிலத்துல ஆசனவாய்ன்னு அர்த்தம்கிறது தெரிஞ்சு வெச்சிருக்க மாட்டங்கன்னு மட்டும் தெரியுது.

WTF!

WTF!

WTFங்கிறது மோசமான வார்த்தை சுருக்கமா இருந்தாலும், அதுக்கு கீழ உணவகத்துக்கே ஏற்ப ஒரு முழு அர்த்தம் கொடுத்திருக்கிறது எவ்வளவோ பரவாயில்ல. இதைக்கூட ஏதோ ஒரு விதத்துல கிரியேட்டிவ்ன்னு ஏத்துக்கலாம். ஆனா, மத்தது எல்லாம் குழிதோண்டிப் புதைக்க வேண்டியது.

பி.டெக் சாய் வாலா!

பி.டெக் சாய் வாலா!

இவரு ஒரு இலிமினாட்டியா இருப்பாரு போல, 1960ல அப்பவே பி. டெக் படிச்சா டீ கடையில தான் வேலை செய்யணும்ன்னு கண்டறிஞ்சு தன்னோட டீ கடைக்கு பிடெக் சாய் வாலானு பெயரு வெச்சிருக்காப்புல. அந்த என்ஜினியர் ஸ்ரீகாந்த் குப்தாக்கு மெய்யாலுமே சலாம் வைக்கலாம் பாஸ். எம்புட்டு கெத்தா Er'னு முன்னால போட்டிருக்காரு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Funny Restaurant Names in India!

10+ Offensive Indian Food Items You Should Never, Ever Have With Your Parents!