Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
மூன்று நாடுகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பங்கேற்ற ஒரே இந்தியப் பெண்!
அண்டார்டிகாவில் வாழ்ந்த பெருமை கொண்ட முதல் பெண் ஆராய்ச்சியாளர்.
மங்களா மணி. இதுவரை யாரும் வாழ்ந்திடாதா அண்டார்டிகா பகுதியில் கிட்டத்தட்ட 403 நாட்கள் வரை வாழ்ந்திருக்கிறார். அங்கே சராசரியாகவே -90 டிகிரி செல்சியசில் தான் தட்பவெட்ப நிலை இருக்குமாம். தற்போது 56 வயதாகும் மங்களா பெண்களுக்கு எல்லாம் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்திருப்பதோடு எல்லாருக்கும் புதிய வழியை காண்பித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இஸ்ரோவில் முதல் பெண் விஞ்ஞானி மங்களா. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரோவிலிருந்து 23 பேர் கொண்ட ஆராய்ச்சியாளர் குழு பாரதிக்கு பயணிக்கிறார்கள். இந்த பாரதி என்பது அண்டார்டிகா பிரதேசத்தில் ஆராச்சியாளர்கள் நிறுவிய ஆராய்ச்சி கூடம் தான் இது. 23 பேர் கொண்ட குழுவில் 22 பேர் ஆண்கள் மங்களா மட்டும் ஒரேயொரு பெண்.

#1
மங்களாவும் அவரது குழுவினரும் அண்டார்டிகா பகுதியில் இருக்கும் ஆராய்ச்சி கூடத்திற்கு செல்வதற்கு முன்னால் எல்லாருக்கும் மன மற்றும் உடற் தகுதியை பார்க்கிறார்கள். மங்களாவிற்கு தில்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழு உடற்பரிசோதனை நடத்தப்படுகிறது. அதற்கடுத்து உத்தர்கண்ட் மாநிலத்தில் இருக்கும் சமோலி என்ற மாவட்டத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அது முடித்து வந்ததும் பத்ரிநாத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கெல்லாம், எத்தகைய தட்டவெட்பங்களை அவர்களால் தாங்க முடிகிறது என்று சோதிக்கப்பட்டது.

#2
பள்ளிப்பருவத்தில் இருந்தே டெக்னிகலாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். அப்போது மார்ஸ் கிரகத்தைப் பற்றிய ஒரு செய்தி செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. அதை படித்ததிலிருந்து விண்வெளி எப்படியிருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
நாம் விண்வெளி ஆராய்ச்சியாளராகவேண்டும் என்ற முடிவினை எட்டியிருக்கிறார்

#3
ரேடியோ அப்ராட்டஸ் துறையில் நான்கு வருட டிப்ளமோ படிப்பில் சேர்ந்திருக்கிறார். ரஷ்ய பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நடத்தப்படும் இந்த கோர்ஸில் ஒரு வருடம் இன் ப்ளாண்ட் ட்ரைனிங் செல்ல வேண்டும். அப்படி சென்ற பேட்சில் இவர் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருந்திருக்கிறார். மொத்தம் சென்ற 80 பேரில் 79 பேர் ஆண்கள்.

#4
இந்த கோர்ஸ் முடித்த பிறகு ஹிந்துஸ்தான் எரோநாட்டிக்ஸில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். அப்போது தான் இஸ்ரோவிலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. கலந்து கொண்டார், மூன்றே வாரங்களில் பணியானை வழங்கப்படுகிறது.
ஆனால் வீட்டில் பயங்கர எதிர்ப்பு, ஒரு பெண் நீ எப்படி அவ்வளவு தூரம் தனியாக சென்று வேலை செய்வாய் என்று இஸ்ரோவில் பணிக்குச் சேர அனுமதிக்கவேயில்லையாம்.

#5
தொடர்ந்து இவர் உறுதியாக இருந்திருக்கிறார் அதோடு டி.எஸ்.பியாக இருக்கும் உறவினர் ஒருவரும் அட்வைஸ் கொடுக்க பெற்றோர்கள் சம்மதித்திருக்கிறார்கள். இப்படி பல போராட்டங்களை கடந்து சமீபத்தில் அண்டார்டிக்காவில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் வரையில் வசித்த பெண் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
உடற்தகுதி இருக்கிறதா என்பதை சோதிக்க பயங்கரமான குளிர் பிரதேசங்களுக்கு எல்லாம் ட்ரக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள்.

#6
அதே நேரத்தில் அங்கு எடுத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பீர்கள் உடல் ரீதியாக எப்படி நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எல்லாம் விரிவான பாடம் எடுக்கப்பட்டிருக்கிறது.

#7
எங்கு பார்த்தாலும் ஐஸ்.... கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஐஸ் குவியல் தான், ஃபேண்டஸி உலகத்தின் காட்சிகளாக இருந்தாலும் இன்னும் சில காலங்கள் இங்கே தான் என்று தீர்மானமாகிறது. அண்டார்டிகாவிற்கு சென்று 15 நாட்கள் வரை அந்த கால சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளவே நேரம் பிடித்திருக்கிறது.

#8
செல்வதற்கு முன்னால் இவர்களுக்கு மிக முக்கியமாக சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று இருக்கிற பொருளை எப்படி பாதுகாப்பது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு அந்த இடத்தினை சுத்தமாக வைத்திருக்கவும் எவ்விதமான மாசு ஏற்படுத்தாமல் முடிந்தளவு தவிர்க்கவும் செய்ய சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவர்களது பாரதி ஸ்டேஷன் அமைந்திருக்கும் இடமும் அதற்கு சுற்றுப் புறத்திலும் பாதுகாப்பு நடைமுறைகளை, சுற்றுப்புறத் தூய்மை குறித்து அதிக கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

#9
மக்கும் மக்கா எல்லா குப்பைகளையும் அங்கிருந்து எடுத்து வந்திருக்கிறார்கள். உணவுக்கழிவுகள், மனிதக் கழிவுகள், டின்,ப்ளாஸ்டிக் பேப்பர்கள்,உட்பட எல்லாவற்றையும் எடுத்து வந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். தினமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த வேலையை செய்ய வேண்டும். கூடவே ரொட்டீன் முறையில் சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கும்.

#10
அண்டார்டிகாவில் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்தும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. எங்களுக்கு ஆய்வு மேற்கொள்ள மட்டுமின்றி பொழுது போக்கவும் செய்தோடும். இந்தியா சீனா ரஷ்யா மூன்று ஸ்டேஷன்களிலிருந்தும் சேர்ந்து விளையாட்டு போட்டிகள் எல்லாம் நடத்தப்பட்டது.
அந்த மொத்தக் கூட்டத்தில் நான் மட்டுமே தான் பெண். சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து எந்த பெண் ஆராய்ச்சியாளரும் வரவில்லை.



Click it and Unblock the Notifications











