For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection

இதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection

|

சிக்கல் பலவகைப்படும்... அவை பண சிக்கல், மல சிக்கல், மன சிக்கல் எக்ஸ்ட்ரா போன்றவை. இதில் அந்தந்த சூழலை பொருத்து தான் எந்த சிக்கல் பெரும் சிக்கல் என்று வரையறுக்கப்படுகிறது. எனவே, இது பெரிய சிக்கல், இது சிறிய சிக்கல் என்று எதையும் குறிப்பிட்டு கூறிவிட இயலாது.

உதாரணமாக... சாவிக் கொத்தில் சிக்கல் ஏற்பட்டு.. சரியான சாவியை தேர்வு செய்வது எல்லாம் பெரிய சிக்கலா என்று யாரேனும் கேட்கலாம்... ஆபீஸ் முடிந்து கொட்டும் மழையில் நனைந்து வரவர... பாதி வழியில் முட்டிக்கொண்டு வருவதை அடக்கவும் முடியாமல், வழியில் சாலை ஓரத்தில் ஒதுங்கவும் முடியாமல் இருக்க. வேகவேகமாக வீட்டு வாசலில் வந்து நிற்கும் போது, பேகில் இருந்து எடுத்து பார்த்தால் சாவிக் கொத்து சிக்கலாகி இருக்கும். சாவி பின்னிப்பிணைந்து கிடக்கும். அப்போது வாழ்வில் ஏற்படும் ஒரு வலி இருக்கிறதே.. அது சொல்லில் அடங்காதது.

இப்ப சொல்லுங்க.. இதுவும் கூட ஒரு பெரிய சிக்கல் தான....

இப்படியான ஒரு சில பெரும் சிக்கல்கள தான் இந்த தொகுப்புல பார்க்க போறோம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆஞ்சு ஓஞ்சு வேலை எல்லாம் முடிச்சுட்டு அக்கடான்னு நைட்டு 2, 3 மணிக்கு வந்து படுத்தா.. எப்பவும் ஒழுங்கா வராத அந்த நிம்மதியான தூக்கம்.. அன்னிக்கி தான் அசுரவேகத்துல வரும். இடியே விழுந்தாலும், வேலையே போனாலும் பரவாயில்ல.. நாளைக்காவது ஒரு 9,10 மணி வரைக்கும் அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கிடனும்ன்னு மொபைல் எல்லாம் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு தூங்குனா... சூரியன் கரக்டா 6.30க்கு எல்லாம் அலார்ம் வெச்ச மாதிரி பளீச்சுன்னு மூஞ்சியிலேயே வெயில் அடிச்சு எழுப்பி விடுவார் பாருங்க. அப்படி ஒரு கோபம் வரும். என்ன பண்ண முடியும்? முக்காடு போட்டுக்கிட்டு திரும்பப் படுத்தாலும் பின் மண்டையில சுளீர்ன்னு சுட்டெரிப்பார் சூரியன். அந்த வலி உங்களுக்கும் வாழ்க்கையில ஏற்பட்டதுண்டா?

Image Source: Reddit

#2

#2

வாழ்க்கையில பல சிக்கல் இருக்கு.. சிலருக்கு பண சிக்கல், சிலருக்கு மலசிக்கல்... ஆத்திரத்தை கூட அடக்கிடலாம்.. மூத்திரத்த அடக்க முடியாதுன்னு சொல்லுவாங்க. சில சமயத்துல ரெண்டுமே முட்டிக்கிட்டு வரும். எப்படா இந்த ட்ராபிக்ல வீடு போய் சேருவோம்ன்னு இருக்கும். அடிச்சுப் பிடிச்சு லிப்டுகாக கூட வெயிட் பண்ணாம படியில ஓடியாந்து பாக்கெட்ல இருந்து சாவிக் கொத்த எடுத்தா... இப்படி கண்ணாப்பின்னான்னு சிக்கி கிடக்கும். இப்ப சொல்லுங்க... வாழ்க்கையில பெரிய சிக்கல் எது?

Image Source: Reddit

#3

#3

முக்கியமா குளிர் காலத்துல பொண்ணுங்க முன்னாடி சில கெத்து பார்ட்டிங்கள நெளிய வைக்கிற சம்பவம் தான் இது. சிலர் நிஜமாவே தொப்பை இருந்தாலும், பஸ்ல, மெட்ரோல போகும் போது, எதிருல ஒரு அழகான பொண்ணு வந்தா... எம்புட்டு நேரமா இருந்தாலும் தம்கட்டு மூச்ச உள் இழுத்து தங்களுக்கு தொப்பை இல்லாத மாதிரி காண்பிச்சுக்குவாங்க. அப்படி என்ன தம் கட்டுனாலும்.. இதோ இப்படி உருவாகுற ஃபேக் தொப்பைய உள்ள இழுக்கவே முடியாது. இந்த ஸ்வெட்டர் தொப்பை மேட்டரே இல்லன்னாலும்... கெத்துன்னு வரும் போது... கொஞ்ச மானத்து இழுத்து வாரிப்போட்டுட்டு போயிடும்.

Image Source: Reddit

#4

#4

கண்டிப்பா எல்லாரும் கை தூக்குற தி மோஸ்ட் பெயின்ஃபுல் விஷயம் இதுவாக தான் இருக்கும். நீங்க ஆயிர ரூபா போட்டு ஒரிஜினல் சார்ஜர், ஹெட்செட் வாங்குனாலும் சரி, சிலநூறு போட்டு சைனா மேடு வாங்குனாலும் சரி... கரக்டா உபயோகப்படுத்தலன்னா இப்படி தான் அடிக்கடி அதுவே சூசைட் பண்ணிக்கும். அப்பறம் என்ன பைசா அதிகமா இருந்தா புதுசு வாங்குவாங்க... இல்லன்னா.. செல்லோடேப் சுத்தி வெச்சுக்க வேண்டியது தான் வழி!

Image Source: Reddit

#5

#5

நமக்கு எந்தெந்த பாஸ்வேர்ட் எல்லாம் தேவையே இல்லையோ அத எல்லாம் நம்ம ப்ரெயின் கரக்டா ஸ்டோர் பண்ணி வெச்சுக்கும். முக்கியமான நேரத்துல எதாச்சும் டாக்குமென்ட் தேடும் போதோ, இல்ல பணம் ட்ரான்ஸ்பர் பண்ணனும், பி.எப் பணம் செக் பண்ணனும்ன்னு லாகின் பண்ண போகும் போது தான்.. பாஸ்வேர்ட் மறந்து போகும். சரி... இனிமேலாவது மண்டையில நியாபம் வெச்சிக்கிற மாதிரி பாஸ்வேர்ட் வைக்கலாம்ன்னு போனா... பழைய பாஸ்வேர்ட் மாதிரியே இருக்கக் கூடாதுன்னும் அலர்ட் வரும். இப்படியான சூழல்ல மனுஷன் என்னதாங்க பண்ண முடியும்.

Image Source: Reddit

#6

#6

மறுக்கா அதே பிரச்சனை தான். பாஸ்வேர்ட் மறந்தா செக்கியூரிட்க் கேள்வி கேட்கும் அந்த அக்கவுண்ட்க்கு எத்த மாதிரி கேள்வி கேட்டா பரவாயில்ல... அப்பாவோட மிடில் நேம்... முதல் ஸ்கூல் டீச்சர் பேரு, பிடிச்ச ஐஸ்க்ரீம், சாப்பாடு பேரெல்லாம் கேட்டு நம்மள கடுப்பாடிப்பாங்க. இதெல்லாம் போக... நீங்களே சொந்தமா ஒரு கேள்வி எழுதி பதில் சொல்லுங்கன்னும் சிலர் சைட் கேட்கும்.. அங்க தான் பிரச்சனையே... சிலர் செக்கியூரிட்டி குவஸ்டீன் தானேன்னு கஷ்டமா எதாச்சும் எழுதி பதில் டைப் பண்ணிடுவாங்க. கடைசியில பாஸ்வேர்ட் மறந்து போய் நிக்கும் போது, அந்த கஷ்டமான குவஸ்டீன் நமக்கே கஷ்டமா போயிடும்.

Image Source: Reddit

#7

#7

ப்ளக் பாயின்ட் பக்கமா படுத்து தூங்குற ஜீவன்களுக்கு மட்டும் தான் தெரியும்... இது எம்புட்டு பெரிய கஷ்டம்ன்னு. அதுலயும் லவ் பண்ணீட்டு.. பேச்சுலர் ரூம்ல இப்படியான சூழல்ல தூங்குற ஜீவன்கள் ரொம்பவே பாவம். ரூம்லயே ஒரே ஒரு பிளக் பாயிண்டு தான் இருக்கும். அதுல ஒரு ஜங்க்ஷன் பாக்ஸ் கனெக்ட் பண்ணி வெச்சா.. ஒன்னு வை-பைக்கு போயிடும், இன்னொன்னுல வேற ஒருத்தன் சார்ஜர் போட்டு வெச்சிடுவான்.. சரி, மீதம் இருக்க ஒன்ன நாம யூஸ் பண்ணலாம்னு போனா... மத்த ரெண்டுல ஒன்னு.. இப்படி பெரிசா ஒரு ஆப்பு வைக்கும். நம்ம பயலால எழுந்து போய் வேற எங்கையாவது சார்ஜ் போடலாம்னாலும் முடியாது. சாட்டிங் டிஸ்டர்ப் ஆகும்.

Image Source: Reddit

#8

#8

ஆபீஸ்ல காலுக்கு கீழ சி.பி.யு கேபிள் சொருகி மொபைலுக்கு சார்ஜ் போடுற ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில.. இல்ல இல்ல.. வாரத்துல ஒரு முறையாவது இப்படி ஒரு அவஸ்தைய அனுபவிக்க நிறையவே வாய்ப்புகள் இருக்கு. எப்படியும் காலையில போனதும் கம்பியூட்டர் ஆன் பண்றாங்களோ இல்லையோ... மொபைல் சார்ஜர் கனக்ட் பண்ணிடுவாங்க. கிளம்பும் போது தான் தெரியும்.. நாம ரோலிங் சேர் (Chair) உருட்டுன உருட்டுல... கேபிள் ஒயர் எசகபிசக சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்குன்னு.

Image Source: Reddit

#9

#9

நம்ம ஜாதகத்துல சனி, சனின்னு ஒன்னு இருக்கு... அது ஜாதகத்துல மட்டும் தான் இருக்குன்னு நாம நினைச்சுட்டு இருப்போம். ஆனால், இப்படியான சூழல்கள்ல தான் தெரியும்.. சனியன் எந்த ரூபத்துல வேணாலும் வருவான். அவன் நமக்கு ஆப்பு வைக்கணும்ன்னு நெனச்சுட்டா எதுல வேணாலும் வைப்பான்னு.

Image Source: Reddit

#10

#10

அம்மா, சாப்பிட கூப்பிடும் போதெல்லாம் பசிக்காது, மொபைல் நோண்டிக்கிட்டே இருப்போம். அம்மா வூட்டுல இல்லாத சமயம் பார்த்து, சமையல் கட்டுல ஒண்ணுமே இருக்காத நேரமா தான் பசி உயிரை எடுக்கும். சரி! பிரிட்ஜ்ல இருக்க பழைய ப்ரெட்ல பட்டர் இல்ல ஜாம் போட்டு சாப்பிட்டு பசிய ஆத்திக்கலாம்ன்னு யோசிக்கும் போது தான், ப்ரெட் கூட இப்படி ஓட்ட உடைசலா வந்து நம்ம வாழ்க்கையில விளையாடும்.

Image Source: Reddit

#11

#11

பிரெட் அப்படிக்கா விளையாடுனா.. முட்டை இப்படிக்கா விளையாடும். ஆப்-பாயில் கூட ரவுண்டா சரியா போட்டு எடுத்துடலாம். ஆனா, பெரும்பாலான பேச்சுலர் சிங்கங்களால் முடியாத கடினமான காரியம், வேக வெச்ச முட்டைய கரக்டா ஓடு உடைக்கிறது. தரையில உருட்டி, ஸ்பூன் வச்சு தட்டி எடுத்து ஒருவழியா முட்டை ஓடு உடைச்சு பார்த்தா... அது முட்டையா இருக்காது.. நிலவுல எடுத்த போட்டோன்னு நாசா ஏதோ ரிலீஸ் பண்ண மாதிரி இருக்கும்.

Image Source: Reddit

#12

#12

லாஸ் பட் நாட் லீஸ்ட்ன்னு எப்பவுமே நாம புகழ்ந்து பேசும் போது ஒன்ன கடைசியா சொல்லுவோமே... அப்படியானது தான் இது. பேச்சுலரா இருந்துட்டு சமைக்கிறது எம்புட்டு கஷ்டமோ.. அதே மாதிரி தினமும் குளிக்கிறதும் ரொம்பவே கஷ்டம். அதுலயும் சமைக்கும் போது, டீ-ஷர்ட், பேண்ட் எல்லாம் இப்படி ஈரமாயிட்டா.. குளிக்கவும் முடியாம.. அந்த ஈரத்த சகிக்கவும் முடியாம ஒரு நசநசன்னு ஒரு ஃபீலிங் வருமே... அதவிட கஷ்டமான வலி ஒருத்தர் வாழ்க்கையில வந்துட முடியுமா?

Image Source: Reddit

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photo Collection: The Most Painful Scenario!

In our day today life, few things will hurt us more than a love failure or broken phone or deadly cancer. And there is chance, Even you may also have experienced these most painful scenario in your life. Is it Yes or no, whatever it is, just Look at these funny photo collection.
Story first published: Wednesday, July 18, 2018, 14:23 [IST]
Desktop Bottom Promotion