For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த முன்னறிவிப்பும் இன்றி காவிரி நீருக்காக ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதம் - ஃபிளாஷ்பேக்!

எந்த முன்னறிவிப்பும் இன்றி காவிரி நீருக்காக ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதம் - ஃபிளாஷ்பேக்!

By Staff
|

தமிழகத்திற்கு 205 டிஎம்சி என்ற அளவில் காவிரி நீரை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என 1991ம் ஆண்டு காவிரி நீர் நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உத்தரவிட்டு இரண்டாண்டு காலம் கழிந்தும் கூட அன்றைய கர்நாடக அரசு எப்போதும் போல நீர் தர மறுத்து வந்தது.

கர்நாடக அரசின் மெத்தனத்தைக் கண்டித்தும், அரசியல் சட்டத்தின் 256வது விதியின் கீழ், காவிரி நீர் பங்கீடு காவிர் நடுவர் மன்ற தீர்ப்பை உடனே அமல்ப்படுத்த மத்திய ஆட்சியில் இருக்கும் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் என்று கூறி எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி மெரீனா கடற்கரையில் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார் அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எம்ஜிஆர் சமாதி!

எம்ஜிஆர் சமாதி!

தான் இன்று காவிரி நீர் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று ஜெயலலிதா யாரிடமும் கூறவில்லை. கட்சியினர் ஒருவருக்கும் ஜெயலலிதா இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று தெரியாது.

ஜூலை 18, 1993 அன்று பகல் 9.15 மணியளவில் எம்ஜிஆர் சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா, சுட்டெரிக்கும் வெளியிலில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் துவங்கிவிட்டார்.

Image Source: Twitter

பீதியில் அமைச்சர்கள்!

பீதியில் அமைச்சர்கள்!

யார் ஒருவரிடமும் தான் இப்படி உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று கூறாமல் ஜெ திடீரென மெரினாவில் கொளுத்தும் வெளியிலில் அமர்ந்திருப்பதை அறிந்த அரசு அதிகாரிகள், அதிமுக கட்சி உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடித்துப் பிடித்து மெரீனா கடற்கரைக்கு ஓடிவந்தனர். ஒருபக்கம் மக்களுக்கு ஆச்சரியம் மற்றொரு பக்கம் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.

Image Source: India.com

பந்தல்!

பந்தல்!

உண்ணாவிரதம் ஆரம்பித்த முதல் ஓரிரு மணிநேரம் ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதி அருகே மொட்டை வெளியிலில், வெறும் தரையில் தான் அமர்ந்திருந்தார். உடனே, கட்சியினர், அதிகாரிகள் பந்தல் போட்டு, மேடை அமைத்து, மெத்தை, ஏர் கூலர் என சகல வசதிகளும் செய்து வைத்தனர்.

தனது முதல்வர் பணியை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தவாறே செய்து வந்தார் ஜெயலலிதா. கோப்புகள் பார்ப்பதும், அரசு அதிகாரிகளை சந்திப்பதும் என அரசு மெரீனா கடற்கரையில் ஓரிரு நாட்கள் இயங்கின.

MOST READ: இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்...!

கவர்னர் இல்லை!

கவர்னர் இல்லை!

அன்றைய கவர்னர் சி ரெட்டி என்பவர் ஜெயலலிதா உண்ணாவிரதம் துவங்கிய நாளன்று தமிழகத்தில் இல்லை. அவர் ஏதோ வேலை விஷயமாக புதுச்சேரி சென்றிருந்தார். அவருக்கு உடனே தகவல் கூற, அவரும், வேக வேகமாக சென்னை நோக்கி புறப்பட்டார்.

மெரினாவில் ஜெ.,வை நேரில் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேசினார் கவர்னர். உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால், தமிழகத்திற்கு காவிரி நீர் வரும்வரை நான் உண்ணாவிரதம் கைவிட மாட்டேன் என்று விடாப்படியாக கூறிவிட்டார் ஜெயலலிதா.

Image Source: madrasitekwani

உடல்நலம் மோசம்!

உடல்நலம் மோசம்!

நாள் ஜூலை 20. மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் ஜெயலலிதா. கொஞ்சம், கொஞ்சமாக அவரது உடல்நலம் மோசமடைய ஆரம்பமானது. மருத்துவர் குழு அருகிலேயே இருந்து அவரை கண்காணித்து வந்தது.

மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி ஜெ.,வை கேட்டுக் கொண்டனர். ஒருபக்கம் பதட்டம் அதிகரித்து கொண்டே போக, பிரதமர் நரசிம்மராவ் ஆலோசனை கூட்டும் கூட்டுகிறார்.

Image Source: Facebook

சுக்லா வருகை!

சுக்லா வருகை!

ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் வி.சி.சுக்லா தென்னிந்தியா விரைந்தார். ஜூலை 21ம் நாள் நான்காவது நாளாக ஜெவின் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

முதலில் கர்நாடக முதல் அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து பேசி பிறகு, அடுத்த நாள் சென்னை வந்து ஜெவை மெரினாவில் சந்திக்கிறார் சுக்லா.

வெற்றி!

வெற்றி!

ஜெ., விடம் காவிரி நீர் பங்கீடு சார்பாக இரண்டு கமிட்டிகள் அமைத்து சரியான முடிவு எடுக்க, நீர் பங்கீடு கண்காணிக்கப்படும் என கூறு உறுதி அளிக்கிறார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் வாக்கை ஏற்று அன்று மாலை உண்ணாவிரதத்தை பழச்சாறு பருகி கைவிடுகிறார் ஜெ.

Image Source: Front line

MOST READ: யாரா இருந்தாலும் பிறப்புறுப்புகளில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிட்டு தூங்குங்க... ஏன் தெரியுமா?...

காவிரி தாய்!

காவிரி தாய்!

எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி ஜெ., நடத்திய இந்த உண்ணாவிரதம் காரணமாக காவிரி நீர் குறித்த முடிவு அன்று எடுக்கப்பட்டதையோட்டி ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா ஒன்று நடத்தி அதில், அவருக்கு காவிரி தாய் என்ற புகழாராம் சூட்டுகிறார்கள். இது காவிரி பிரச்சனை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக காணப்படுகிறது.

ஆனால்.., வரலாறு இதுமட்டுமல்ல...

ஆனால்.., வரலாறு இதுமட்டுமல்ல...

ஜெயலலிதா எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உண்ணாவிரதம் துவங்கிய அதே நேரத்தில், அதிமுக கட்சி ஆட்கள், தமிழகம் எங்கிலும் கலவரம், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர், வெளியூர், வேலைக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

அடித்து நொறுக்கினர்!

அடித்து நொறுக்கினர்!

ரயில்கள், பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது ரயிலில் பயணம் செய்யவிருந்த ஒரு முதிய தம்பதியினர் மிகவும் அவதிப்பட்டனர் என்ற செய்தி தொகுப்பு அன்றைய தினமணி நாளேட்டில் வெளியானது. ஜெயலலிதா நான்கைந்து நாள் உண்ணாவிரதம் இருந்து வெற்றிக் கண்டார் என்ற போதிலும், பொதுமக்கள் மிகுந்த இடையூறுக்கு ஆளாகினர் என்பது வரலாற்றில் பெரிதும் யாரும் பேசாத உண்மை.

இன்று!

இன்று!

அதே அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்தை நடத்தியுள்ளது. உண்ணாவிரதத்தில் உணவு இடைவேளை வைத்த ஒரே கட்சி அதிமுக தான் என்று சமூக தளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

மிக்சரும், பிரியாணியும் உண்டு உண்ணாவிரதம் இருந்து காவிரி பிரச்சனையின் மக்களின் உணர்வை இவர்கள் கொன்று, கொச்சைப் படுத்தியுள்ளனர் என்பதே உண்மை.

நல்ல தீர்ப்பு காவிரிக்கு மட்டுமல்ல, வரும் தேர்தலிலும் வர வேண்டும் என்பதே மக்களின் ஆசை!

MOST READ: நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு படுங்க... ஒரே மாசத்துல 15 கிலோ சரசரனு குறைக்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: india இந்தியா
English summary

Flashback: Jayalalitha Protested for Cavery Water Issue Without Any Prior Information in 1993!

Flash Back: Former Chief Minister of Tamilnadu Late Jayalalitha's Fasting Protest for Cavery Issue in 1993!
Desktop Bottom Promotion