For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லாரும் விவகாரம் பிடிச்ச பயலுகளாவே இருப்பாங்க போல.. இப்படியா கடைகளுக்கு பேரு வைக்கிறது!

By Staff
|

நம்ம ஊருல பெயர் வைக்கிறதுங்கிறது பெரிய விஷயம். வெளிநாடுல எல்லாம், ஒய்ட்டு, ரைட்டுன்னு வாயில வந்த வெச்சிடுவாங்க. நம்மாளுங்க அப்படி இல்ல, நியூமராலஜி பார்க்கணும், ராசி நட்சத்திரம் பார்க்கணும், பிறந்த நேரம், பிடிச்ச சாமி, தாத்தா, பாட்டி பெயர், குடும்ப பெயர்ன்னு இதெல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு பெயரு வைக்கணும்ன்னு அடம் பிடிப்பாங்க. இதுல யாராவது ஒன்னு ரெண்டு பேருக்கு பெயரு பிடிக்காட்டி அம்புட்டு தான்.

குழந்தைக்கு பெயரு வைக்கிறதுல மட்டுமில்ல கடைகளுக்கு பெயர் வைக்க கூட இதெல்லாம் பார்ப்பாங்க நம்மாளுங்க. ஆனாலும், இந்தியர்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம் தான். இதோ! சிலர் கிரியேட்டிவா பெயர் வைக்கிறேன்னு சொல்லிட்டு எப்படி எல்லாம் பெயர் வெச்சிருக்காங்க பாருங்க..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சரிப்பா அவங்களே அந்த கோழிய எப்படி உருவாக்குறாங்க.. அது உடம்புக்கு கேடா, நல்லதான்னு பல விவாதம் போயிட்டு இருக்கு அதப்போயி காபி அடிக்கனுமா... அதுவும் சர்தாருங்க எல்லாம் உழைப்புக்கு பெயர் போனவைங்க... அவங்கள பேருல இப்படி ஒரு கடையா... சர்தார் ஃபிஷ் அன்ட் சிக்கன்... சரி! என்ன பண்றது எல்லாரும் ஊரோட ஒத்து வாழவே நினைக்கிறாங்க. யாரு புதுசா யோசிக்கிறாங்க.. அப்படி யோசிச்சா முட்டா பயன்னு சொல்லிடுறாங்க.

#2

#2

ஏம்பா தம்பி... அந்த மனுஷன் எம்புட்டு அவார்டு வாங்கியிருக்காரு. அதுக்கு மேல ஏஞ்சலினா ஜூலியா காதலிச்சு கல்யாணம் பண்ணி விவாகரத்து வேற வாங்கியிருகாரு... பிராட் பிட் பெயர... இப்படி ப்ரெட் விக்க எல்லாம் பயன்படுத்துறது நல்லாவா இருக்கு. என்னமோ போங்கப்பு...!

#3

#3

அடடே! இத ஏம்பா கிண்டல் பண்றீங்க... கரக்டா தான இருக்கு... அ... ண்.... ட.... ர்ர்ர்.... அண்டர்.... இதப்போய் தப்பு சொல்லிக்கிட்டு... நீங்க நல்லா கடைய நடத்துங்க தம்பி... யாரு என்ன கேட்குறாங்கன்னு பார்த்துதிடலாம்....

#4

#4

புக்குன்னு பெயரு வந்ததால புத்தக கடைக்கு பெயரா வெச்சுட்டாரு போல அண்ணாச்சி. நம்மாளுங்க விநாயகர் சதுர்த்தி அன்னிக்கி ஃபேஸ்புக் விநாயகர் கட்டி கும்பிட்டவங்க.. இதெல்லாம் எம்மாத்திரம். நடக்கட்டும், நடக்கட்டும்... ஊரு உலகம் முழுக்க உம்மை கேலி, கிண்டல் செய்து சிரிக்கட்டும்.

#5

#5

கரக்டு தான.. இதவிட சிறப்பா ஒரு மருந்தகத்திற்கு யாரால பெயரு வைக்க முடியும்... டாக்டர் மருந்து சீட்டு எழுதி கொடுத்தா தானே நீங்க மருந்து கடைக்கே போவீங்க... அப்ப டாக்டர்ன்னு பெயரு வைக்கிறது தான் உத்தமம், சிறப்பு.... அத்தான் நமம்வரும் பண்ணியிருக்காரு... நல்லா வருவீங்க தம்பி நீங்கெல்லாம்...

#6

#6

மறுக்கா ஃபேஸ்புக்... இல்ல, இல்ல ஒட்டுமொத்த சோஷியல் மீடியா... ஆமா அங்கென்ன சைடுல பிங்க் கலர்ல ஏதோ... ஓ! ஆர்குட்டா... தம்பி இப்படி ஒரு பிராடக்ட் இருந்ததா... கூகுளே மறந்துட்டாங்க... ஷட்டவுன் பண்ணிட்டாங்க. ஒருவேளை பையன் 90ஸ் கிட் போல... சிறப்பு! சிறப்பு!! 90ஸ் கிட் பயன்படுத்துன முதல் சோஷியல் மீடியா அல்லவா ஆர்குட்.

#7

#7

கூகுளையே ஒரு இந்தியன் தான் தலைமை தாங்கி நடத்திக்கிட்டு வராரு. இங்க என்னடான்னா கோலா விக்குறதுக்கு எல்லாம் கூகுள பிடிச்சு இழுத்து விளையாடிக்கிட்டு இருக்காங்க.. இதுல சர்ச் பார்ல டிஸ்க்ரிப்ஷன் வேற... அடடே லெவல் இதெல்லாம். அந்த டிசைனருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்ப்பா....

#8

#8

என்ஜினியர் படிச்ச டீ மாஸ்டர்... இல்ல இல்ல கடை முதலாளி போல... படிச்ச படிப்ப ஒரு காலமும் மறக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.. நம்மாளு படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலனாலும்... படிப்ப, பட்டத்த மறக்க கூடாதுன்னு கடைக்கு பெயரா வெச்சுட்டப்புல போல.... மகிழ்ச்சி!

#9

#9

எதையும் விட்டு வைக்கிறதா இல்ல போல... ஃபேஸ்புக், ஆர்குட், கூகுள், பிராட் பிட், இதோ மெக் டி... முர்க் டொனால்ட்ஸ்... நம்ம ஊருல நோலன் படத்த திருடி படமா எடுக்குறார்ன்னு ஒருத்தர முருகப்பா நோலன்ன்னு கூப்பிடுவாங்க.. அந்த மாதிரி இருக்கு இந்த முர்க் டொனால்ட்ங்கிற பெயரு....

#10

#10

உங்க கடை பெயரு என்ன தம்பி...

சொல்ல மாட்டேன்...

அட சொல்லுங்க தம்பி... துணி எல்லாம் நல்லா இருக்கு ஃபிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி விடலாம்ன்னு இருக்கேன்...

அட சொல்லமாட்டேனுங்க...

என்ன தம்பி எப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்.. கடை பெயரு தான கேட்டேன்.

அதாங்க சொல்ல மாட்டேன்...

யப்பா சாமி.. இப்படி எல்லாம் கடைக்கு பெயரு வைக்க எங்கிருந்த தான் யோசிக்கிறாங்களோ...

#11

#11

போதுமடா சாமி... இனியும் முடியாது.. வாட்ஸ்-அப்... இருக்குற எல்லா சோஷியல் மீடியா பெயரையும் கடைக்கு பெயரா வெச்சுட்டாங்க... இனிமேல் மியூசிக்லி, டப்ஸ்மேஷ்ங்கிற பெயரு மட்டும் தான் பாக்கி இருக்கு. அதையாவது விட்டு வைங்க....

#12

#12

இதென்னடா நாசாவுக்கு வந்த சோதனை. சாப்பாட்டு கடையா... இல்ல ஸ்நாக்ஸ் கடை.. இதுக்கும் நாசாவுக்கும் என்னடா சம்மந்தம்... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா... இரக்கமில்லாம பெயரு வெச்சிருக்கீங்க... பெரிய ஆராய்ச்சி மையம்... நாசா ஃபுட் செண்டராம்... ! ஹ்ம்ம்..! இதெல்லாம் அந்த ஊரு காரணம் வந்து பார்த்தா என்ன நினைப்பான்...

#13

#13

கடைசியா பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூட விட்டு வைக்கல நம்மாளுங்க... முன்னாடி ஒரு எச். சேர்த்து ஹேர் வேஸ் ஆக்கிட்டாங்க. முடி வெட்டுற சலூனுக்கும், மேல பறக்குற விமானத்துக்கும் எப்படி ஒரு தொடர்பு உண்டாக்கி இருக்காங்க பாருங்க! நீங்களே சொல்லுங்க இவங்க எல்லாம் விவகாரமான ஆளுங்க தான!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Indian Shop Name Boards

Very Funny Indian Shop Name Boards, Which resembles international brands and celebrities!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more